- நாம் பல இலக்குகளோடு வாழ்கிறோம்
- எதிர்பார்ப்புகளோடு நகர்கின்றோம்
- சாதனைகள் புரிய வேண்டும் என்று ஆசைப்படுளின்றோம்
- தைரியான மனோநிலையுடன் முன்செல்ல வேண்டும் என எதிர்பார்க்கின்றோம் அப்படி இருக்கும் போது
- சிலசமயம் பல தோல்விகளை சந்திக்க நேரிடுகின்றோம்
- பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்கின்றோம்
- தடங்கள்களை காண்கின்றோம்
இதனால் கவலையும் சிலசமயம் வெறுப்பும் ஏற்பட்டு ஏமாந்து போய் முயற்சியை இடையில் நிறுத்தி விடுகிறோம். எல்லாம் முடிந்துவிட்டதே என்று நொந்து போகின்றோம்.
வாழ்கை பாதையில் முன்னோக்கி செல்லும்போது தோழ்விகள், பின்னடைவுகள், தடங்கள்கள், தவறுகள் என்பன ஏற்படுவதை தவிர்க்க முடியாது. இவற்றிட்கு முகம்கொடுத்து முன்னேருபவன் பலசாளியாக இருப்பான். முகம்கொடுக்க முடியாமல் முடங்கிப்போகின்றவன் ஏமாளியாக இருப்பான். பலவீனமானவனாக இருப்பான் எமது எதிர்பார்ப்புகள் மற்றும் இலக்குகளை அடையவும் அவ்வாரே ஆசைப்படும் விடயங்களை அடைந்துகொள்ளவும் எமக்கு முக்கியமாக தேவைப்படுவது என்ன என்பதை நாம் கட்டாயமாக தெரிந்துகொள்ள வேண்டும். பின்வரும் சிறிய சிந்தனையின் மூலம் அதை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
1 அடி அகலமும், 2 அங்குலம் கணதியும், 12 அடி நீளமும் கொண்ட மிகவும் உறுதியான பலகையொன்றை கற்பனை செய்துகொள்வோம். அது அப்படியே பூமியோடு சேர்த்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப்பலகையில் உங்களுக்கு நடந்து செல்ல முடியுமா?
பூமியிலிருந்து வெறும் இரண்டு அங்குலம் மட்டுமே உயரமான இந்தப்பலகையில் நடக்க முடியாதவர் எவரும் இருக்க மாட்டார் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதியாகவே நம்புவோம். அது பூமியின் மேல் நடப்பது போன்றே இருக்கும். அதில் நடக்கும் போது விழுந்து விடுவேன் என்ற பயம் எவருக்கும் வந்து விடாது. எந்த ஒருவருக்கும் இந்தப் பலகையின்மேல் நடக்கவும், விரும்பினால் ஓடிச்செல்லவும் முடியும். பலகையின் மேல் நடக்க முடியும் என்று மனதால் நினைப்பதாலும் அதை செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறப்பதாலும் உங்களால் அதன்மேல் நடந்து போக அவகாசம் கிடைக்கிறது.
நாம் இந்த சந்தர்ப்பத்தை இப்போது வேருவிதமாக நோக்குவோம். 15 மாடிகள் உயரமான இரண்டு கட்டிடங்கள் 10 அடி தூரத்தில் ஒன்றிற்கு ஒன்று எதிராக இருப்பதாக நினைத்துப்பாருங்கள். வெரும் தரையில் இருந்த இந்த 12 அடி நீள பலகையை இந்த இரண்ட கட்டிடங்களின் உச்சியில் வைத்து ஒரு பாலம் அமைக்கப்பட்டிருக்கிறது என்று எண்ணிக்கொள்வோம். பலகையின் இரண்டு பக்கங்களும் இரண்டு கட்டிடங்களில் இருக்கமாக இணைக்கப்பட்டு அது சரியாக பூமிக்கு சமாந்தரமாக வைக்கப்பட்டிருக்கிறது.
முதலில் பூமியோடு ஒட்டி இருந்த பலகை இப்போது 150 அடி உயரத்தில் இருக்கிறது. நீங்கள் ஒரு கட்டிடத்தின் உச்சிக்கு ஏறி பலகையி மருமுனையில் இருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது இந்தப் பலகையின் மேழ் 10 அடி தூரம் நடந்து சென்று அடுத்த கட்டிடத்தை அடைய வேண்டும். உங்னளால் இதை செய்ய முடியுமா? 150 அடி உயரத்தில் இருந்து கொண்டு கீழே பார்க்கும் உங்களுக்கு எப்படி இருக்கும். தப்பித்தவறி கீழே விழுந்து விட்டால் முடிவு மரணமாகக் கூட இருக்கலாம்.
நீங்கள் பூமியில் இருந்த நிலையைக் காட்டிலும் முழுமையான வித்தியாசத்தோடு இப்போது மேலே இருக்கிறீர். ஆனால் பலகை கணதியிலும் நீளத்திலும் உறுதியிலும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அப்படியே இருக்கிறது. உங்களை சுமப்பதற்கு அந்தப் பலகைக்கு எந்தச் சிரமமும் இல்லை. நீங்கள் இந்த பயனத்தை செல்வீர்களா? சிந்தித்துப்பாருங்கள். கொஞ்சம் கூட பயமின்றி வெறும் 10 அடித் தூரத்திலுள்ள அடுத்த கட்டிடத்திற்கு மாற முடியுமா?
1000 அடிக்கு மேலும் நீர் வீழ்ச்சிகளுக்கு மேலாகவும் இரண்டு மலைகளுக்கு மத்தியிலும் இருக்கமாக கட்டப்பட்ட கம்பியில் நடந்து சாதனை படைத்த மனிதர்கள் பற்றி நாம் கேள்விப்பற்றிருக்கிறோம். உயரத்தைப் போன்று நீளமும் கூடுதலாக உள்ள இந்தக்கம்பி காற்றுக்கு அசைந்து ஆடும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் நீங்கள் இருக்கும் கட்டிடம் அவ்வளவு உயரம் இல்லாமல் காற்றுக்கு ஆடி அசையும் தன்மை அற்றதாகவும் இருக்கிறது. அதுவும் பலகை. உறுதியாகவும் நிலையானதாகவும் பொருத்தப்பட்டிருக்கிறது. குரங்குகள் இந்தப்பலகையில் பாய்ந்து மிக இழகுவாக அடுத்த பக்கம் சென்றுவிடும்.
உங்களுக்கும் இந்தப்பலகையில் நடந்து செல்ல முடியும். எப்படி? ஆனால் அதற்கு ஒரு தகைமை இருக்க வேண்டும். அதுதான் இதைச்செய்ய முடியும் என்கின்ற மனபலமும் எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அடுத்த பக்கம் போக முடியும் என்ற நம்பிக்கையும் ஆகும். இந்த இரண்டும்தான் உறுதியான தீர்மானத்தை எடுப்பதற்கு எமக்கு அத்திவாரமாக அமைகிறது.
எந்த ஒரு நல்ல விடயத்தை அல்லது ஒரு இலக்கை அடைய வேண்டுமாயின் ‘அடைவேன்’ என்கின்ற மனபலமும் ‘முடியும்’ என்கின்ற நம்பிக்கையும் கட்டாயம் தேவை. இந்த இரண்டும் உருவாகாதவரை எதையும் ஒரு போதும் அடைய முடியாது. ஆனால் அடைவேன் என்ற மனபலம் எவ்வளவு உறுதியாக இருந்தாலும் ஒன்றை அடைவதற்கான நம்பிக்கை இல்லாவிட்டால் ஒரு போதும் அதை அடையவே முடியாது. எமது எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. நம்பிக்கையின் அடிப்படையில் தான் எதிர்பார்ப்புகளுக்கும் இலக்குகளுக்கும் உயிர் கிடைக்க ஆரம்பிக்கிறது.
நம்பிக்கை இல்லாமல் ஒரு இலக்கை அடைய முயற்சித்தால் என்ன நடக்கும்? அது வெற்றியில் முடியுமா? இவை இரண்டும் இல்லாவிட்டால் பயம், அச்சம், அவநம்பிக்கை போன்ற உணர்வுகள் சேர்ந்து முன்னோக்கிச்செல்ல விடாமல் எங்களை தடுத்துவிடும். அப்போது ‘அடைய முடியாது’, ‘செய்ய முடியாது’ என்ற எண்ணத்தை மனதில் உருவாக்கிவிடவும் செய்யும்;.
‘அடைய முடியும்’ ‘செய்ய முடியும்’ என்று எண்ணுகின்ற எதையும் அடையவும் முடியும், செய்யவும் முடியும். ‘இயலயாது என்று ஒன்றும் இல்லை. இயலும் என்று நினை, முடியும் என்று நினை என பலர் சொல்வதை நாம் அடிக்கடி கேட்கிறோம். எதிர்பார்ப்பு எத்தனை இருந்தாலும் “செய்ய முடியாது” என்று எண்ணுகின்ற எதையும் ஒரு போதும் செய்யவே முடியாது. “அடைய முடியாது” என்கின்ற எண்ணம் அடைய முடியாமலாகவே ஆக்கிவிடும்.
- நீங்கள் உங்கள் மீது நம்பிக்ககை வையுங்கள்
- சுற்றியுள்ள உலகம் மறைவான சக்தி மீதும் நம்பிக்கை வையுங்கள்
- உங்கள் எண்ணங்களுக்கு உயிரும் உட்சாகமும் சக்தியும் தரக்கூடிய நம்பிக்கை மீது நம்பிக்கை வையுங்கள்
- அடைய முடியாது என்று ஒருபோதும் எண்ண மனதிற்கு இடம் கொடுக்காதீர்கள்
- உங்களை உறுதியாக நம்புங்கள்
- உங்களை நீங்கள் நம்பாவிட்டால் வேறு யார் நம்புவது?
- உங்கள் திறமைகளை நீங்கள் நம்பாவிட்டால் நீங்கள் நம்பிக்கை அற்றவராக ஆகிவிடுவீர்கள்
- நம்பிக்கை என்பது கடையில் அல்லது சந்தையில் வாங்கும் பொருள் அல்ல. அது உங்கள் உள்ளே இருந்து ஆற்றல்களாக,
- ஆக்கவளமான செயற்பாடுகளாக வெளியே வரவேண்டியுள்ளது. அது மனிதராக பிறந்த எல்லோரிடமிருந்தும் ஏதோ ரூபங்களில் வெளிவர முடியும் என்று நம்புங்கள்
- படித்தவர்களால், அறிஞர்களால், பிரபலமானவர்களால் மட்டுமே ஒன்றை அடைய முடியும் என்றோ ஒன்றை வெற்றிகொள்ள முடியும் என்றோ எண்ண வேண்டாம். வெற்றி என்பது புத்திசாலிகளின் சொத்தல்ல. அது முன்னேரத் துடிக்கும் உழைப்பாளிகளின் சொத்து, அது தன்னம்பிக்கையின் சொத்து என்று ஹிட்லர் சொன்னதை நினைவல் கொண்டு வருவோம்
- நீங்கள் உறுதியாகவும் தீர்மானமாகவும் நினைக்கும் ஒரு விடயத்தை நீங்கள் எப்படி நினைக்கின்றீர்களோ அதை அப்படியே முடித்து விட்டால் அதுதான் வெற்றி. வெற்றிக்கு அளவுகோல் ஏதும் கிடையாது
நிங்கள் தீர்மானமாக நினைத்து அடைந்த பல சிறிய விடயங்களை மீட்டிப்பாருங்கள். பல வெற்றிகளை நீங்கள் கண்டிருப்பதை எண்ணி ஆச்சரியப்படுவீர்கள்! விழுந்தாலும் எழுந்து நின்று வெற்றியின் கொடியை கைகளில் சுமந்து கொள்வீர்கள்.