கல்வி என்பது மனித வளர்ச்சியின் அடிப்படை காரணிகளில் ஒன்றாகும். ..
கல்வி மனிதனின் அறிவையும் திறமையையும் வளர்த்து நடத்தையை அழகாக்கி சமூக உறவை வளர்த்து அவனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ளவனாக மாற்றம் அடையச் செய்கிறது
• கல்வி மனிதர்களின் உற்பத்தித்திறனையும் படைப்பாற்றலையும் உயர்த்துகிறது
• சமூக முன்னேற்றத்தைப் பாதுகாக்க துணைசெய்கிறது
• தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது
• பொருளாதார விருத்தியில் அடிப்படை பங்காற்றுகிறது
• வருமான விநியோகத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது
• சவால்கள் மற்றும் தடைகளை எதிர்கொள்ள உதவுகிறது
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது அந்நாடு பிள்கைளுக்கு வழங்கும் முறையான ஆரம்பக் கல்வியில் சார்ந்திருக்கிறது. பிள்ளைக்கு கிடைக்கும் ஆரம்பகால அழகான அனுபவங்களையும் வழிகாட்டல்களையும் அதன் எதிர்கால வெற்றிக்கான அத்திவாரமாக கருதலாம்.
மகிழ்சிசியான ஆரம்பமும் அழகான அங்கீகாரமும் இயக்கமுள்ள வகுப்பறையும் பிள்ளையின் உள உடல் சிந்தனை கமூக மற்றும் மனஎழுச்சி விருத்திக்கான அற்புதமான அனுபவங்களை அள்ளிக் கொடுக்கின்றன. அதனால் ஆரம்பக் கல்வி பிள்ளைக்கும் பிள்ளை வாழும் நாட்டின் வெற்றிக்கும் முக்கிய திறவுகோளாக அமைகிறது.
“ஒரு நாட்டின் வளர்ச்சியை காண வேண்டுமானால் அந்நாடு பயன்படுத்தும் உயர்ரக தொழில்நுட்பத்தையும் அது பயன்படுத்தும் நவீன கருவிகளையும் மிகப் பெரிய தொழிற்சாலைகளையும் கண்டு அதன் அபிவிருத்திகளை மட்டிடமுடியாது;
நவீன கருவிகளை மிக எளிதாக வாங்கலாம். தொழிற்சாலைகளை கட்டியமைக்கலாம். வேண்டுமானால் தொழில்நுட்பத்தை திருடலாம்.
“நாட்டின் வளர்ச்சியைக் காணவேண்டுமானால் அந்நாட்டின் ஆரம்பப்பாடசாலைகளுக்கு சென்று அங்கு பிள்ளைகள் எவ்வாறு கற்பிக்கப்படுகிறார்கள் என்பதைப் பாருங்கள் அதாவது அவர்கள் அங்கு என்ன கற்பிக்கப்படுகிறார்கள் என்பது முக்கியமல்ல ஆனால் அவர்கள் எவ்வாறு கற்பிக்கப்படுகிறார்கள் எந்த முறையில் வழிநடத்தப்படுகிறார்கள் என்பதை நோட்டமிங்கள்.”
“உங்கள் பிள்ளைகள் ஆக்கபூர்வமானவர்களாகவும் ஈடுபாட்டுடனும் விடயங்களில் பங்கேற்பவர்களாகவும் பொறுமையாக செயற்படும் தன்மையுடையவர்களாகவும் மாறுவதை அவதானித்தால் அவர்கள் நல்ல மனிதர்களாகவும் வளர்ச்சியை நோக்கிச் செல்லக்கூடிய ஆளுமைகளாகவும் மாறுவார்கள்.” என்று 1993 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் டக்ளஸ் நோர்த் என்பவர் எடுத்துக் குறிப்பிடுகிறார்
ஒரு நாட்டின் வளர்ச்சியும் பொருளாதார விருத்தியும் திட்டமிடப்பட்ட தொடக்கக் கல்வியில் தங்கியிருக்கிறது என்பதை இதிலிருந்து புரியலாம்