இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு

இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடு
இனிமையான சொற்களாகும்

நாம் பிள்ளைகளோடும் ஏனையவர்களோடும் உரையாடும் போது நாம் எமது சொற்களை எப்படி வெளிபடுத்துகிறோம் என்பதை கட்டாயம் கவனித்துப்பார்க்க கடமைப்பட்டிருக்கிறோம்.

• பிள்ளைகளும் மற்றவர்களும் மதிக்கப்படக்கூடிய விதத்தில் எமது சொற்களை வெளிப்படுத்துகிறோமா?
• எமது குரலிலும் நாம் வெளிப்படுத்தும் சொற்களிலும் நாம் அவதானம் செலுத்துகிறோமா?
• நாம் உரையாடும் பொழுது எமது முக பாவனையும் ஏனைய உடல் உறுப்புகளும் செயற்படும் விதத்தை தெரிந்துவைத்திருக்கிறோமா?
• எமது சொற்கள் பிள்ளைகளையும் மற்றவர்களையும் எம் பக்கம் ஈர்க்க கூடியனவாக உள்ளனவா? அல்லது அவர்களை தூரமாக்கும் விதத்தில் அமைந்திருக்கின்றனவா?
• எமது சொற்கள் மற்றவர்களுக்கு மனஆறுதலையும் மனஅமைதியையும் கொடுக்குமா? அல்லது மற்றவர்களை புண்படுத்துமா?
• எமது சொற்கள் உண்மையையும் உயிரோட்டத்தையும் கொண்டனவாக உள்ளனவா?
• எமது சொற்கள் கேற்பவருக்கு பயனும் பெறுமதியும் உடையதாக அமையுமா?
• எமது சொற்களை மற்றவர்கள் விரும்புவார்களா?
• நாம் பேச வேண்டிய சொற்கள் என்ன? பேசக்கூடாத சொற்கள் என்ன? என்பதை தெரிந்துதான் பேசுகிறோமா?

இப்படி எண்ணிப்பார்க்கும் போது நாம் வெளிப்படுத்தும் சொற்களின் தரத்தையும் பயனையும் கண்டுகொள்ள முடியும்.
பயனுள்ள, இனிமையான சொற்கள் பேசும் பண்பாளராக நாம் எம்மை ஆக்கிக்கொள்வதானது பக்குவமான மொழி பேசும் சமூகம் உருவாக அத்திவாரமிடும் காரணகர்தாக்களாக நாமே ஆகலாம்.
“ஒருவரின் இதயத்தின் மிகச்சிறந்த வெளிப்பாடாக இருப்பது இனிமையான சொற்களாகும்”.
இனிமையான சொற்கள் உறவை வளர்த்து உணர்வை விருத்திசெய்து மனித நெருக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்தச் செய்யும் அற்புதமான ஒளடதமாகும்.
எமது சொற்கள் எமக்குச் சொந்தமானவை.. ஆதலால் இனிமையான பயனான சொற்கள் எங்கள் உதடுகளிலிருந்து ஊற்றெடுக்கட்டும்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top