தவறு ஒரு தோல்வி அல்ல
நாம் தவறு செய்யும்போது அல்லது ஒரு பிழை விடும்போது சிலசமயம் நாம் நம்மீது கடினமாக நடந்துகொள்கிறோம்.
இதுபோன்ற சூழ்நிலையில் நாம் ஏன் நம்மிடம் மோசமாக நடந்து கொள்ள வேண்டும்?
இது சரிதானா? முறைதானா?
சிந்தித்துப் பார்ப்போம்
எங்களால் ஏதேனும் தவறு நடந்தால்….
உடனடியாக எமது தவறை எப்படி திருத்துவது என்று சிந்திக்க நம் மனதிற்கு இடம் கொடுக்க வேண்டும்
விடயங்கள் சரியாக நடக்காத நேரங்களில் நாம் எப்படி செயற்படுகிறோம் என்று நம்மை நாமே கவனித்துக் கொள்வும் வேண்டம்
ஏதோ ஒரு விடயத்தில் பின்னடையும்போது
‘இல்லை’ என்றோ ‘முடியாது’ என்றோ சொல்வது சிலசமயம் எங்களைப் சங்கடப்படுத்துவ போல் தோன்றலாம்.
அதுபோன்ற நிலைமைகளில் …இழப்பை உணராமல்…
“இல்லை’ நான் இப்போது வேறு வழியைத் தேர்வு செய்யப் போகிறேன்.” என்று சொல்லிக்கொள்ளலாம்
‘இல்லை ‘என்று சொல்வது ‘முடியாது’ என்று சொல்வது வார்த்தைகளால் மட்டும் நடப்பதில்லை.
ஆனால் எங்கள் செயல்களாலும் எங்கள் விருப்பத்தாலும் நாங்கள் ‘இல்லை’ என்றும் ‘முடியாது’ என்றும் சொல்கிறோம்.
நாம் ஒரு விடயத்தை ‘வேண்டாம்’ என்று சொல்வது வேறு எதையாவது ஒன்றுக்கு ‘ஆம்’ என்று சொல்வதhக அமைந்துவிடும் .
நாம் சவால்களை எதிர்கொள்ளும்போது அல்லது தவறுகளைச் செய்யும்போது
‘இல்லை’ ‘ஏலாது’
‘இல்லை முடியாது’ என்று சொல்லாமல்
‘ஆம்’ எனக்கு முடியும்’ ‘நான் முயற்ச்சிக்கிறேன்’
என்று நாம் நமக்கே கூறிக்கொள்ள வேண்டும்
இப்படிக் கூறிக்கொள்வது
நாம் நமது மூளைக்கு கொடுக்கின்ற சத்தான உணவாகவும் ஊக்கம்தரும் பானமாகவும் இருக்கும்.
அத்துடன் எங்களை தோழ்வி அடையாமல் பாதுகாத்துவிடும்.
நாம் விழும் இடத்தில் தங்கி இருப்பதற்காக விழுவதில்லை
நாம் விழும் இடத்திலிருந்து எழுந்து நிற்பதற்காகவே வழுகிறொம்