மனிதனின் உடலுக்கும் உள்ளத்துக்கும் இடையில் பிரிக்க முடியாத அளவு நெருக்கமான உறவு இருப்பது பற்றி நாம் அறிவோம். உள்ளம் ஏதாவது முறைகளால் பாதிப்புக்கு உள்ளானால் அதன் தாக்கத்தை உடலில் கண்டுகொள்ளலாம். அல்லது உடல் ஏதோவகையில் வருத்தப்படுவதை, தாக்கத்திற்கு உள்ளாவதை நாம் உணர்ந்திருக்கலாம். அதே போன்று உடல் ஏதாவது நோயால், விபத்துகளால் அல்லது காயங்களால் பாதிக்கப்பட்டால் அதன் காரணமாக உள்ளம் அசந்துபோய் கவலைப்படுவதை, தைரியம் குறைந்து போவதை நாம் அனுபவித்தும் இருக்கலாம்.
உள்ளத்திற்கு ஏற்படும் பாதிப்புகளால் வெளிவரும் அறிகுறிகளுக்கு முகம் கொடுப்பது என்பது சாதாரண விடயமல்ல. உள்ளம் அவதிப்படும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க உள்ளத்தில் எதிர்மறையான தாக்கங்களும் அதிகரித்துக்கொண்டே செல்லும். இந்தத்தாக்கங்கள் உடனடியாகவோ அல்லது என்றைக்கோ ஏதோமுறைகளில் வெளிப்படலாம். அதில் உடல் ரீதியாக வெளிவரும் பாதிப்புகள் மிக முக்கியமாகும். அதாவது உள்ளத்தால் தாங்க முடியாத பாதிப்பு ஏதேனும் நிகழ்ந்தால் அது உடல் ரீதியாக, உடல் சார்ந்த பாதிப்புகளாக வெளிவர முடியும்.
உளப்பாதிப்புகள் உள்ளத்தை அதிகமாக ஆக்கிரமித்துக்கொள்ளும் போது அதன் தாக்கத்தை உடல் சார்ந்த நோய்களாக சிலர் விவரிக்கவும் அல்லது வெளிப்படுத்தவும் செய்கின்றனர். இந்த இடத்தில் உண்மையாகவே அவர்கள் உடல் ரீதியான பாதிப்பு பற்றி சொல்ல முயற்சித்தாலும் அப்படியே சொன்னாலும் அது உடலோடு தொடர்பான நோயல்ல என்பதை அவர்களால் புரிய முடியாதிருக்கலாம். ஆனால் உளவியல் அழுத்தங்கள் உடல்சார்ந்த நோய்களாக, நோவுகளாக, வலிகளாக வெளிப்படுகின்றன என்பதையே அவர்கள் சொல்கிறார்கள். உண்மையும் அதுதான்.
எம்மில் அதிகமானவர்கள் வாழ்க்கையில் ஏதாவது சந்தர்பப்ங்களில் உள்ளம் சார்ந்த உடல் பாதிப்புகளை அனுபவித்திருப்பார்கள்.
• பயம் அல்லது அதிர்ச்சி ஏற்படும் போது உடலில் உருவாகும் மாற்றங்கள் உதாரணமாக வீசிப்படுவது போன்ற உணர்வு உடல் நடுங்குதல் மூச்சுத்திணருதல் போன்ற உடல் சார்ந்த மாற்றங்களை அனுபவித்திருக்கலாம்
• மனஉழைச்சல், டென்சன் அல்லது ஏதாவது குலப்பம் ஏற்படும் போது தலைவலி உருவாகுவதை அனுபவித்திருக்கலாம்
• ஏதாவது இலப்பு அல்லது துயரம் ஏற்படும் போது உடம்பில் தழும்பல் அல்லது தடுமாற்றநிலை உருவாகுவதையும் அனுபவித்திருக்கலாம்
• எதிர்பாராத ஒரு அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கும் போது உடலில் அதிர்வுகள் அல்லது காய்ச்சல் போன்ற நிலை ஏற்படுவதை கண்டும் கேட்டும் இருக்கலாம்.
இப்படி உடலில் ஏற்படும் பல மாற்றங்களுக்கு உள்ளம் நேரடியாக தொடர்பு பட்டிருக்கிறது என்பதை புரியலாம். ஆனால் எவராவது ஒருவர் உள்ளத்தின் பாதிப்புகளை அல்லது உள்ளத்திற்கு ஏற்படும் பாதிப்பான அறிகுறிகளை உடல் நோய்களாகவோ நோவுகளாகவோ தொடர்ந்து வெளிப்படுத்தி வருவாரானால் அது உள்ளம் சார்ந்த நோவாகவே கருதப்படும். ஆனால் இங்கு உடல் சார்ந்த எந்த அறிகுறிகளோ உடல் நோய்க்கான காரணங்களோ இருக்கவே இருக்காது. இருந்த போதிலும் உடலில் நோவுகள், வலிகள் வருவதாக அவர்கள் அடிக்கடி முறைப்படுவார்கள். வைத்தியர்கள் நோய் ஆய்வு செய்த பிறகு நோயானது உடலோடு அன்றி உள்ளத்தோடு தொடர்பானது என்ற முடிவுக்கு வருவார்கள்.
உள்ளம் சார்ந்த உடல் நோய்கள் மிகவும் சிக்கலானவை. ஏனென்றால் அவற்றில் உடல் நோய் போன்றே பலவிதமான அறிகுறிகள் வெளிப்படுகின்றன. உள்ளத்தின் பாதிப்புகள்தான் உடல் நோய்களாக வெளிப்படுகின்றன என்பதை ஏற்றுக்கொள்ள முடியாத அளவு பல நோய்த்தாக்கங்கள் வெளிவரவும் செய்யலாம்.
இந்த உள்ளம் சார்ந்த உடல் நோய்கள் சிறுவர், வளர்ந்தோர், ஆண்கள், பெண்கள் போன்ற எவரையும் தாக்கத்திற்கு உள்ளாக்க முடியும். இந்த விடயம் தொடர்பாக ஆய்வு நடத்தும் அறிஞர்கள் குறிப்பாக பெண்களிலும் வயது வராப்பருவத்தை உடையவர்களிலும் இந்நோய் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடுகின்றனர். அவர்களுக்கு ஏற்படும் ஆரோக்கியச் சிக்கல்கள் பற்றி கரிசனை கொள்ளாமல் இருப்பதும் அவற்றிட்கு முழறயாக முகம் கொடுக்காமல் இருப்பதும் ஒரு காரணமாகும் அவர்கள் குறிப்பிடுகின்றனர். ‘ஹிஸ்டீரியா’ எனும் உளவெறுப்பு நோயுடன் இந்த உளளம் சார்ந்த உடல் நோய் சம்பந்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்த நோயை மனஇயலின் படி ‘சோமடைசேசன்’ என்று அழைக்கிறோம். இவ்வாறான உடல் சார்ந்த நோய்களை அனுபவிப்பவர்களிள் வெளிப்படும் அறிகுறிகள் பெரும்பாலும் உண்மையானவைகளாகவே காணப்படும்.
தாங்கிக்கொள்ள சிரமமாகவும் இருக்கும். அத்துடன் உடல் உறுப்புகளில் ஏதாவது ஒன்றில் நோவுகளை தரக்கூடியதாகவும் வெளிவரலாம். குறிப்பாக அவசரமாக அச்சப்படக்கூடிய அல்லது கவலைப் படக்கூடிய ஒருவர் தனது வயிற்றில் ஒரு பெரிய இடைவெளி, வெறுமை அல்லது பாரமான உணர்வு இருப்பதை உணர்ந்து பிறகு அதை நோவாக முறையிடலாம்.
இயற்கையாக நிகழும் அனர்த்தங்கள் மற்றும் மனிதனால் ஏற்படும் அனர்த்தங்களின் விழைவாக இப்படியான உடல் சார்ந்த நோவுகளும் வலிகளும் நிகழ்லாம் என்றும் கருதப்படுகிறது. இவ்வாறான சந்தர்பப்ங்களினால் சில சமயம் மனஅழுத்தத்துடன் சேர்ந்ததாகவும் உடல் சார்ந்த நோவுகள் வெளிப்பட வாய்ப்புண்டு.
அதேநேரம் அன்றாடம் முகம் கொடுக்கும் ‘மனஉழைச்சல்’ எமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்கதியை பலவீனப்படுத்தி கோடிஸோல் போன்ற மனஉழைச்சல் தொடர்பான ஹோமோன்களை வெளிப்படுத்துவதால் உடலில் பல நோய் அறிகுறிகள் தோன்றுகின்றன. உடல் ஆரோக்கியமும் உள ஆரோக்கியமும் முற்றிலும் வேறுபட்ட விடயங்களாக இருப்பதாக எமக்கு விளங்கினாலும் உள நெருக்கீடுகள் காரணமாக உடலில் ஏற்படும் மாற்றங்களால் உடல் ரீதியான அறிகுறிகள் வெளிவர முடியும் என்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
உள்ளம் சார்ந்த உடல் நோய்கள் பல வடிவங்களில் வெளியாவது பற்றி மருத்துவ ஆய்வாரள்கள் ஆய்வுகள் நடத்தி உள்ளனர்.
1) உள நெருக்கீடு காரணமாக பார்வையில் அல்லது கேள்வியில் மாற்றங்கள் ஏற்படல்
2) உடலியல் காரணம் ஏதும் இன்றி உடலில் நீடித்த நோவுகள் உருவாதல்
3) உடல் தோற்றம் பற்றி தெளிவற்ற உணர்வுகள் ஏற்படல்
4) உடல் சாராத ஏதாவது நோய் அறிகுறியினால் பல மாதங்களாக அவதிப்படல்
5) ஏதாவது நோய் உடலில் இருக்கும் என்ற நம்பிக்கையில் நோய் ஒன்று ஏற்படும் என்று அடிக்கடி கவலைப்படல்
6) உடல் காரணம் அற்ற, விவரிக்க முடியாத, தொடர்பற்றதுமான உடல் சார்ந்த நோய் அறிகுறிகள் பற்றி முறைப்படல்
போன்றன உள்ளம் சார்ந்த உடல் நோய் அறிகுறிகளாகும் என்று மருத்துவ ஆய்வாரள்களின் ‘நோய் ஆய்வு சோதனை புள்ளிவிபர கiயேட்டில்’ குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
இங்கு குறிப்பிடப்பட்டது போன்று பொறுந்தாத, தேவையற்ற உடல் அறிகுறிகளால் அவதிப்படுபவர்கள் முதலில் வைத்தியரை நாடி, நோய் ஆய்வு செய்து மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும். நோயை ஆய்வு செய்த மருத்துவர் உள்ளத்தின் நெருக்கீடுதான் உடல் நோயறிகுறிகளுக்கு காரணம் என்று உறுதிசெய்தால் பொறுத்தமான மனநல நிபுணர்களிடம் மனநல சிகிச்சைக்காக அனுப்பி வைப்பார்;. அதனால் எவரும் கவலைப்படாமல் குறிப்பிட்ட காலத்தில் சிகிச்சையைப் பெற்று உள்ளமும் உடலும் அமைதியும் ஆரோக்கியமும் அடைய முயற்சிக்க வேண்டும்.