“குறைவாக பேசு
அதிகமாக வேலை செய்”
பேசுவதை விட எங்களின் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த ரகசியம்.
ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ரகசியம் இது.
படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த ரகசியம் பலருக்குப் பலனாகவே இருந்து வருகிறது.
“குறைவாக பேசு
அதிகமாக வேலை செய்”
என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
இதன் முதல் படி, எங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்வது…
இரண்டாம் படி, பேசுவதை விட நாங்கள் விரும்புவதை செய்வதற்கு அவதானம் கொடுப்பது….
மூன்றாவது படி, வேலை செய்வதற்கும் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது.
வேலை செய்வது என்பது எங்கள் இடத்திலிருந்து எழுந்து, வெளியே சென்று வேலை முடிவதற்குச் செய்ய வேண்டியதைச் செய்வதாகும்.
பேசுவது என்பது வார்த்தைகளில் விடயங்களை விளக்குவதாகும்,
இதற்கு சில சமயம் நிறைய நேரம் எடுக்கும் அல்லது எங்கும் செல்ல முடியாமல் ஆக்கிவிடும்.
ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ரகசியம் இது.
நடவடிக்கை எடுப்பது அல்லது இலக்கை அடைய ஆர்வத்துடன் வேலை செய்வது எங்களை மேம்படுத்துவதற்கான அழகான வழிமுறை.
நாம் பயந்தாலும், அல்லது எத்தனை தெரியாத தடைகளை நாம் எதிர்கொண்டாலும்,
நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது செயற்பட வேண்டும்.
நாம் செயலாற்றும் போது…….
நிறைய கற்றுக்கொள்வோம்,
புதிய யோசனைகளை உருவாக்குவோம்,
நாம் வளர்வோம்,
நாம் மிகவும் ஆரோக்கியமான நபராக மாறுவோம்.
எண்ணற்ற நன்மைகளைப் பெறுவோம்.
எல்லா வெற்றியாளர்களையும் பார்த்தால்….
அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.
அவர்கள் செயலாற்றினார்கள். முன்னோக்கி நகர்ந்தார்கள் என்பதே உண்மையான பதில்.
சில சிறிய, பெரிய தடைகளை சந்தித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுத்தனர்.
அவர்கள் இறுதியில் வெற்றியைக் கண்டறிந்து தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள்.
நாம் இலக்கை நோக்கி நகரும் போது,
நாம் சிறப்பாக இருக்க வேண்டிய இடங்கள் எவை
மந்தமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் எவை என்பதை அது நமக்கு உணர்த்துகிறது.
நாம் பேசுவதை குறைப்போம்… செயலாற்றுவதை கூட்டுவோம்…