அதாவது எங்கள் எண்ணங்கள் எப்படி இருக்குமோ எமது மனநிலையும் அப்படியே இருக்கும்.
நாம் இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்….
நாங்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால்,
நாங்கள் மிகுந்த கவலையை உணரப் போகிறோம் என்று பொருள் கொள்ளலாம்.
நாங்கள் எப்போதும் கடந்தகால தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால்,
நாங்கள் மிகவும் வெட்கப்படப்போகிறோம் என்று பொருளாகிவிடும்.
நாங்கள் அநீதி இழைக்கப்பட்டுவிட்டோம் என்று எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தால்,
நாங்கள் மிகவும் கோபத்தை உணரப் போகிறோம் என்றாகிவிடும்.
இவைகள் எல்லாமே எங்களை உணர்ச்சிவசப்படுத்தி விடும்.
நாங்கள் உணர்ச்சிவசப்படுவதை மாற்ற விரும்பினால், நாங்கள் எதைப் பற்றி யோசிக்கிறோம் என்பதை அவதானிக்க வேண்டும்.
நாங்கள் எவற்றை எண்ணுகிறோம் என்பதை புரிந்து கொண்டால் எமது எண்ணங்களை மாற்றியமைக்கலாம்.
அழகான எண்ணங்கள் தான் எங்களை
ஆரோக்கியமாக்குகின்றன என்பதை புரிந்து கொள்வோம்…..