எங்கள் மீதான அன்பு
நம்மில் சிலர் அன்புக்காக ஏங்குகிறார்கள்.
இன்னும் சிலர் தங்களுக்கு உறவுகள் இல்லை என்று கவலைப்படுகிறார்கள். மற்றவர்களின் அன்பும் உறவும் இல்லாமல் வாழவே முடியாது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள்.
இவை எல்லாம் என்றைக்கோ ஒரு நாள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை.
அன்பும் உறவும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, அவை எங்கள் முழு வாழ்க்கையும் அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.
அன்பும் உறவும் மட்டும் தான் வாழ்க்கை என்று நினைக்கத் கூடாது.
எங்கள் வாழ்க்கையில் அர்த்தமுள்ள பல அம்சங்கள் உள்ளன.
எங்கள் ஆற்றல்கள்,
எங்கள் தனித்துவமான பண்புகள்,
எங்கள் பயனும் பெறுமதியும்,
எங்கள் எண்ணங்கள்,
இந்த உலகில் நாங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கும் விடயங்கள்,
எங்கள் நட்புகள்,
எங்கள் குடும்பம் என முக்கியமான பல அம்சங்கள் உண்டு.
எங்கள் ஆர்வங்களும் ஆற்றல்களும் எங்களுக்கு முக்கியமானவை,
எங்கள் தகுதியும் தரமும் எங்களுக்கு அவசியமானவை.
எங்கள் ஆசைகளும் ஆர்வங்களும் புதிய விடயங்களை ஆராயவும், கற்றுக்கொள்ளவும் வழிவகுக்கும்.
எமது அறிவும் ஆற்றலும் நாங்கள் வளரவும் எங்களை இந்த உலகை நோக்கி விரிவுபடுத்தவும் வழிவகுக்கும்.
நாங்கள் உண்மையாகவே எங்கள் சொந்த வாழ்க்கையை உருவாக்க எத்தனிக்கும் போது..
நாங்கள் நேர்மையான, அழகான, ஆரோக்கியமான ஒரு வாழ்க்கை வாழ வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
தனிமையை நீக்கி தைரியத்தை தந்துவிடும்.
அன்பில் தங்கியிருக்காமல் தரமான வாழ்க்கை வாழ வழிகாட்டிவிடும்.
மற்றவர் உறவில் உறைந்துபோகாமல்
நாங்களே எங்களை நேசிக்கும் தன்மையை உருவாக்கிவிடும்.
நம் மீதான அன்பு மிகவும் இன்றியமையாதது என்பதை நாம் அறிய வேண்டும். நாம் மற்றவர்களை நேசிப்பதற்கு முன், நம்மை நேசிக்க ஆரம்பிக்க வேண்டும். நாம் நம்மை உண்மையாக நேசிக்கவில்லை என்றால், யாரிடமிருந்தும் உண்மையான அன்பைப் பெற முடியாது.
நாம் நம்மை நேசிக்கத் தகுதியானவர்கள்.
நாம் நம்மை செதுக்கிக் கொள்ள ஆற்றல் பெற்றவர்கள்.
ஏமது குறைபாடுகளை, எமது உள்ளார்ந்த மனிதநேயத்தை ஏற்றுக்கொள்ளவும் கற்றுக்கொள்ள ஆசையோடு உழைக்க கடமைப் பட்டவர்கள்.
அப்படியானால், நம் எமது குறைகளை, பலவீனங்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக வேண்டும்.
எமது இதயத்திலும் ஆன்மாவிலும் இருக்கும் விரிசல்களைத் அகற்றி மகிழ்ச்சியாக இருக்க தயராக வேண்டும்.
நம்மை நாமே நேசிக்க கற்றுக்கொள்வதன் மூலம் இதை இலகுவாக அடையலாம். ஏனென்றால் நாம் அனைவரும் சுய ஏற்றுக்கொள்ளலுக்கு, சுய அன்புக்கும் தகுதியானவர்கள்.
அன்பும் உறவும் எங்களுக்குள் இருந்து ஊற்றேடுகட்டும்.
➖➖➖➖