நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை இருக்கிறது.

நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கையின் கட்டங்களில்  கடினமான காலங்களை எதிர்கொள்கிறோம். சில நேரங்களில் கடினங்கள், கஷ்டங்கள் குறுகிய காலத்திற்குள்  வந்து சென்று விடும். சில நேரங்களில் அவை எதிர்பார்த்ததை விட நீண்ட காலம்  நீடித்திருப்பதை காண்கிறோம்.

அந்த தருணங்கள் நம்மை பின்னடையச்செய்வதாக அல்லது எம்மை  உடைத்துவிடப்போவதாக நாம் உணரலாம். ஏதாவத பாதிப்புகள் நடக்கும் என்று பயப்படலாம்.

என்ன பயம் வந்தாலும்

நாம் ஒருபோதும் பயத்திலோ அல்லது பதற்றத்திலோ வாழக்கூடாது.

அன்பு சகோதர சகோதரிகளே..!

நம் ஒவ்வொருவருக்கும் நம்பமுடியாத வலிமை இருக்கிறது.

அது நம்மை முன்னோக்கி தள்ளும் சக்திகொண்டது.

நாம் உறுதியான  மனநிலையுடன்  இருந்தால், விடாமுயற்சியுடன் முன்சென்றால் புதிய மாற்றங்களை எமக்குள்ளே   ஏற்படுத்தலாம்.

வாழ்க்கையில் கடினங்கள், கஷ்டங்கள், போராட்டங்கள் இல்லாமல்  இலகுவாக வாழவேடும் என்று நாம் விரும்பினாலும்  அவை நம் குணத்தை வளர்க்க, எம்மை மாற்றியமைக்க உதவுகின்றன என்பதை நாம் நம்ப வேண்டும்.

சங்கடங்கள் ஒரு முக்கியமான தூதினை சுமந்து எங்களிடம் வருகின்றன என்று ஏற்றுக்கொள் வேண்டும்.

நாம் என்றைக்கும் கற்றுக்கொள்ளாத பல புதிய பாடங்களை அவை நமக்குக் கற்றுத்தருகின்றன.

நாம் சமாளிக்கின்ற  ஒவ்வொரு போராட்டமும் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதைக் காட்டித்தருகிறது.

இந்த நேரத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் எதையும் எதிர்த்துப் போராடுவதற்கான தைரியத்தை வளர்த்துக்கொள்வோம்

தைரியத்தை வளர்ப்பது எப்படி என்று நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவோம்.

மீண்டும் மீண்டும் பிரச்சனை பற்றி பேசுவதை நிறுத்துவோம்.

ஒரு சிறந்த எதிர்காலத்தை திட்டமிடுவோம்

கடந்த காலத்தை எங்கள் பின்னால் வைத்து விட்டு எதிர்காலத்தை ஏற்றுக்கொள்ள தயாராகுவோம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top