“என்னால் செய்ய முடியாது”
என்று கூறும்போது..
“I Can’t Do!”
பிள்ளைகள் நன்றாகச் செய்யும் விடயங்களும் உள்ளன. கடினமான செய்யும் விடயங்களும் உள்ளன. பெரும்பாலான பிள்ளைகள் “என்னால் அதை செய்ய முடியாது!” அல்லது “அது மிகவும் கடினமாக உள்ளது!” என்ற சொல்வதை பார்க்கிறோம்.
அவர்கள் அப்படிச் சொல்லும்போது நாங்கள் என்ன செய்யலாம்? எப்படியான பதிலை கொடுக்கலாம்?
ஏதாவது செய்ய முடியாது என்று பிள்ளைகள் சொன்னால் அவர்கள் எம்மிடம் மனம் திறந்து பேசுகிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக அவசரப்படாமல் பிள்ளையுடன் உரையாட வேண்டும்.
உங்கள் உள்ளுணர்வு அப்படிச் சொல்லலாம். ஆனால் “அது உண்மையல்ல.” உங்களால் முடியும் என்று எனக்குத் தெரியும்!
என்று பிள்ளையை தைரியப்படுத்தி தொடர்ந்த உரையாட வேண்டும்.
அவர்கள் முகம்கொடுக்கும் சவால்கள் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை அறிய உரையாடல் உதவும்.
சவால்களை எதிர்கொண்டு சாதித்த நல்ல மனிதர்களைப் பற்றிய கதைகளை அவர்களுடன் பேசலாம்.
அவர்கள் எதாவது விடயத்தில் கஷ்டப்படுவதை காணும்போது அதை குறையாக பார்ப்பதில்லை என்பதையும் குறைவாக எடுத்துக்கொள்ளவும் கூடாது என்பதையும் அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.
தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கலாம் மற்றும் “என்னால் முடியாது” என்பதிலிருந்து “என்னால் முடியும்” என்று செல்வதற்கு அவ்களை பழக்கலாம்.
“நீங்கள் மிகவும் புத்திசாலி!” “நீங்கள் மிகவும் கடினமாக உழைக்கிறீர்கள்” என்று பிள்ளையை தைரியப்படுத்தலாம்
பிள்ளை ஒரு விடயத்தை அழகாக செய்து முடித்ததை காணும்போது “நீங்கள் அதை செய்தீர்கள்.” என்று சந்தோசமாக சொல்லி ஊக்கம் கொடுக்கலாம்.
“நீங்கள் ஏன் முயற்சி செய்யக்கூடாது?” என்று நேரடியாக கேட்காமல் நீங்கள் வேறு வழியில் முயற்சித்தால் முன்னேறலாம் என்று சொல்லலாம்.
“நீங்கள் முயற்சி செய்யத் தயாரா?” அல்லது “நீங்கள் முயற்சி செய்யத் தயாராகும்போது என்னிடம் சொல்லுங்கள்” என்று கேட்கலாம். இது பிள்ளையை நிம்மதியடையச் செய்துவிடும்
“என்னால் செய்ய முடியாது!” எனும் இந்தச் சிறிய சொற்கள் வெற்றியையும் மகிழ்ச்சியையும் நோக்கிய பாதையில் நம்மையும் நமது பிள்ளைகளையும் வழிநடத்தலாம் அல்லது எமது ஆற்றல்களை உடைத்துவிடலாம்.
நாம் அடைந்தாலும் இல்லாவிட்டாலும் இலக்கை நோக்கிய நமது விடாமுயற்சி மிக முக்கியமானது என்பதை பிள்ளைகளுக்கு உணர்த்துவோம். நாமும் உணர்வோம்.