எப்படி என்னை ஊக்கப்படுத்துவது

எங்களை ஊக்கப்படுத்துவது என்பது எங்கள் பலவீனங்கள் மற்றும் இயலாமைக்கு பதிலாக எங்கள் பலம், நேர்மறையான பண்புக்கூறுகள் மற்றும் திறன்களில் கவனம் செலுத்துவதாகும்.
நாம் நம்மை ஊக்கப்படுத்துவதன் மூலம் இவற்றை வெளிக் கொண்டு வரலாம்.

எப்படி எம்மை ஊக்குவிப்பது……

சில அழகான உறுதியான ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மூலம் எம்மை ஊக்கப்படுத்தலாம்.

உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்..

என்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது,
ஆனால் என்ன நடக்கிறது என்பதற்கு பதிலளிக்க வேண்டிய விதத்தை என்னால் கற்றுக் கொள்ள முடியும்.

“நான் என் மனதின் காவலன்…..
“நான் என் உடலின் காவலன்…
“நான் என் ஆன்மாவின் காவலன்….
“நான் எதிர்மறையிலிருந்தும் பிழையான எண்ணங்களில் இருந்தும் என்னைப் பாதுகாக்கிறேன்.
“எந்த இருளாலும் என் ஒளியை மங்கச் செய்ய முடியாது”.

“நான் எப்பொழுதும் என்னால் முடிந்ததை செய்கிறேன்,
சிறந்ததை எப்போதும் சிறப்பாகச் செய்கிறேன்”

“நம்பிக்கையாலும் வலுவான மனதாலும் சந்தேகம், மறுப்பு, ஏமாற்றம் போன்றவற்றை வெல்ல முடியும்”

“நேரத்தையும் முயற்சியையும் சரியாக பயன்படுத்துவதன் மூலம் வெற்றியடையத் தேவையான அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும்”.

“என் பின்னடைவுகள் மற்றும் இயலாமையிலிருந்து வெளிவர போதுமான வலிமையும் ஞானமும் எனக்கு உள்ளது”.

“என் சிந்தனையை பயன்படுத்தி என் இலக்குகளை இலகுவாக அடைய முடியும்”.

இங்கு குறிப்பிட்ட ஒவ்வொரு வசனமும் எவ்வளவு ஊக்கம் தருகிறது என்பதை நாம் இப்பவே உணரலாம்.
(முடியுமானால் மீண்டும் ஒரு முறை சொல்லிப் பார்ப்போம்)

இது போன்ற சுய ஊக்குவிப்பு வாசகங்களை உருவாக்கி ஒவ்வொரு நாளும் அவற்றை சொல்வதன் மூலம் ஆக்கப்பூர்வமான மனிதனாக எம்மை மாற்றி அமைக்கலாம்.
எமக்கு மிக பிடித்தவராக எமக்கே ஆகலாம்…

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top