“முன்னால் சிந்திப்பது”
THINKING AHEAD
எதிர்காலத்தைப் பற்றிய அல்லது எதிர்காலத்தை பயனுள்ளதாக ஆக்குவதற்கான வழிமுறைகளில் ஈடுபடும் திறனுக்குப் பயன்படுத்தப்படும் சொல்தான் ‘முன்னால் சிந்திப்பது’
நாளை என்ன நடக்கலாம் என்று யோசிப்பதன் மூலம் எதிர்கால சூழ்நிலைக்குத் தயாராவதற்கு நாம் முன்பே யோசித்து எம்மை தயார்படுத்திக்கொள்வதும் ‘முன்னால் சிந்திப்பது’ ஆகும். முன்கூட்டியே திட்டமிடுவது என்பதும் இதுவேயாகும்.
மனிதர்கள் எதிர்கால நிகழ்வுகளை மனரீதியாக உருவகப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளனர்.
இருந்தாலும் எதிர்கால வெற்றி நம் வீட்டு வாசலில் ஒரே இரவில் வந்துவிடுவதில்லை
அதற்கு நாம் நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் தயாராக இல்லை என்றால் அனைத்தையும் இழக்க நேரிடும்.
அதேபோல் விடயங்களை எப்போது தொடங்குவது, எப்படி தொடங்குவது என்பதை நாம் அடையாளம் காணத் தவறினால் நாம் உருவாக்கிய எதிர்கால எதிர்பார்ப்புகள் நம் கீழ் சரிந்துவிடும்
எதிர்கால எதிர்பார்ப்புகளை வெற்றிகொள்ள விரும்புகிறோமென்றால் அதுபற்றி ஆழமாக சிந்திக்க வேண்டும்.
வெற்றியை உருவாக்குவதற்கும் இதை பராமரிப்பதற்கும் மிக அடிப்படையான வழி முடிவின் உறுதியான எண்ணத்தை மனதில் கொண்டு தொடங்குவதாகும்.
எமது நாளைய வேளைகள் மிக முக்கியமாக – பயனுள்ளதாக இருக்க வேண்டுமானால் அதற்கு ஒரு திட்டவட்டமான திட்டம் தேவை.
ஒரு தெளிவான வரையறையை உருவாக்காமல் ஒரு தளர்வான ஆசையாக மட்டும் எமது வேலைகள் இருந்தால் மெதுவாக அவை எட்டமுடியாததாக ஆகிவிடும்.
முடிவு தெளிவாக இருந்தால் நாம் போக வேண்டிய பாதை திடீரென்று எங்களுக்கு முன்னால் அதுவாகவே திறந்துகொள்ளும்.
அதேபோன்று புதிய யோசனைகள் மற்றும் முன்னோக்குகள் எங்கள் சிந்தனை செயல்பாட்டில் பாய்ந்துவிடும்
மனிதர்களாகிய நாம் எண்ணங்களால் ஆனவர்கள். நாம் என்ன செய்ய முடியும் அல்லது என்ன செய்ய முடியாது என்று நினைக்கிறோமோ அது உண்மையானது என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்மறை அணுகுமுறையால் நாம் உந்தப்பட்டால் நமது திறன்கள் அதனுடன் மட்டுப்படுத்தப்படும்.
நாம் ஒரு வலுவான ஆசை அல்லது நேர்மறையான அணுகுமுறையால் உந்தப்பட்டால் நாம் உண்மையில் அந்த ஆசையை அல்லது இலக்கை நிறைவேற்றுவோம்.
முன்கூட்டியே திட்டமிடுவது நமது ஆழ் மனதில் உறுதியான உணர்வை உருவாக்க முடியும். மேலும் இலக்கை நோக்கி சரியான நடவடிக்கைகளை எடுக்கும்போது அது உறுதியாகிவிடும்.
‘முன்னால் சிந்திப்பது’ என்பது நாம் தடைகள் அல்லது பிரச்சனைகளை எதிர்பார்த்தாலும் அவற்றை பயனுள்ள முறையில் முகம்கொடுப்பதற்கான செயல்களைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
நம் இலக்குகளை அடைவதற்கு ‘முன்னால் சிந்திப்பது’ முக்கியமானதாக இருக்கும்.