எம்மை நகர்த்துவோம்…

எம்மை நகர்த்துவோம்

ஆம்..! எம்மை முன்னோக்கி நகர்த்துவது எப்படி? அல்லது இலக்கை அடைவது எப்படி?

அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல.
பேசுவதை விட எங்கள் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த விடயம்.

ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம் தான் இது.

படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும்,
இந்த விடயம் பலருக்கும் பலனாகவே இருந்து வருகிறது.

“குறைவாக பேசு, அதிகமாக வேலை செய்”
என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.
இதன் முதல் படி,
எங்கள் நேரம் மதிப்புமிக்கது என்பதைப் புரிந்துகொள்வது… எல்லோருக்கும் போலவே எமக்கும் ஒரே எண்ணிக்கையிலான நேரம் கிடைத்திருக்கிறது என்று ஏற்றுக் கொள்ளவது.

இரண்டாம் படி,
பேசுவதை விட நாங்கள் விரும்புவதை செய்வதற்கு அவதானம் கொடுப்பது. அதாவது பேசிப் பேசி இருப்பதை விட செயல்பாட்டில் ஈடுபடுவது…

மூன்றாவது படி,
வேலை செய்வதற்கும் பேசுவதற்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்வது.

வேலை செய்வது என்பது நாம் இருக்கும் இடத்திலிருந்து எழுந்து, முன் சென்று வேலையை முடிப்பதற்குச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வதாகும்.

பேசுவது என்பது வார்த்தைகளால் விடயங்களை விளக்குவதாகும்,
இதற்கு சில சமயம் நிறைய நேரம் எடுக்கும் அதேபோன்று எங்கும் செல்ல முடியாமல் அந்த இடத்திலேயே நிற்கவைத்தும் விடும்.

ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ஒரு அழகான வழிமுறை தான் பேசிப் பேசி இருப்பதை விட செயல்பாட்டில் ஈடுபடுவது என்பது.

எமது இலக்கை அடைய நடவடிக்கை எடுப்பது, அல்லது ஆசை ஆர்வத்துடன் வேலை செய்வது எங்களை நகர்த்துவதற்கான அழகான வழிமுறையாகும்.

நாம் ஒன்றுக்கு முகம் கொடுக்க பயந்தாலும், அல்லது தெரியாத எத்தனை தடைகளை நாம் எதிர்கொண்டாலும்,
நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது செயற்பட வேண்டும்.

நாம் செயலாற்றும் போது, ​​
▪நிறைய கற்றுக்கொள்வோம்,
▪புதிய யோசனைகள் உருவாக்குவோம்,
▪நாம் வளர்வோம்,
நாம் மிகவும்
▪ஆரோக்கியமான நபராக மாறுவோம்.
▪எண்ணற்ற நன்மைகளைப் பெறுவோம்.
▪ இலக்கை இலகுவாக அடைவோம்.

எல்லா வெற்றியாளர்களையும் பார்த்தால்….
அவர்களின் வெற்றிக்குப் பின்னால் ஒரே ஒரு பதில்தான் கிடைக்கும்.

அவர்கள் செயலாற்றினார்கள்.
முன்னோக்கி நகர்ந்தார்கள் என்பதே அந்த உண்மையான பதிலாகும்.

சில சிறிய, பெரிய தடைகள் எவற்றை சந்தித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்.
இறுதியில் வெற்றியை அடைந்து தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள்.

நாம் இலக்கை நோக்கி நகரும் போது மட்டுமே,
நாம் சிறப்பாக இருக்க வேண்டிய இடங்கள்…
மந்தமாக இருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள்..
மேற்கொள்ள வேண்டிய நுட்பங்கள் என்ன என்பதை அது நமக்கு உணர்த்துகிறது.

நாம் பேசுவதை குறைப்போம்… செயலாற்றுவதை கூட்டுவோம்…

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்
Back To Top