எம்மை மதிப்பதும் பாராட்டுவதும் …..
ஏன் முக்கியம்?
நம்மில் பெரும்பாலோர் நாம் நல்லவர்களா இல்லையா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும் என்று நினைக்கிறார்கள்
அதாவது எங்கள் மதிப்பையும் திருப்தியையும் மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறோம். அது கிடைக்கும்வரை காத்தி
ருக்கிறோம். பாராட்டை மதிப்பை மற்றவர்கள் தரும்வரை காத்திருக்கிறோம்.
நாங்கள் செய்ததை யாரும் பாராட்டவில்லை என்றால் என்ன செய்வது? மற்றவர்களின் பாராட்டை ஒப்புதலைக் கேட்பதற்குப் பதிலாக நாம எமக்குள்ளே இருந்து சுயமாகவே ஒப்புதல் கொடுத்தக்கொள்வதும் திருப்த்திப்பட்டுக்கொள்வதும் சுயமரியாதை ஆகும். இது ஒரு நல்ல நபரின் சிறந்த தன்மையாகும்.
மக்கள் பல சமயங்களில் பல விடயங்களில் பலம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவர்களை மதிப்பிடாமல் இருக்கலாம் அல்லது மதிப்பிட தெறியாமல் இருக்கலாம். அதே நேரத்தில் மற்றொரு நபர் அதே பலத்தை வித்தியாசமாக மதிப்பிடலாம். அது எமக்கு தெறியாமல் போகலாம்.
நம்மை நாம் மதிக்கவும் மதிப்பிடவும் தெறியாவிட்டால் நம்மை நாம் பாராட்ட மறந்து விடுவோம். மற்றவர்கள் எம்மை மதிக்கும்வரை பாராட்டும்வரை இருக்கலாகாது.
நம்மை மதிக்க ஒரு வழி நமது தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு எம்மைபற்றிய எதிர்மறையான பிழையான எண்ணங்களை எதிர்த்து எம்மீது ஒரு இரக்கமுள்ள மனநிலையை உருவாக்கிக்கொள்வதாகும்.
எங்களைப் பாராட்டுவது என்பது எங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்காமல் எங்களுக்குள் இருக்கும் நேர்மறையான நல்ல ஆற்றல்களை நல்ல செயல்களை உணர்வுடன் ஒப்புக்கொள்வதாகும்.
நம்மில் சிலர் அவர்களை மற்றவர்களைபோல் ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்.
நாங்கள் வேறொருவராக ஆக வேண்டும் என்று கனவு காணும்போது நாங்கள் யார் என்பதை மறந்துவிடுவோம் எங்களை மதிப்பதை நிறுத்திவிடுவோம்.
எங்கள் வாழ்க்கை ஒரு வீடு போன்றது. ஜன்னல்களை அழகாக்கவும் சுவர்களின் நிறங்களை மாற்றுவதற்கும் உறுதியான கூறை அமைப்பதற்கும் கனவு காண்பதில் தவறில்லை. ஆனால் வீட்டின் அடித்தளம் போதுமான அளவு வலுவாக இல்லாவிட்டால் வீடு எடையை தாங்காது – அது கண்முன்னே சரிந்துவிடும்.
எம்மைப் பற்றிய எமது அவநம்பிக்கைகளில் இருந்து விடுபடுவதற்கான எளிதான வழிகளில் ஒன்று நாம் நம்மை மதிப்பதும் பாராட்டிக்கொள்வதுமாகும். இது மிகப்பெரிய சக்தியாகும்.
நம்மை நாமே கட்டியெழுப்ப இந்த சக்தியைப் பயன்படுத்த வேண்டும்
எங்களுக்குத் தேவையான ஒரே ஆதரவாளர் நாங்கள் தான். நாம் இதை ஏற்றுக்கொண்டால் சுயமதிப்பின் – சுயபாராட்டின் நன்மைகளை எங்களுக்கு புரிய வைக்கும்.
சுயமரியாதையை வளர்க்கவும் எங்களை மதிப்பதற்கும் தினமும் அரைமணி நேரத்தை எடுத்துக் கொள்வோம். இது சுவாரஸ்யமாகவும் நம்பமுடியாத அளவிற்கு உற்பத்தித் திறனுடையவராக எங்களை மாற்றிக்கொள்ளவும் துணையாக இருக்கும்.
நாம் எம்மை ஏற்றுக்கொள்வோம்
எங்களுடன் புன்னகைப்போம்
நாமே எங்களுக்கு ஒரு பரிசு வழங்குவோம்
நாம் எப்போதும் நாமாகவே இருப்போம்
நம்மில் இருக்கும் நல்லவற்றைக் காண்போம்
முதலில் எம்முடன் அடக்கமாகவும் நன்றியுடனும் இருப்போம்
சுயமரியாதையும் மதிப்பும்தான் மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை. அது இல்லாமல் எங்களை பெரிதாகவோ ஆரோக்கியமாகவோ ஒருபோதும் உருவாக்க முடியாது.