கனவுகளின் உச்சிக்கு..
ஒரு ரோசா துண்டுக்கு கை கொடுக்கிறபொழுது
அது பூத்துக்குலுங்கும் செடியாக மாறுகிறது
இளந்தளிரே…..
என் விரல்களை
உண் விரல்களால்
கோர்த்துக்கொள்
நீ நடக்கும்
ஒவ்வொரு சாலையிலும்
நீ வைக்கும் ஒவ்வொரு அடியிலும்
நான் உன்னுடன் நடப்பேன்
உணக்கு சாயத் தேவைப்பட்டால்
என் தோள்பட்டையில் சாய்ந்துகொள்
நான் உன்னை கவனமாக
கூட்டிச் செல்கிறேன்
உண் கனவுகளை காணும்வரை