கவலையை சமாளித்து எப்படி? Postpone Worry

எண்ணங்கள் அல்லது நினைவுகள் மற்றும் உருவங்களின் எதிர்மறை பாதிப்பின் சங்கிலித்தொடராக வெளிவரும் ஒரு மனஉணர்வே கவலை என கருதப்படுகிறது.


அது இறந்த காலத்தோடு அல்லது எதிர்காலத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். இறந்த காலத்தில் நடந்த ஏதேனும் கசப்பான, காரமான நிகழ்வை ஒத்ததாக கவலை வெளிவரலாம். அல்லது எதிர்காலம் பற்றிய ஏதேனும் அச்சத்தின் வெளிப்பாடாக கவலை வெளிவரலாம். கவலை எந்த வடிவில் வந்தாலும் அதை எப்படிக் கட்டுப்படுத்தவது பற்றிய முக்கியமானதொரு நுட்பத்தினை இங்கு விவரிக்கிறோம்.


எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் சிலசமயம் எதிர்பாராத விதத்திலும் கவலை வரலாம். சிலசமயம் எந்த தூண்டுதலால் கவலை ஏற்படுகிறது என்பதை புரியமுடியாமலும் இருக்கலாம். ஆனால் கவலை எமது வாழ்க்கைச் செயற்பாடுகளுக்கு தடையாகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வித்தில் எம்மை அவதிப்படுத்தலாம். கவலை ஆக்கத்திறன் அற்றவர்களாகவும் எம்மை ஆக்கிவிடலாம். கவலை வரும் பொழுது அதை சமாளிக்க தெரியாமல் கவலையின் கூறாக தம்மை ஆக்கிக்கொள்ளும் மனிதர்களும் எம்மில் இருக்கின்றனர்.


கவலையை சமாளித்து எப்படி?


மனதை தைரியப்படுத்தி எம்வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக்கொள்வது எப்படி?

இதற்கானதொரு இலகுவான நுட்பத்தினை நாம் தெரிந்து கொள்வோம். கவலையை சமாளிப்பதற்கான ஒரு மிக எளிய நுட்பம்தான் அதை ஒத்திவைப்பது. கவலை ஏற்படும் பொழுது கவலையை ஒத்திவைக்க கற்றுக்கொள்வதன் மூலம் அதை முறையாக நிர்வகிக்கக்கூடிய ஆற்றலை பெற்றுக்கொள்ளலாம். அதே போன்று கவலையின் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஆகிவிடாமல் எமது கட்;டுப்பாட்டில் கவலையை வைத்துக்கொள்ளலாம்.


கவலையை எப்படி ஒத்திவைப்பது?


கவலையை ஒத்திவைப்பதற்கான முறைகள் மற்றும் நுட்பங்கள் இருக்கின்றன. இந்த அனுகுமுறையை மீண்டும் மீண்டும் பயிற்சிசெய்ய எம்மை தயார் படுத்திக்கொண்டால் கவலையை கட்டுப்படுத்துவதற்கான முறையை வளர்த்துக் கொள்ளலாம். இதற்கு சிறிது நேரமும் பொறுமையும் கட்டாயம் தேவை என்பதை முதலில் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

• கவலைப்படுவதற்கு ஒரு நேரத்தை ஒதுக்குதல்

• கவலைப்படுவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட நேரத்தையும் இடத்தையும் கால எல்லையையும் ஏற்படுத்திக்கொள்ளல். உதாரணமாக, (மாலை 6 மணி, இடம் – விராந்தை, கால எல்லை – 20 நிமிடங்கள்)

• இந்த நேரம், இடம் மற்றும் கால அளவு என்பன ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியாகவும் குறிப்பிட்ட நேரத்தில் அமையவும் வேண்டும்

• தெரிவு செய்யும் இடம் தனித்துவமானதாகவும் வசதியானதாகவும் தொந்தரவுகள் அற்றதாகவும் இருப்பதை உருதிசெய்துகொள்ள வேண்டும். உங்களுக்கு வசதியான நேரத்தையும் இடத்தையும் தெரிவு செய்துகொள்ளலாம். ஆனால் படுக்கை நேரத்திற்கு கிட்டியதாக இல்லாதிருப்பது மிகவும் நல்லது.

கவலையை ஒத்திவைத்தல்


காலையில், பகலில் அல்லது ஏதேனும் நேரத்தில் கவலையை உணர்ந்தால், உணர்ந்த உடனேயே கவலைப்படுதற்கென்றே ஏற்கனவே ஒதுக்கி வைத்திருக்கும் கவலைப்படுவதற்கான நேரத்திற்கு அதை ஒத்திப்போடுங்கள். ‘இப்போது நான் கவலைப்பட் தேவையில்;லை. கவலைப்படுவதற்கென்று ஒதுக்கியுள்ள நேரத்தில் அதை பார்த்துக்கொள்ளலாம்’ என்று கவலையை ஒத்திவைக்கலாம்.


கவளையை குறித்துக்கொள்ளல்


கவலையை மிகச்சுறுக்கமாக ஒரு குறிப்புப் புத்தகத்தில் ஓரிரு சொற்களில் எழுதிக்கொள்ளலாம். இந்த குறிப்புப்புத்தகம் எப்பொழுதும் உங்களுடன் இருக்கட்டும்.
கவலையை பற்றி யோசிப்பதற்கு நான் நேரம் ஒதுக்கியிருக்கிறேன் என்று உங்களையே நீங்கள் நினைவூட்;டிக் கொள்ளுங்கள்.
அவதானத்தை திருப்புதல்


• கவலைப்படுவதை குறித்த நேரத்திற்கு ஒத்திவைத்துவிட்டு தற்போதைய தருனத்தின் மீது அவதானத்தை திருப்புங்கள்

• கவலைப்படுவதற்கான நேரம் வரும் வரை அடை பற்றி யோசிக்காமல் அன்றாடம் செய்ய வேண்டிய விடயங்கள் மீது அவதானம் செலுத்துங்கள்

• இப்போது நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளை செய்வதற்கு உறுதியான தீர்மானம் எடுக்க மனதிற்கு அவகாசம் கொடுங்கள்

• பயனுள்ள, சுவாரஸ்யமான, இனிமையான செயல்களை செய்வதற்கு உங்களை உடனடியாக உட்படுத்திக்கொள்ளுங்கள்
கவலைப்படும் நேரத்தில் கவலைப்படல்

• கவலைப்பட ஒதுக்கிய நேரத்ததிற்குள் உங்கள் கவலையை கொண்டுவாருங்கள்

• கவலைப்படுவதற்கென்றே ஒதுக்கிய நேரத்தை அடையும் போது நீங்கள் குறித்துக்கொண்ட கவலைகள் பற்றி சிந்தித்துப்பார்க்கலாம்

• கட்டாயம் நினைவிற்கொள்ள வேண்டிய முக்கிய விடயங்கள்

• கவலைப்படவேண்டும் என்று நீங்கள் குறித்துக்கொண்ட விடயங்கள் பற்றி மட்டுமே கவலைப்படும் நேரத்தில் சிந்தித்தல்

• நீங்கள் எழுதிக்கொண்ட கவலைகளில் ஒன்றோ அல்லது பலதோ உங்களுக்கு தொந்தரவு செய்யவில்லை என்று உணர்ந்தால் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கத்தேவையில்லை

• நீங்கள் எழுதிக்கொண்டவற்றில் ஏதேனும் ஒன்றை அல்லது சிலதை பற்றிக் கவலைப்பட வேண்டியிருந்தால் நீங்கள் ஒதுக்கிய நேரத்தைவிட ஒரு நிமிடமேனும் செலவிட அனுமதிக்காதிருத்தல்
சுறுக்கம்

  • கவலைப்படுவதற்காக நேரத்தை, இடத்தை, கால அலவை ஏற்படுத்திக்கொள்ளல்
  • குறிப்பிட்ட நேரத்தில் குறித்துக்கொண்ட கவலையைப்பற்றி மட்டும் சிந்தித்தல்
  • அந்த நேரத்தில் வேறு கவலைகள் ஏற்பட்டால் அடுத்த முறைக்கு ஒத்திவைத்தல்

கவலைகளை ஒத்திவைக்கும் செயன்முறை அல்லது நாளில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் கவலைப்படுவது என்பது ஒரு விசித்திரமான விடயம் போல் தோன்றலாம். ஒரு குறிப்பேட்டை போகும் இடத்திற்கெல்லாம் எடுத்துச்செல்ல வேண்டுமா? என்ற வினாவும் உங்களில் தோன்றலாம். ஒன்றை அடைய வேண்டுமானால் அதற்கான சரியான திட்டமும், நுட்பமும், தொடரான முயற்சியும் கட்டாயம் தேவை என்பது எமக்குத் தெரியும்.


கவலைகளை ஒத்திவைக்கும் செயன்முறை ஒரு புதிய நுட்டபமும் புதிய திறனும் ஆகும். இதைத் தொடர்ந்து பயிற்சி செய்தால் மிக இலகுவாக உங்கள் இலக்கை அடைந்துகொள்ளலாம்.


கவலைகளை ஒத்தவைக்க முடியாது என்று பலர் நினைக்கலாம். இங்கு குறிப்பிட்ட முறையை தொடர்ந்து செய்து வந்தால் ஆச்சரியக்கூடிய அளவிற்கு அவர்களால் பல கவலைகளை வென்றுகொள்ளலாம். அதேநேரம் நாம் கவலைப்படுவதில் அதிகமானவை தேவையற்றவை, பயனற்றவை என்று எண்ணி நாம் வியந்து போகலாம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top