காதல் நிறைந்த திருமணம்
“சூரிய ஒளி இல்லாமல் ஒரு பூ மலர முடியாது போல ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்காமல் காதல் வளர முடியாது.”
எவரை நேசிக்கிரோமோ அவர் மீதான காதல் அதுவும் உண்மையான காதல் சட்டென்று நடப்பதில்லை. தற்செயலாக தோன்றுவதுமில்லை.
நேசிப்பவரை..
• உண்மையாகவே அறிந்து கொள்வது
• அவரை போற்றுவது
• ஆழமாக மதிப்பது
• அவரை ஒத்துக்கொள்வது
• அவருக்காக எதையும் கொடுக்க விரும்புவது
• அவருடன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது
• எதிலும் ஒன்றாக செயற்பட விரும்புவது
போன்ற அனைத்தினதும் கூட்டான பங்களிப்பு தான் உண்மைக் காதல் என்பது.
உண்மையான காதல் ஆழமான. தீவிரமான அக்கறை கொண்டது. அது தன்னலத்லிருந்து விலகி உதவி செய்யவும் அர் ப்பணிக்கவும் ஆசைப்படும் அழகான உணர்வாக இருக்கும். உண்மையான காதல் நெருக்கமான உறவு மலரும் மலர் தோட்டமாக இருக்கும்.
• இதுதான் உண்மையான அன்பின் உண்மைத் தன்மை
• இதுதான் உண்மையான திருமணத்தின் அடித்தளம்
• இதுதான் மகிழ்ச்சியான ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதற்கான சிறந்த இடம்
• இருவரும் ஒன்றாகி அவர்களின் முழுமையான பாதுகாப்பை உறுதிப்படுத்தும் இடமும் இதுதான்
உண்மையான இதயங்களால் இதமாக இணைக்கப்பட்ட திருமணங்கள்
• நன்கு வளர்ந்த ஒரு குடும்பத்தின் முதுகெலும்பும் தசையுமாகும்
• ஒரு ஆரோக்கியமான சமூகத்தின் அத்திவாரமாகும்
• ஒரு தேசத்தின் தலையும் இதயமுமாகும்
• ஒரு ஆன்மீகத் திட்டத்தின் ஒன்றியமுமாகும்
உண்மையான காதல் உண்மையான திருமணத்தை உருவாக்கும்.
உண்மையான திருமணங்கள் உண்மையான சமூகத்தை உருவாக்கும்
ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் ஒரு சரியான அணியாக மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பரிபூரணமாக, இணக்கமாக இருக்கும்போது உண்மையான திருமணம் உருவாகிறது.
கணவன் -மனைவி இருவரும் எப்போதும் எல்லா இடங்களிலும் எதையும் பகிர்ந்துகொண்டு ஒன்றாக வேலை செய்யும் போது அவர்கள் ஒரு குழுவாக மாறுகிறார்கள்.
அவர்கள் ஒவ்வொருவரும் மற்றவருக்கு கொடுக்க தயாராக இருப்பார்கள்.
ஒருவர் மற்றவருக்கு கொடுப்பதும் ஒருவர் மற்றவருக்கு அர்ப்பணிப்பதும் அவர்களின் அன்பை வலுப்படுத்தும் சிறகுகளாக இருக்கும்.
எப்போதும் காதலை விரும்பும் தம்பதிகளாகவும் காதல் வளர உழைக்கும் சிறந்த தம்பதிகளாகவும் இருப்போம்