பறவையும் கிளையும்
(நாம் இதை கவனமாக வாசித்து வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம்)
ஒரு சோர்வடைந்த பறவை ஒரு கிளையில் இறங்கியது.
அது அமைதியாக ஓய்வெடுத்தது. கிளையிலிருந்து காட்சிகளை பார்த்து ரசித்தது
அது ஆபத்தான விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் உறுதி செய்தது.
சற்று நேரத்தில் பறவை கிளைக்கு பழகியதும் கிளை வழங்கும் ஆதரவும் பாதுகாப்பும் உறுதியானது
சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த காற்று வீசத் தொடங்கியது
மரம் பாதியிலேயே முறிந்துவிடும் என்று தோன்றும் அளவுக்குத் வேகமாக ஆடியது.
ஆனால் இரண்டு முக்கியமான உண்மைகளை அறிந்திருந்ததால் பறவை கொஞ்சம்கூட கவலைப்படவில்லை.
ஆம்..! என்ன அந்த இரண்டு உண்மைகளும்?
• கிளை உடைந்தாலும் அதற்கு பறக்க முடியும் என்பதும் அதன் இரண்டு இறக்கைகளின் சக்தியால் பாதுகாப்பு கிடைக்கும் என்பதை உறுதியாக தெறிந்திருந்தது முதல் உண்மையாகும்
• ஓய்வுக்காக ஒரு குறிப்பிட்ட கிளைக்கு பழகியிருந்தாலும் மரத்தில் தற்காலிகமாக ஓய்வெடுக்கக்கூடிய பல கிளைகள் உள்ளன என்பதை அறிந்திருந்தது இரண்டாவது உண்மையாகும்
இந்த சிறிய கதை எம்முடைய தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பற்றி நிறைய சொல்லித்தருகிறது.
அன்றாட வாழ்வில் நாம் உணர்வதை விட அதிக திறன் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதையும் எம்மை நிலத்தில் வைத்திருக்கும் எமது உடல் மீது எமது பிடியையும் நம்பிக்கையையும் விடுவிக்கும்போது எமது சொந்த சக்தியால் எவ்வளவு தூரம் எம்மால் பறக்க முடியும் என்பதை புரிந்துகொள்ள வைக்கிறது.
எங்கள் வாழ்க்கையின் தோட்டம் முழுவதும் நாம் நம்பியிருக்கும் பல மரங்களும் பல கிளைகளும் உள்ளன.
சில நேரங்களில் நமக்கு மீட்பு மற்றும் தங்குமிடம் தேவைப்படும்போது இந்த பாதுகாப்பு ஆதாரங்கள் எப்போதும் நீடிக்காது என்பதை எமக்கு கற்றுக்கொள்ள வைக்கிறது.
எமக்குள் எப்போதும் நிரந்தரமானதாகவும் பக்கபலமாகவும் இருப்பது எமது சுயமரியாதை மற்றும் எம்முடைய தனித்துவமான திறன்கள் மீதான நம்பிக்கையாகும் என்பதை புறியவைக்கிறது.