சிகிச்சையாக செல்லப்பிராணிகள்
குணமாக்கிகளாக செயற்படும் செல்லப்பிராணிகள்
விலங்கு சிகிச்சை அல்லது செல்லப்பிராணி சிகிச்சை என்பது சில உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகளைச் சமாளிக்க விலங்குகளின் பயன்பாட்டை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சையாகும்.
செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் போது கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனப்பாதிப்புகள் அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது இதய நோய், புற்றுநோய் மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற உள-உடல் நலப் பிரச்சினைகளை குணப்படுத்த துணையானதொரு சிகிச்சை நுற்பமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
செல்லப்பிராணி சிகிச்சையால் கிடைக்கும் நன்மைகள்
• மன அழுத்தம் குறைதல்
• வலியின் உணர்வுகளை
• பயம் குறைதல்
• கவலை உணர்வுகள் குறைதல்
• சுயமரியாதை அதிகரித்தல்
• மனநிலை மேம்படுதல்
• தொடர்பு திறன் அதிகரித்தல்.
• தனிமை குறைதல்
என்பன சில முக்கியமான நன்மைகளாகும்.
இன்று மனச்சோர்வுக்கு சிகிச்சையளிக்க விலங்கு சிகிச்சை பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
உதாரணமாக செல்லப்பிராணியுடன் கொஞ்சும் போது நல்ல நரம்பியக்கடத்திகள் அதாவது எண்டோர்பின்களின் வெளிப்பாடு அதிகர்க்கிறது. இது மனச்சோர்வுக் கோளாறுகளை அனுபவிப்பவர்களுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அறியப்பட்டுள்ளது.
விலங்குகளை நேசிப்பவர்கள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் தொடர்புகொள்வது எவ்வளவு சுகமாகவும் மன ஆறுதலாகவும் இருக்கிறது என்பதை ஏற்கனவே அறிந்திருக்கிறார்கள்.
புறா, கிளி, மைனா போன்ற பறவைகளையும் நாய், பேசியன் பூனை, முயல் போன்ற விலங்குகளையும் அலங்கார மீன்கள் , கிளி மூக்கு கோழிகள் மற்றும் வாத்துகள் என்பன செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை அதிகம் பார்க்கிறோம். நாய்கள் பொதுவாக ஐரோப்பாவில் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன.
கிளிகள் குறிப்பாக அதிக சாந்தம் கொண்டவை என்று அறியப்படுகிறது.
அவை உணர்ச்சி ஆதரவு விலங்குகளாகவும் கருதப்படுகின்றன.
கிளிகளுக்கு வார்த்தைகள் மற்றும் சொற்றொடர்களை கற்பிக்க முடியும். அவை இலகுவாக கற்றுக்கொள்கின்றன.
செல்லப்பிராணிகள் ஆறுதல் அளிப்பதால் வீட்டில் அவற்றை வளர்ப்பதில் எமது இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுவதைக் காணலாம்.
செல்லப்பிராணிகளை வளர்ப்பது மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் நமக்கு உதவுகிறது. அத்துடன் இது கருவிகளுக்கு அடிமையாகாமல் இருக்க உதவுவதுடன் இயற்கையுடன் இணையவும் அன்பை வளர்கவும் வைக்கிறது.