டென்சன் பலருக்கு பலவிதங்களில் வருவதுண்டு

டென்சன் ஹெடேக்

டென்சன் பலருக்கு பலவிதங்களில் வருவதுண்டு. குழப்பமான, சங்கடமான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்கும் பொழுது சிலருக்கு அல்லது பலருக்கு இதனால் தலைவலி ஏற்படலாம்.
டென்சன் தலைவலியை அனுபவிப்பவர்களின் அறிகுறிகள் பெரும்பாலும் ஆழுக்கால் ஒத்ததாகவே இருக்கும். ஒருசில வேறுபாடுகளும் இருக்கலாம். பொதுவாக நோக்கும் போது…
• தலை, கழுத்து, கண்களின் பிற்புறத்தில் இலேசான அல்லது தீவிரமான வலி ஏற்படலாம்.
• நெற்றியில் ஒரு இருக்கமான பட்டி கட்டப்பட்டது போன்ற உணர்வும் ஏற்படலம்.

டென்சன் தலைவலிக்கு முகம் கொடுக்கும் பலர் கட்டம் கட்டமாக தலைவலியை அனுபவிக்கவும் செய்கின்றனர். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறைகளாக இது ஏற்படலாம் என்றும் சில மருத்துவ குறிப்புகள் கூறுகின்றன. டென்சன் தலைவலிக்கு வைத்தியரை நாடி முறையான சிகிச்சைகளைப் பெறாமல் அப்படியே விட்டுவிட்டால் அது காலப்போக்கில் நாட்பட்ட தலைவலியாக மாறிச்செல்லலாம்.

ஐக்கிய அமேரிக்காவில் ஒஹியோ மாநிலத்தில் உள்ள ‘கிலேவ்லேன்ட்’ எனும் மருத்துவமணை, டென்சன் தலைவலி பற்றி பல தகவலகளை வெளியிட்டிருக்கிறது.
பெரியவர்களுக்கு மத்தியில் பொதுவாகவே தோன்றும் ஒரு தலைவலிதான் டென்சன் தலைவலி என்பது.
முன்பு இதை தசை சுறுக்கத்தலைவலி, மனஅழுத்த தலைவலி என்று கூறியிருந்தாலும் இப்போது அந்தப்பதங்களில் அழைக்கப்படாமல் “டென்சன் தலைவலி” என்ற பதத்திலேயே அழைக்கப்படுகிறது.

டென்சன் வகை தலைவலி பலருக்கு அவ்வப்போது தோன்றி மறையலாம். காலத்திற்கு காலம் அல்லது கட்டம் கட்டமாக வரும் தலைவலியாக இருந்தால் மாதத்திற்கு 15 நாட்களுக்கு குறைவாக அல்லது நீடித்த தலைவலியாயின் மாதத்தின் 15 நாட்களுக்கு மேலாக ஏற்படலாம். இந்த வகை தலைவலி 30 நிமிடங்களில் இருந்து பல நாட்கள் வரை நீடிக்கலாம். கட்டம் கட்டமாக வரும் தலைவலி படிப்படியாக அரம்பித்து நாளின் நடுப்பகுதியில் அதிகரித்து வெளிப்படலாம்.
‘மிக்ரேன்’ எனும் ஒற்றைத்தலைவலியை போலன்றி டென்சன் வகையிலான தலைவலி…
• கடுமைநிலை அற்றதாகவே இருக்கும்
• தலையை சுற்றி இருக்கமான பட்டி கட்டப்பட்டது போன்று இருக்கும்
• தலையின் இருபக்கங்களிலும் வலியின் பாதிப்பு இருக்கலாம்
• அன்றாடம் செய்யும் செயற்பாடுகள் மற்றும் வேலைகள் காரணமாக நிலைமை மோசமடையாது
• ஒளி மற்றும் ஒலி உணர்திறன் தொடர்புபட்டதாக இருக்காது
• குமட்டல் மற்றும் வாந்தியுடன் தொடர்புபட்டதாகவும் இருக்காது

சிலசமயம் இது ஒரு இனம்புரியாத தலைவலியாகக்கூட எமக்கு தோன்றலாம். ஆரம்பத்திலேயே மனநல ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதால் இதிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top