டென்ஷன் தலைவலி என்பது பொதுவாக உங்கள் தலையில் ஒரு பரவலான பலர் அனுபவிக்கும் தலைவலியாகும். இது தலையைச் சுற்றி இறுக்கமான பேன்ட் அல்லது கட்டு இருப்பது போல் உணர்த்துகிறது. டென்ஷன் தலைவலி மிகவும் பொதுவான தலைவலியாகும்.
டென்சன் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள்
• டென்சன் தலைவலி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்ன என்பது பற்றி அறியப்படவில்லை.
• இந்தவகை தலைவலி பரம்பரையாக அல்லது குடும்ப வழியாக ஏற்படுவதுமில்லை.
• சிலரது தலைவலிக்கு கழுத்தில் மட்டும் உச்சம் தலையில் பின்னால் உள்ள தசைகளின் பிடிப்புஇ பதற்றம் காரணமாகலாம்.
• போதுமான ஓய்வு கிடைக்காமை
• முறையற்ற இருக்கை அல்லது படுக்கை நிலை
• உணர்ச்சி நிலைகள்
• மனஉழைச்சல்
• போன்றவற்றால் இந்த தசைகளின் பதற்றம் மேலும் மோசமடையலாம் என்று கருதப்படுகிறது.
• சுற்றுச்சூழுல் காரணங்கள் மற்றும் உள்ளார்ந்த அழுத்தங்களின் விழைவாகவும் பதற்றவகை தலைவலி ஏற்படலாம்.
இப்படியான காரணங்களால் தலைவலி ஏற்படுவது பற்றி சிலசமயம் தலைவலியை அனுபவிப்பவரும் அவர் குடும்பத்பதினரும் அறியாமல் இருக்கவும் முடியும்.
குடும்ப, சமூக உறவுகள், நண்பர்கள், தொழிற்துறைகள், கல்வி போன்ற வாழ்க்கை நிழைகளால் ஏற்படும் அழுத்தங்களால் மனஅழுத்தம் ஏற்படலாம் என்றும் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக மனஅழுத்தங்கயள தூண்டும் விடயங்களாக பின்வருவனவற்றை குறிப்பிடலாம்.
• வீட்டில் ஏற்படும் பிரச்சினைகளும் முரண்பாடுகளும்
• புதிய ஒரு குழந்தை வீட்டுக்கு வருதல்
• நெருக்கமான நண்பர்கள் இல்லாதிருத்தல்
• பரீட்சைக்கு அல்லது போட்டிக்கு தயாராகுதல்
• புதியதொரு தொழிலை ஆரம்பித்தல்
• இருக்கும் தொழில் இழந்துபோதல்
• உடல் பருமனாக இருத்தல்
• வேலைக்கு அல்லது விடயத்தில் உள்ள காலக்கேடு
• அனைத்தும் பூரணமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு
• போதியளவு உறக்கம் ஓய்வு கிடைக்காமை
• சமூக வேலை, நிறுவன வேலை என்று அளவுக்கு அதிகம் ஈடுபடல்
போன்றவற்றினால் ஏற்படும் அழுத்தங்கள் டென்சன் தலைவலியை ஏற்படுத்தலாம் என்று ‘கிலேவ்லேன்ட்’ மருத்துவமனை குறிப்பிட்டுக்காட்டுகிறது.
நாமும் இவ்வாறான வாழ்க்கை சவால்களுக்கு முகம் கொடுக்கும் போது அவற்றால் ஏற்படும் தூண்டல் நிறைந்த அழுத்தங்கள் டென்சன் தலைவலியை ஏற்படுத்தலாம்.
இந்த தலைவலி இங்கு குறிப்பிட்டவாறான வாழ்வுச்சவால்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் போவதனாலேயே ஏற்படுகிறது என்பதை நம்மில் பலர் அறிந்தும் அறியாமலும் இருக்கலாம். தலைவலி எப்படி ஏற்பட்டிருந்தாலும் வைத்தியரை நாடி தகுந்த சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள தவரக்கூடாது.
இந்த தலைவலியை நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட வாழ்க்கை முறையால் அழகாக சமாளிக்க முடியும்