எம்மை பாதுகாத்து – மற்றவர்களை பாதுகாப்போம்
தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பவரின் இதயத்தில் எந்த எல்லையும் தடையும் இருப்பதில்லை.
மீண்டும் ஒரு சவாலான சந்தர்ப்பத்தை நாம் சந்தித்திருக்கிறோம். நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் ஒரு புதிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம்.
இந்த அபாயகரமான சந்தர்ப்பத்திலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் கமூகத்தையும் பாதுகாப்பது இப்போது எமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும்.
நாங்கள் சமூகமாக இருப்பதால் மற்றவர்களுடனான எமது தொடர்புகளை மிகவும் கவனமாக பேணுவதுடன் எமது சமூகத்தின் நல்ல ஆரோக்கியம் வளரவும் பாதுகாப்பு உறுதியடைவும் அக்கறை செலுத்துவது எம் ஒவ்வொருவரினதும் கட்டாய பொறுப்பாகும்.
முதலில் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்வதை ஒரு வகை வழிபாடு என்று நினைப்போம்
இறைவன் நோயை தந்து எம்மை சோதிப்பதைவிட கட்டம் கட்டமாக நேயை தந்து அதிலிந்து விடுபட நாம் என்ன முயற்ச்சிகளை மேற்கொள்கிறோம், எவ்வாறு மற்றவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று பார்பதற்காகவும் அவன் எம்மை சோதிக்கலாம்.
சமுதாயத்தில் உள்ள அனைத்து மக்களின் ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதே இந்த நேரத்தில் எங்கள் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அதன் முதற்கட்டம் நாம் நம்மை பாதுகாப்பதாகும்.
நம்மைப் பாதுகாப்பதன் மூலம் நாம் மற்றவர்களைப் பாதுகாக்கிறோம்.
அப்படியானால் மற்றவர்களைப் பாதுகாப்பது என்பது நமது சமுதாயத்தைப் பாதுகாக்க உயர்ந்த ஆதரவை வழங்குகிறோம் என்பதவே இதன் பொருளாகும்
புறக்கணித்துவிடாமல் அரச சட்டங்களை, மருத்துவ வழிமுறைகளை முழுமையாக பின்பற்றுவோம்.
மருத்துவ அறிவுறுத்தல்களும் சுகாதார வழிகாட்டல்களும் எம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான கேடயமாக இருக்கலாம் என்று நம்புவோம்.
அவற்றை கைகளில் எடுப்போம்.
எம்மையும் எமது கமூகத்தையும் பாதுகாக்கும் காவலர்களாக இருப்போம்.
இறைவன் எம்மை சரியான பாதையில் வழிநடத்துவானாக