தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தாமல் பின்பற்றுவது ஒரு பெரிய பலவீனமாகும்

தவறான பின்பற்றல்

ஒரு சிறுமி தன் தாய் இரவு உணவிற்கு மீன் தயார் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தாய் “மீனின் தலையையும் வாலையும்” வெட்டிய பின்னர் சமையல் பாத்திரத்தில் வைத்தாள்.

“ஏன் மீனின் தலையையும் வாலையும் வெட்டிநீர்கள்” என்று சிறுமி தன் தாயிடம் கேட்டாள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு “நான் எப்போதும் அப்படித்தான் செய்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்படித்தான் செய்தாள்” என்றாள்.

தன் தாயின் பதிலில் திருப்தி அடையாத சிறுமி
“மீனை சமைக்கமுன் ஏன் தலையையும் வாலையும் வெட்டிநீர்” என்று தன் பாட்டியை கேட்டாள். பாட்டி சிறிது நேரம் யோசித்துவிட்டு
“எனக்குத் தெரியாது. என் அம்மா எப்போதுமே அப்படி செய்ததைத்தான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினாள்.

அவள் இன்னும் திருப்தி அடையாதலால் தனது பெரிய பாட்டியிடம் சென்று அதே கேள்வியை கேட்டாள்.
பெரிய பாட்டி சிறிது நேரம் யோசித்து விட்டு
“முழு மீனையும் சமைக்கப் போதுமானதாக என் சமையல் தட்டு இருக்கவில்லை, அதனால் நான் தலையையும் வாலையும் வெட்டினேன்” என்றாள்.

சில நேரங்களில் நாங்களும் இதுபோன்ற தவறை செய்கிறோம்.

ஒரு குறிப்பிட்ட வேலை எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரே முறையில் அப்படியே செய்யப்படுகிறது என்பதையே இக்கதை எமக்கு கற்றுத்தருகிறது. சரியா… பிழையா… ஏன் அப்படி செய்கிறார்கள்… என்று எம் சிந்தனைக் கண்களால் பார்க்காமல் மற்றவர்கள் செய்துவருவதை நாமும் அப்படியே பின்பற்றுகிறோம்.

எமது வாழ்க்கை மற்றவர்களின் பாதைகளை நகலெடுப்பதாக இருக்கக்கூடாது.

மக்களால் நிர்ணயிக்கப்பட்ட முறையற்ற வரம்புகளை மாற்றிச்செல்வதற்கு எமது சிந்தனைகள் மற்றும் திறன்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

அன்பு சகோதர சகோதரிகளே ….!

நாம் பின்பற்றும் பாதையைப் பற்றி சிந்தித்துப் பார்ப்போம்…!

எம் வாழ்க்கையில் நடைமுறைக்குப் பின்னால் உள்ள நம்பிக்கைகள் சரிதானா? என்று எம்மையே கேட்டுப் பார்ப்போம்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top