தாய்மை தாங்கக்கூடாத வலிகள்

பெண்ணின் மென்மையையும் அவளது மதிப்பையும் புரிந்து கொண்ட

கணவன் தன் கடமைகளை தவறவிடுவதில்லை

ஒரு தாய் பல வழிகளில் மனக் காயங்களை, மன வலிகளை அனுபவிக்கலாம்.
மனவலிகள் பலவிதங்களில் அவளை உரசிப் பார்க்கலாம்.

இருந்தாலும் அவள் அனுபவிக்கும் வலிகளில் மிகப் பெரியதும் மிக மோசமானதுமான ஒரு வலி அவள் கணவனால் அவளுக்கு வரும் மனவலி. பொறுப்பற்ற, கவனக்குறைவான, அன்பு ஆதரவு கொடுக்காத, அவ்வாறே போதைகளுக்கு அடிமையாகியுள்ள கணவன் தாங்க முடியாத வலிகளை தன் மனைவிக்கு கொடுக்கலாம்.

பிள்ளைகளோடு வாழும் ஒரு தாய்க்கு இப்படியான கணவனால் வரும் வலிகள் நீடித்தால் அது தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் வலிகளாக மாறி
பலரையும் வதைக்க ஆரம்பிக்கலாம். ஒரு குடும்பத்தில் ஒரு தாயின் இருப்பு என்பது மிகவும் சக்திவாய்ந்தது. குடும்பத்தை உயர்த்துவதற்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு
ஊக்கமளிப்பதற்கும் வலிமையை கொண்டுள்ள அடித்தளம் தாயின் இருப்பில் தான் இருக்கிறது. அவளது ஆரோக்கியமான வாழ்விலும்… அவளது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழங்கும் சலுகைகளிலும் தான் அவளது இருப்பு இருக்கிறது.

அதேநேரம் தாயின் இருப்பு சேதப்படுத்தப்பட்டால் இழிவுபடுத்தி அசிங்கப் படுத்தப்பட்டால் அது குடும்ப ஆற்றலை அப்படியே குறைத்து அழித்து விடும்
அபார சக்தியையும் கொண்டுள்ளது. தாய் மன அமைதியற்றவளாக, உணர்வுகள் உடைந்து போனவளாக இருந்தால் குழந்தைகளுடனும் குடும்பத்துடனும் ஒத்துப்போக முடியாதவளாக முடங்கிப் போவாள். நொந்து நெருங்கிவிடுவாள். ஒரு தாய் ஏதேனும் காரணங்களால் கடுமையாக மனக் காயப்பட்டால் அந்த காயம் ஆற வாய்ப்புகளும் கிடைக்காமல் போனால்… அது அவளது மனதிலும் குழந்தையின் ஆன்மாவிலும் குழப்பத்தையும் பேரழிவையும் உருவாக்கிவிடும்.

காயத்தோடும் தீராத வலிகளோடும் இருக்கும் தாய் ….

பலநேரங்களில் பாதுகாப்பாக இருக்க மாட்டாள் அல்லது மற்றவர்களுக்கு விரும்பத்தக்கவளாகவும் இருக்க மாட்டாள்.
அவள் ஒருபோதும் தன்னுடன் முழுமையாக இருக்க மறந்து விடுவாள். தன்னை மறந்து விட்டு குழந்தைகளை உருவாக்குவதற்கு ஓடித் திரிவாள். அவளுக்கு அவமானங்கள் கூட கேட்டுக் கேட்டு பழகிப்போன பாடல் போல் ஆகிவிடும்.

  • அழகான குடும்ப உருவாக்கத்தில்…வளமான சமூகத்தை வளர்த்தெடுப்பதில்…
  • ஒவ்வொரு தாய்க்கும் சரியான அன்பும் முறையான அக்கறையும் கொடுக்கப்பட வேண்டும்.
  • அவளுடைய தேவைகள் இயன்றளவு பூர்த்தி செய்யப்பட வேண்டும்
  • என்பதை கணவர்கள் அனைவரும் நன்கு நினைவில் கொள்ள கடமைப்பட்டிருக்கிறோம்.
  • மேலும் அவளது தாய்மை பக்குவமாக பாதுகாக்கப்பட வேண்டும். இல்லை என்றால் அவளை சேதப்படுத்தும் பொறுப்பை நாம் ஏற்க வேண்டிவரும் என்பதை ஒவ்வொரு கணவரும் உணரவேண்டி இருக்கிறோம்.
  • தாயின் மதிப்பையும்
  • தாய்மையின் புனிதத்தையும்
  • தாயின் தன்மையையும்
  • தாயின் பொறுமையையும்
  • தாய்க்குள் இருக்கும் பெண்ணின் மென்மையையும் புரிந்துகொண்ட

கணவன் குடும்ப வாழ்க்கையை வளமாக்குவதில் பொறுப்பு நிறைந்தவனாக இருப்பான்.
ஒரு நோய்வாய்ப்பட்ட சமுதாயத்தை உருவாக்குவதற்கு காரணமாக எந்த ஒரு கணவனும் இருந்துவிடாமல் தன்னை பாதுகாத்துக் கொள்வதிலும் தூய்மையான தாய்மை இந்த மண்ணில் அரங்கேற உதவிக்கரம் கொடுப்பதிலும் மிகவும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top