தூக்கத்தை முழிக்க வைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எமக்கு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் அது எங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாம் பயன்படுத்தவதென்றால் அது தொழில்நுட்பத்தின் பிழை அல்ல. அதை பயன்படுத்தும் முறையில் நாங்கள் விடும் பிழை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்க்கையை எளிதாகி, அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக ஆக்க உதவியாக இருப்பதுடன் எமக்கு இலகுவாக தகவல்களை வழங்கவும் எம்மை ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்த நவீன யுகத்தில் தடுக்க முடியாத ஒரு தேவையாகும் ஆகியிருக்கிறது. நாட் கணக்கில், வாரக் கணக்கில் நீடிக்கும் பல வேலைகளை ஒருசில நிமிடங்களில் செய்து கொள்ளக்கூடிய வாய்ப்புகளை இந்த ஸ்மார்ட் போன்கள் மூலம் செய்து கொள்கிறோம். ஆனால் இதன் அதீத பாவனை அல்லது அத்துமீறிய பாவனை எமது தூக்கத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்திவருவது வேதனை தரும் விடயமாக மாறி வருகிறது.
இதன் தாக்கம் இன்றைய காலத்தில் நாம் தூங்கும் போது கூட, உண்மையிலேயே இந்த போன்களை ஓப்f செய்ய முடியாது என உணரும்படி நம்மை கட்டாயப்படுத்தியுள்ளது. இது எங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்திவருவதை நாம் உணர்ந்தாலும் அதை ஏற்றுக் கொள்வதில் பாராமுகமாக இருக்கிறோம். அல்லது விதண்டாவாதமாக இருக்கிறோம்.

விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கச் செல்லும் நேரத்தில், நம் மூளைக்கு பல விதமான தகவல்களை கொடுக்கும் போது மூலை இன்னும் தூண்டுதலடைய வழிகளை நாமே வெட்டிக் கொடுக்கிறோம். அதாவது எங்கள் ஃபோனை சரிபார்ப்பது அல்லது தொடர்ந்து பாவிப்பது எங்கள் மூளை அதில் வேகமாக செயற்பட தூண்டுதலாக அமைகிறது” என்பதுவே இதன் பொருளாகும். ஃபோன் பாவனை இந்த நேரத்தில் எங்களை மிகவும் சுறுசுறுப்பாகவும் விழிப்புடனும் இருக்க வைத்து விடும். எங்கள் மூளையை அதில் ஆசையுடன் ஈடுபட வைத்து எங்கள் தூக்கத்தை தாமதப்படுத்தச் செய்துவிடும்.

நாங்கள் ஃபோனில் ஏதாவது ஒரு விடயத்தில் ஏதோ முறையில் ஈடுபட ஆரம்பித்த பிறகு எங்கள் மனம் சுறுசுறுப்பாகவும் மிகுந்த ஈடுபாட்டுடனும் செயற்பட ஆரம்பிக்கும். உறங்கும் நேரத்திற்கு மிக அருகில் எங்கள் மொபைலை தொடர்ந்து பயன்படுத்தும் பழக்கம் நீடித்தால் அது எங்கள் தூக்கத்தை பல விதங்களில் பாதிக்கச் செய்து விடும்.

இது ஆரம்பத்தில் எங்களுக்கு பாதிப்பில்லாத பழக்கம் போல் தோன்றலாம். ஆனால் இப்படி படுக்கைக்கு சென்று எங்கள் மொபைலைத் திறப்பது காலப்போக்கில் உண்மையாகவே எங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். எங்கள் ஃபோனை பார்த்து, நல்லதோ அல்லது எதுவோ செய்திகளைப் படிக்கும் செயல் அல்லது உரையாடும் செயல் எங்கள் கவனத்தைத் திசைதிருப்பிவிடும். படுக்கைக்கு செல்வதன் அவசியத்தை அதன் முறைகளை எல்லாம் மாற்றி ஒழுங்கு அற்றதாக ஆக்கிவிடும். விழித்திருக்க எங்கள் மூளையைத் தூண்டிவிடும். மற்றும் விரைவான கண் அசைவு தூக்கத்தை தாமதப்படுத்தி விடும். உண்மையில் எங்கள் மூளை புத்துணர்ச்சியடையும் போது அது எங்களின் சாதாரண உறக்க நேரத்தைத் தாண்டி பல மணிநேரம் எங்களை விழித்திருக்க செய்துவிடும்.

ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எமக்கு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் அது எங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாம் பயன்படுத்தவதென்றால் அது தொழில்நுட்பத்தின் பிழை அல்ல. அதை பயன்படுத்தும் முறையில் நாங்கள் விடும் பிழை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top