தோல்வி நம்மை வலுவாக்குகிறது

பலர் தோல்வியைப் பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கலாம்.
தோல்வியை சந்தித்த பயப்படலாம்….
ஆனால் உண்மையில், தோல்விகள் மிகவும் நல்ல தரத்தை, தைரியத்தை எம்மில் உருவாக்குவதற்கான அழகான வாய்ப்புகளை தருகின்றன.

பலதடவைகள் தோல்விகளை சந்திப்பவர்களை நாம் பார்த்திருக்கலாம்.

தோல்வி நம்மை வலுவானவர்களாகவும் நெகிழ்ச்சியுடையவர்களாகவும் ஆக்குகிறது.

மீண்டும் மீண்டும் தோல்வியடைபவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு விடாமுயற்சியை வளர்த்துக் கொள்கிறார்கள்.

அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் எட்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார்,
இரண்டு முறை வியாபாரத்தில் தோல்வியடைந்தார்.
மிகப்பெரிய அமெரிக்க ஜனாதிபதிகளில் ஒருவராக மாறுவதற்கு முன்பு ஒரு நரம்பு முறிவை சந்தித்தார்.

தோல்வியின் மூலம், கடினமான காலகட்டங்களின் மூலம் தனது நாட்டை வழிநடத்த தேவையான விடாமுயற்சியை அவர் வளர்த்துக் கொண்டார்.
ஒருவேளை அவர் பல தோல்விகளை சந்திக்காமல் இருந்திருந்தால் அப்படி அவரால் ஆக முடியாது போயிருக்கும்.

இது நமக்கு என்ன சொல்கிறது?

ரிஸ்க் எடுப்பது அல்லது அபாயங்களை சந்திப்பது என்பது ஒவ்வொரு முறையும் வெற்றி பெறுவதைக் குறிக்காது. சில சமயங்களில் அபாயங்களை எடுக்கும் செயல்முறை தோல்விக்கு வழிவகுக்கும், ஆனால் அதுவும் சிரமங்களிலிருந்து விரைவாக மீள்வதற்கான திறனை அதிகரிப்பதன் மூலம் நம்மை சிறந்த நபராக மாற்றி விடும்.

தோல்விகளை கண்டு பயப்படாதிருப்போம்…
தோல்விகள் நிறைய பாடம் சொல்லித் தருகின்றன.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top