வெற்றியை நோக்கி செல்வதற்குறிய பசிதான் எங்களை
இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரம்
வெற்றியை நோக்கி செல்லும் மனிதர்கள் அனைவரும் வெற்றிக்காக ஏங்குகிறவர்களாக இருப்பார்கள்.
ஏனென்றால் அவர்கள்…
அழகான,
ஆரோக்கியமான,
சிறந்த வாழ்க்கையை அடைவதற்கான பசியுடன் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் எல்லாவற்றிலிருந்தும் அதிகமானவற்றைப் பெற ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்!
வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள்.
அவர்கள் போதுமான தூரம் வரை பயணிப்பார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமான தூரம் போவார்கள்.
நதிபோல நகர்வார்கள்.
மேடு பள்ளங்களை தான்டுவார்கள்.
சவால்களை சமாளிப்பார்கள்.
சங்கடங்களை சரியாக சந்திப்பார்கள்.
அவர்களின் இடைவிடாத பயணம் இறுதியில் அவர்களை வெற்றி பெற வைத்துவிடும்.
வெற்றி என்பது போராடி அடைய வேண்டியது என்று நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்
எம்மிடமும் வெற்றிக்கான பசி இருக்க வேண்டும்.
செதுக்கும் உளியாக நாம் இருந்து நாம் செய்யும் எல்லாவற்றையும்
முழுவதுமாகவும் முறையாகவும் வடிவமைப்பு செய்ய வேண்டும்.
நாங்கள் சுவாசிக்க விரும்புவது போல்…. நாங்கள் வெற்றிபெறவும் விரும்பினால்….நாங்கள் இலகுவாகவே வெற்றியடைவோம்.
வெற்றியை நோக்கி செல்வதற்குறிய பசிதான் எங்களை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரமாகும்.
நதி ஒருபோதும் தலைகீழாக மாறி ஓடுவதில்லை.
எனவே நாமும் நதி போல் வாழ முயற்சி செய்வோம்.