நம்பிக்கையுடன் இருப்போம்
சிலர் மிகவும் கடினமான நேரங்களில் கூட உற்சாகமாக இருக்கின்றார்கள்.
ஆம்…
அவர்களால் எப்படி அவ்வாறு இருக்க முடிகிறது என்று நாம் கேட்கலாம்
நம்பிக்கையுடன் வாழ்வதே அவர்கள் உற்சாகமாக இருப்பதற்குக் காரணம்
ஆனால் நாம் கேட்க வேண்டிய
சிறந்த கேள்வி…
கடினமான நேரங்களில் “நான் எப்படி உற்சாகமாக இருப்பது❓ என்பது தான்”
நம்பிக்கை என்பது ….
எதிர்பார்ப்பு
வெற்றி மற்றும்
நேர்மறையான எதிர்காலம்
ஆகியவற்றால் வகைப்படுத்தப்படும் ஒரு மனோபாவமாகும்.
“நம்பிக்கையாக இருப்பது என்பது….
எதிர்காலத்தைப் பற்றி நேர்மறையாகவும் மகிழ்ச்சியாகவும் நம்பிக்கையுடன் நோக்குவதாகும். நல்ல விடயங்கள் நடக்கும் என்று எதிர்பார்ப்புடன் இருப்பதும் நம்பிக்கையாக இருப்பதாகும் நம்பிக்கையான கண்ணோட்டம் உள்ளவர்கள் ஆரோக்கியமான மற்றும் நீண்ட ஆயுளை அனுபவிக்கிறார்கள் என்பதை அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது,.
“நம்பிக்கையுள்ள மக்கள் பொதுவாக…
சரியான அணுகுமுறை மற்றும் சரியான நடவடிக்கை மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கிறார்கள். அவர்கள், சவால்கள், பிரச்சனைகள், சிரமங்கள், நோய்கள் இப்படி அனைத்தையும் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்கிறார்கள் கடினமான நிகழ்வுகள் நடக்கும்போது கவனத்தை மிகவும் நேர்மறையான மாற்றீட்டை நோக்கி திருப்புகிறார்கள். கடினமான நிகழ்வுகளை எப்படி வெற்றிகொள்வது என்று அவதானம் செலுத்துவார்கள்.
எந்த சூழ்நிலையாக இருந்தாலும் விடயங்கள் மேம்படும் என்று நம்புவார்கள்
நாம் இவர்களை போன்றவர்களா???
நன்றாக யோசிப்போம்….!
- நாம் நம்பிக்கையுள்ளவர்களா அல்லது
- நம்பிக்கையற்றவர்களா?
- நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கின்றவர்களா?
- கெட்டது நடக்கும் என்று யோசிப்பவர்களா?
- நாங்கள் பிரச்சினைகளை எதிர்பார்க்கின்றவர்களா அல்லது
- நல்ல முடிவுகளுக்காக காத்திருக்கிறவர்களா….
இந்தக் கேள்விகளைக் கேட்டு நம்மை நாமே பலப்படுத்திக் கொள்வோம்
நம்பிக்கையுடன் இருப்பது என்பது விடயங்கள் தானாகவே நடக்கும் என்று காத்திருப்பது அல்ல
- சிறந்ததை எதிர்பார்ப்பது
- நல்லது நடக்கும் என்று நம்புவது
- அதே நேரத்தில்
- முடிவுகளை எடுப்பது
- அவற்றைப் செயல்படுத்துவது
- பின்பற்றுவது
நம்பிக்கையுடன் இருப்பது என்பதாகும்.
நாம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம்பிக்கையுடன் இருக்க நம்மையும் நம் பிள்ளைகளையும் பயிற்றுவிப்போம்