கத்துவது அசிங்கமாகும்
நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம்.
ஏதேனும் பிரச்சினைகள் மனக்கசப்புகள் ஏற்படும் போது நம்மில் சிலர் இடம் பார்க்காமல், முன்னே இருப்பவர்கள்
எவர் என்றும் பார்க்காமல் அசிங்கமாக, ஆவேசமாக கத்துவதை, எடுத்தெறிந்து விழுவதை பார்க்கிறோம்.
மக்கள் முன்னிலையில் கத்திப்பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை அல்ல. ஆண்களாக இருந்தாலும்
பெண்ணாக இருந்தாலும் இப்படி நடந்துகொள்வது அசிங்கமானது.
எந்தவொரு கடினமான சூழ்நிலையை சமாளிப்பதற்கும் கத்துவது ஒரு ஆக்கபூர்வமான வழி அல்ல.
இருப்பினும் ஒவ்வொரு நபரும் கத்துவதில் ஈடுபடுகிறார்கள். சில மற்றவர்களை விட அதிகம் கத்துவார்கள்.
ஒருவர் மக்கள் முன் அநாகரீகமாக கத்தும்போது பதிலுக்கு பதில் என்று நாமும் கத்த ஆரம்பித்தால் விளைவு
விபரீதமாகிவிடும் என்பதை நாம் புரியவேண்டும்.
மக்கள் முன் எவர் கத்துகிறாரோ, கத்துவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கிறாரோ அவரின்
உணர்ச்சி உறுதியற்ற தன்மையில் பிரதிபலிக்கிறது என்பதே உண்மையாகும்…
அறியாமையால் கத்தினாலும் ஆணவத்தால் கத்தினாலும் உண்மை இதுதான்.
கத்துவதுதன் மூலம் சூழ்நிலையில் வலிமையையும் ஆதிக்கத்தையும் காட்டலாம் என் அவர்கள் நினைப்பார்கள்.
இந்த நேரத்தில் கத்தப்படுபவர்கள் சரியாக எதிர்வினையாற்றுவது முக்கியமாகும். அதேநேரம் பண்பாட்டுடன் வாழும் எவரும் எந்த சந்தர்ப்பத்திலும் கத்தமாட்டார்கள் என்பதையும் புரியவேண்டும்.
ஒருவர் கத்தும் போது, ஏன் கத்துகிறார் என்பதைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். ஏனென்றால் கத்துவது
பெரும்பாலும் அந்த நபரின் மனநிலையில் உள்ள சிக்கல்களைக் குறித்ததாக இருக்கலாம். அப்படி
இருக்குமானால் அது கத்துவதைப் பெறுபவருடன் எந்த தொடர்பும் இல்லை.
கோபத்தால் கத்தும் நபர்கள் கவனமாக இருக்க வேண்டும். “கோபம் என்பது ஒரு அமிலம், அது ஊற்றப்படும்
எதையும் விட….அது சேமிக்கப்பட்ட பாத்திரத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும்.” – என ‘மார்க் ட்வைன்’ அழகாக
விளக்கம் தருகிறார்..
கோபப்பட்டு கத்திப்பேசி உள உடல் சமநிலையை இழக்கச்செய்து நாமே நமது ஆரோக்கியத்தை நாசப்படுத்தி
கொள்ளக்கூடாது.
நிச்சயமாக கத்திய பின் வார்த்தைகளை மீளப்பெற முடியாது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மக்களுக்கு கத்துவதும் மக்கள் முன் கத்துவதும் ஆன்மீகத்திலிருந்து முற்றிலும் விலகியது என்பதை ஆழமான
மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம்.
நாம் வெளிப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும் பதிவு செய்யப்பட்டு இறுதி நாளில் கணக்கு கேட்கப்படும் என்பதை
நினைவில் கொண்டு, முரண்பாடுகளின் போது கூட, அவசரமும் ஆவேசமும் இல்லாமல் ஆணவம் காட்டாமல்
அமைதியான, ஆக்கப்பூர்வமான சொற்களை வெளிப்படுத்தும் வெள்ளை மனிதர்களாக இருப்போம்….