நாம் நமக்காக அதிக முதலீடு செய்வோம்
நாம் நமக்காக முதலீடு செய்வதுதான் நமது தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிக்க
துணையாக இருக்கும் இதை சுயநலம் என்று பலர் நினைக்கலாம். அது சுயநலம் அல்ல அது தனிப்பட்ட
முதலீடு.
நாம் நமக்காக எதை எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
- நாங்கள்தான் எங்களுக்கான சிறந்த சொத்து என்பதை நினைவில் வைத்து கொள்வோம்.
- ஒரு நல்ல பெயருக்கு தகுதியான ஒரு பிராண்டாக நம்மை நாம் பார்க்க வேண்டும்
- மக்கள் தங்கம் மற்றும் இரத்தினத்தை மதிப்பதைப் போலவே நாமும் எங்களை மதிக்க வேண்டும்.
- எங்களுக்கு சம்பந்தமில்லாதவற்றில் ஈடுபடுவதை தவர்த்துவிட்டு எங்கள் சொந்த விடயங்கள் மீது கண்டிப்பாக கவனம் கொள்ள வேண்டும்
- நாங்கள் ஒரு பணக்கார வீட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் புகழும் பெயரும் கிடைத்தாலும் அது வாழ்வை தொடர போதுமானதாக இல்லை என்பதை நாம் புரிய வேண்டும்
- எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்காக பாடுபடுவது மிகவும் முக்கியமானது அதேபோல் எமது சொந்த ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வதும் மிகவும் முக்கியமாகும் ஏனென்றால் ஆரோக்கியம் தான் உயர்வான செல்வம்.
- கல்வி என்பது ஒரு மிகச்சிறந்த முதலீடு ஆனால் எங்கள் வாழ்க்கையை கல்வியில் மட்டும் சார்ந்து இருக்க விடக்கூடாது சமூக திறன்கள், தகவல் தொடர்பு திறன், ஒருவருக்கொருவர் உதவும் திறன் போன்ற பல திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும்.
- எங்கள் அடுத்த நகர்வை யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது. நாம் எவருடனும் பந்தயத்தில் இருக்கத் தேவையில்லை. அதிகமாக செயல்படுபவர்களாகவும் குறைவாக பேசுகிறவர்களாகவும் இருப்போம்
- ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் நம் நண்பர்களை மதிப்பீடு செய்து நம் நேரத்தை வீணடிப்பவர்களை நீக்கிவிடுவோம் அல்லது அவர்களுடன் குறைந்த நேரத்தை செலவிடுவோம்
- நம்மை மதிக்கும் நபர்களுடன் அதிக நேரம் செலவிடுவோம்
- எங்கள் தனிப்பட்ட பணி கூற்றை வரைந்து அதை விடாமுயற்சியுடன் தொடர்வோம்.
- எந்த முடிவையும் எடுப்பதற்கு முன்னும் நமது மன முயற்சியில் ஈடுபடுடுவதுட ன் முன்கூட்டியே சிந்திப்போம்
- எமது செயற்பாடுகளை மதிப்பீடு செய்து கவனமாக பகுப்பாய்வு செய்வோம்.
- குறுகிய கால இலக்குகளை தவிர்த்து எப்போதும் நீண்ட கால இலக்குகளை தொடர்வோம்
- நாம் தீவிரமாகவும் சறுசுறுப்பாகவும் இருப்போம்
- எங்களுக்கு அதிகமான விடயங்கள் தெரியாது ஆனால் தெரிந்து கொள்ள வேண்டியவை பல உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொள்வோம்
இவை நம்மை வெற்றிக்கு இட்டுச் செல்லும் சிறந்த விதிகளாகும்.