நாம் சில சந்தர்ப்பங்களில்
சில விடயங்களுக்கு முகம் கொடுக்கவும்
சில விடயங்களை செய்யவும் பயப்படுகிறோம்.
பயம் என்பது நாங்கள் உண்மையிலேயே விரும்புவதை நோக்கிச் செயல்படுவதை தடுக்கும் காரணியாகும்.
பயம் எம்மை திசை திருப்பிவிடும் பலத்தை கொண்டது.
அதேநேரம் சாக்குப் போக்குகளுக்கு வழிவகுக்கவும் செய்கிறது.
ஆனால் பயம் ஒரு சாதாரண எதிர்வினை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
‘பயம் ஒரு போராளியின் சிறந்த நண்பன்’ என சொல்லப்படுகிறது. அதனால் பயம் என்பது வெட்கப்படக்கூடயதொன்றல்ல.
பயம் எங்களை கூர்மையாக வைத்திருக்கும் தன்மை கொண்டது.
அது எங்களை விழிப்புடன் இருக்கவும் செய்கிறது.
பயம் எங்களை உயிர்வாழ வைக்க வாய்ப்பை பெற்றுத் தருகிறது.
ஆனால் முக்கியமான விடயம் என்னவென்றால், பயத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை நாங்கள் கற்றுக் கொள்ள வேண்டும்,
சிலருக்கு பயம் நெருப்பைப் போன்று இருக்கும். அது உள்ளே ஆழமாக எரிந்து கொண்டிருக்கும்.
நாங்கள் அதைக் பதுக்கி வைத்தால், அது எங்களை சூடாக்கிக் கொண்டே இருக்கும்.
பயம் எங்களை அதன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருந்தால்… அது எங்களையும் எங்களைச் சுற்றியுள்ள அனைத்தையும் எரித்துவிடும்.
எல்லோருக்கும் ஏதோ ஒருவித பயம் இருக்கலாம்.
பயத்தை அனுபவித்த அனுபவமும் இருக்கலாம்.
ஆபத்தில் இருந்து எங்களைப் பாதுகாக்கும் ஒரு இயற்கையான உள்ளார்ந்த பயத்துடன் இறைவன் எம்மைப் படைத்துள்ளான்.
இருப்பினும் பெரும்பாலான நேரங்களில் பயம் மிகைப்படுத்தப்பட்டதாகவும் உளவியல் ரீதியாகவும் வெளிப்படுகிறது.
இயற்கையாகவே பயஉணர்வு எம்மிடம் இருப்பதால் நாம் அதுபற்றி மேலதிகமாக பயப்பட மனதிற்கு இடம் கொடுக்கக்கூடாது.
ஆனால் பயத்தில் எம்மை மூழ்கவிடாமல் அதற்கு முகம் கொடுக்கும்
பலசாலிகளாக எங்களை மாற்றிக் கொள்வோம்.
எங்கள் கட்டுப்பாட்டில் பயத்தை வைத்துக் கொள்வோம்.