மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல வழிகள் தேடுகிறார்கள்.
மகிழ்ச்சியாக இருப்பதற்கு நல்ல அதிர்ஷ்டம், புதிய சூழ்நிலைகள் எதுவும் தேவையில்லை.
சொத்து செல்வம், அறிவு ஆற்றல் என்பனவும் தேவை இல்லை.
வேடிக்கையான செயல்பாடுகள், வெற்றிகள், சாதனைகள்
அதிகாரம், அந்தஸ்து என்பனவும் தேவையில்லை.
இவை எதுவும் இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
அப்படியானால் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?
அது நமக்குள் தான் இருக்கிறது.
வானமும் காற்றும் நமக்கு வெளியே இருப்பதை போலவே மகிழ்ச்சி நமக்குள்ளேதான் இருக்கிறது.
நம்மை சுற்றித் தெரியும் எதிலும் மகிழ்ச்சி இல்லை.
கடல் அலைகள் போல் செல்வமும் புகழும் அதிர்ஷ்டங்களும் வாய்ப்புகளும்
வந்துவிட்டு போய்விடும். நாம் மகிழ்ச்சியை இவற்றுடன் இணைத்தால்
நாம் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியாது.
மகிழ்ச்சி நமக்குள்ளேதான் இருக்கிறது.
மிகவும் பிரபலமான கவிதை ஒன்றில்
கபீர் எனும் இந்திய கவிஞர்…
மனிதர்களை தாகம் இருப்பதாகக் குறைகூறும் மீன்களுடன் ஒப்பிடுகிறார்..
அவைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் தண்ணீரைக் குடிக்க முடியும் என்பதை உணராமல் இருக்கின்றன.
நம்மில் பலர் வெளிப்புற விடயங்களிலிருந்து மகிழ்ச்சியைத் தேடுகிறோம்.
எல்லா நேரத்திலும், அதைத் தேடி பூமியின் முனைகளுக்குச் செல்கிறோம்.
மகிழ்ச்சி எல்லாவற்றையும் விட நமக்கு அருகில் உள்ளது.
அது நம் சொந்த இருப்பில் உள்ளது என்பதை புரியாமல் இருக்கிறோம்.
நாங்கள் விரும்பிய வாழ்க்கையை வாழ்கிறோம் என்ற உணர்வு.
எங்கள் வாழ்க்கை நிலைமைகள் நன்றாக இருக்கின்றன என்ற உணர்வு…
வாழ்க்கையில் நாங்கள் விரும்பியதை சாதித்துவிட்டோம் அல்லது சாதிப்போம் என்ற உணர்வு…
எங்கள் வாழ்க்கை திருப்தியாக உள்ளது என்ற உணர்வு….
எதிர்மறையை விட நேர்மறையாக உணர்கிறேன் என்ற உணர்வு….
இவ்வாறான உணர்வுகள் எமக்குள் இருந்தால் ….
மகிழ்ச்சி எம்மோடு இருக்கிறது.. எமக்குள்ளே இருக்கிறது என்று உறுதியாக நம்பலாம்.
மகிழ்ச்சியை மனமார அனுபவிக்கலாம்.