மஜ்மாவின் மண்

இது வெறும்
கல்லறைகளை சுமந்த
பாழடைந்த மண் அல்ல
கொத்துக் கொத்தாய்
கொரோனா
கொத்திச் சென்ற
உடல்களுக்கு
அரண்மனை கட்டிய
கருணைமிக்க மண்
🌸
அன்று இது
சொட்டு நீர் இல்லாத
வறண்ட மண்
இன்று இது
சுவனத்து நீரூற்றை
நினைவூட்டும்
ஈரமான மண்
🌸
எரிக்கப்பட்ட
ஆன்மாக்களின்
ஏக்கங்களால்
ஏற்றம் பெற்ற மண்
கோடி பிரார்த்தனைகளால்
கோபுரமான மண்
🌸
மாற்றுமத உடல்களுக்கும்
அடைக்கலம் தரும்
தாராள மண்
பொறுமையின்
போராட்டத்தால்
புகழ்பெற்ற மண்
🌸
ஏழை எங்கள்
கை ஏந்தலுக்கும்
கண்ணீர் துளிகளுக்கும்
இறைவன் பரிசளித்த
தியாகத்து மண்
🌸
வறலாற்றுப் புத்தகத்தின்
முகப்பில் தூவப்பட்ட
புனிதமான மண்
🌸
காலத்தால்
கரைந்து போகாமல்
கல்பில் கலந்த
கண்ணியமான மண்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top