மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை

மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை

“பிரார்த்தனை என்பது இதயத்தின் வேண்டுகோள்,
திருப்தியை நோக்கி பயணிக்க முடியமான எளிய பாதை”

மனதைய இறைவனிடம் உயர்த்துவது, அவனிடமிருந்து நல்லவற்றை கோருவது.””தாழ்மையுடன் அவனிடம் மன்றாடுவது” இறைவனின் பல ஆசீர்வாதங்கள் மற்றும் கருணைக்காக நாம் அவனைத் துதித்து நன்றி செலுத்துவது எல்லாமே பிரார்த்தனையாகும், பிரார்த்தனை என்கின்ற இந்த வார்த்தை மரியாதை மற்றும் பக்தி மனப்பான்மையைக் கொண்டுள்ளது.

இறைவனிடம் நாம் என்ன கேட்கலாம்?
நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அவை எமக்கும் மற்றவர்களுக்கும் மிகவும் நன்மையாக இருக்க வேண்டும். பயனற்ற எதையும் நாம் ஒருபோதும் கேட்கக்கூடாது.
• மன்னிப்பு கேட்கலாம்.
• மனதை வலுப்படுத்தக் கேட்கலாம்
• உடைந்த மனதிற்கு அமைதியை கேட்கலாம்
• உடலை ஆரோக்கியமாக்க கேட்கலாம்
• தீமையிலிருந்து பாதுகாப்பு கேட்கலாம்
• நன்மை அதிகம் செய்ய நாட்டம் கேட்கலாம்
• எல்லாவற்றிலும் சிறந்ததை கேட்கலாம்

நாம் இறைவனை பிரார்த்தனை செய்வதால் அதிக நன்மைகளை பெற்றுக்கொள்கிறோம். குறிப்பாக எம் மனதிற்கு கிடைக்கும் நன்மைகள் முக்கியமானவை.
இறைவனை பிரார்த்திப்பவர்கள் கவலை, பயம், பதற்றம், ஆவேசம், பிழையான எண்ணம், நிர்பந்தமான நடத்தைகள், சமூக அச்சம் போன்ற மனப்பதகளிப்பு தொடர்பான கோளாறுகளை மிகக்குறைவாகவே உணர்கிறார்கள் என்று பேய்லர் எனும் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 1714 தன்னார்வலர்களை ஆய்வுக்கு உள்ளாக்கி இந்த தகவளை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வில் வழக்கமான பிரார்த்தனை, தியானம் மற்றும் ஆன்மீக பயிற்சிகள் மூளையின் புறணியின் பகுதிகளை அடர்த்தியாக்குவதாகவும் குறிப்பாக மனச்சோர்விலிருந்து பாதுகாக்க துணையாக இருப்பதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.

பிரார்த்தனையில், தியானத்தில் நாம் நிலைபெறும்போது எமது உள்ளம் ஆரோக்கியம் அடைவதுபோன்று உடலும் அழகும் ஆரோக்கியமும் அடைகின்றது.
மனக்கவலைகளில் இருந்தும் பிழையான, வேண்டாத எண்ணங்களிலிருந்தும் விடுபட, வாழ்வு வளம்பெற நாம் பிரார்த்தனைகள் செய்வோம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top