மனைவியை எப்படி மதிப்பது…!

அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது சிறுமைப்படுத்தப்பட்டாலோ எங்கள்
திருமண துணை காயமடைகிறாள். மதிக்கப்படும்போது அவள் மணமேடை மனம்
தருவதை நன்றாக உணர்கிறாள். தன்னை இழிவுபடுத்த முயற்சிப்பவர்களை
வெறுக்கிறாள். இதுதான் மனித இயல்பு.

மற்றவர்களை விட தன் கணவன் அவளை அதிகமாக மதிக்க வேண்டும் என்று
மனைவி நிச்சயமாக எதிர்பார்க்கிறாள். தன் வாழ்க்கைத் துணை தன்னைக்
கவனித்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அவளுக்கு
எல்லா உரிமையும் உண்டு.

நம் மனைவிக்கான மரியாதையை வெவ்வேறு வடிவங்களில் கொடுக்கலாம்.
அதை எல்லா கணவனாலும் செய்யலாம்.

  • அவளுடன் பேசும் போது புன்னகை நிறைந்த முகத்துடன் பேசலாம்.
  • அவள் பேசுவதை அவள் அருகில் உட்கார்ந்து அமைதியாக கேட்கலாம்.
  • அவளது மகிழ்ச்சியான நேரங்களையும் சோகமான நேரங்களையும் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு வழங்கலாம்
  • நம் மனைவியின் விருப்பு வெறுப்புகளை நாம் ஒரே மாதிரியாக இல்லாமல் பல வழிகளில் பார்க்கலாம்.
  • அவளுடைய நிலைமைகளை புரிந்து அவளுக்கு உதவலாம்.
  • நாம் மிகவும் அக்கறையுடன் அவளை நேசிக்கிறோம் என்பதை அவளுக்கு உணர்த்தலாம்.
  • அவளின் கருத்துகளையும் யோசனைகளையும் எடுத்துக் கொள்ளலாம்.
  • அவளுக்கு பிடித்த வாசனை அல்லது அவள் விரும்பும் எதையும் பரிசளிக்கலாம்.
  • அவள் சமையலை நாம் பாராட்டலாம்.
  • அவளது தவறுகளை தனிப்பட்ட முறையில் திருத்தலாம்.
  • அவள் கோபமாக இருந்தாலோ, பிடிவாதமாக இருந்தாலோ, மனநிலையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலோ அமைதியாக இருந்து நிலைமை சீராகும் போது அவளுக்கு விளக்கிச் சொல்வது மரியாதையின் வெளிப்பாடாகும்.
  • அவளை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதுகூட அவளை மதிக்கிறோம் என்பதற்கான ஒரு சான்றாகும்.

அவளை மதிக்கவும் மகிழ்விக்கவும் நாம் இப்படி சிறிய விடயங்களைச்
செய்யலாம். பெரிதாக ஒன்றும் தேவையில்லை.
இந்த சிறிய விடயங்கள் அனைத்தும் மரியாதையை உருவாக்கிவிடும்.
அவள் நமக்காகவும் நம் குழந்தைகளின் நல்வாழ்வுக்காகவும் அன்றாடம்
உழைக்கிறாள், எனவே அவளுடைய முயற்சிகளுக்கு மதிப்பளித்து அவளை
மதிக்க வேண்டும் என்று அவள் எதிர்பார்ப்பதில் தவறில்லை.
கணவன்-மனைவி இரு தரப்பிலும் ஒருவருக்கு ஒருவர் மரியாதையாக
இருந்தால், மணபந்தம் சமநிலையடைந்து ஆரோக்கியமான உறவுகள்
உருவாகிவிடும்.

மணஉறவில் மரியாதை இருக்கும்போது அங்கே திருமணக்காதல் தானாகவே
வளர்ந்து வாசம் வீசும்.

நாம் அனைவரும் நமது வாழ்க்கைத் துணைகளையும், நமது திருமண
உறவுகளையும் மதித்து, நமது துணையுடன் கைகோர்த்து மகிழ்ச்சியான அழகான
ஆரோக்கியமான திருமண பந்தத்தை நோக்கி பயணம் செய்வோம்.
(எமது அடுத்த பதிவில்
கணவனை மதிப்பது எப்படி என்று நோக்குவோம் ..!)

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top