எம் வாழ்வும் மன அழுத்தமும்
“மன அழுத்தம் எம்மை கொண்றுவிடுவதில்லை. நாம் அதற்கு முகங்கொடுக்கும் முறைதான் எம்மை கொண்றுவிடுகிறது”
சாதாரணமாக மன அழுத்தம் நம் எவருக்கும் எப்போதும் வரலாம். மன அழுத்தம் பொதுவாகவே குறுகிய கால மன அழுத்தமாக வந்து குறுகிய நேரத்திற்குல் முடிந்துவிடலாம். சில சமயம் நாள்பட்ட மன அழுத்தமாக ஆகி நீண்ட காலமாக நீடிக்கலாம்
மன அழுத்தம் என்பது எமக்கு தடங்கள்களை அச்சுருத்தல்களை தரக்கூடிய எந்தவொன்றையும் சமாளித்தக் கொள்வதற்கான ஒர் அழகான செல்முறையாகம். இவை இல்லாமல் வாழ்க்கை என்று ஒன்று இல்லை.
மன அழுத்த்தத்தை தரக்கூடிய பல நிகழ்வுகள் அன்றாட வாழ்வில் ஏற்படலாம். நாம் பல தடைகளை, சங்கடங்களை வாழ்வுப்பாதையில் சந்திக்கலாம்.
மன அழுத்தம் நாம் எதிர்பாராமல எம் வாழ்வில் நடக்கின்ற நிகழ்வுகளை எப்படி எதிர்கொள்வது என்று தீர்மாணிக்க உதவுகிறது. மன அழுத்தங்களை நாம் சந்தித்தாலும் அவற்றை எதிர்கொள்ளக்கூய வலிமை எம்மிடம் இருக்கிறது. இந்த வலிமையை தெறிந்துகொள்ளவும் சமாளிப்புத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் மன அழுத்தம் எமக்கு உதவுகிறது.
குறுகியகால மன அழுத்தத்திலிருந்து விரைவாக எங்களை மீட்டிக்கொள்ளக்கூடியவர்களாகவே நாங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளோம். அதனால் மன அழுத்தம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்த இடமளிக்காமல் நாங்கள் எவ்வளவு விரைவாக அதிலிருந்த மீண்டு வருகிறோம் என்பதைத் தான் மனநல வல்லுநர்கள் நெகிழ்ச்சித்தன்மை என்று வரையறுக்கிறார்கள்.
நாம் மன அழுத்தத்தை உணரும்போது எங்கள் இரத்த அழுத்தம், இதய துடிப்பு, சுவாச விகிதம் மற்றும் தசை பதற்றத்தின் நிலைகள் சிறிது நேரம் உயரக்கூடும். நாங்கள் ஆரோக்கியமாகவும் நல்ல நிலையிலும் இருந்தால் மன அழுத்தத்தின் இந்த குறிப்பான்கள் விரைவாக இயல்பு நிலைக்கு திரும்பிவிடும்.
நாம் நெகிழ்ச்சித்தனமை இல்லாதவர்களாக இருந்தால் நாள்பட்ட மன அழுத்தத்தைக் கையாள்வதில் எமது உடல் அவ்வளவு சிறப்பாக செயற்படுவதில்லை. காலப்போக்கில் இது படிப்படியாக எங்கள் ஓய்வு, இதய துடிப்பு, இரத்த அழுத்தம், சுவாச விகிதம் மற்றும் தசை பதற்றத்தின் அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால் நாள்பட்ட மன அழுத்தம் எங்கள் உடலில் ஒரு புதிய இயல்புநிலையை உருவாக்குகிறது. இந்த புதிய இயல்புநிலை இறுதியில் உயர் இரத்த அழுத்தம், இதய நோய், நாள்பட்ட வலி மற்றும் மன உழைச்சல் உள்ளிட்ட பல சுகாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
நாங்கள் நாள்பட்ட மன அழுத்தத்தை முகம்கொடுப்பவர்களாக இருந்தால் உடற்பயிற்சி, தியானம், யோகா அல்லது ஆழ்ந்த மூச்சுப் பயிற்சி போன்ற எளிய தளர்வு நுட்பம் மூலம் எங்கள் சமாளிப்புத் திறனை அல்லத நெகிழ்வுத் தன்மையை மேம்படுத்த முயற்சிக்கலாம். இந்த நடவடிக்கைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவற்றிற்காக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை தவறாமல் ஒதுக்குவதன் மூலம் மன அழுத்தத்தைக் கையாள்வதில் சிறந்த பயனை அடையலாம்.
மன அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவில் எமக்கு தேவையாக இருந்தாலும்
அதை நிர்வகிப்பது எப்படி என்று நாம தெரியவில்லை என்றால்
அது நாள்பட்டதாக மாறி எமது அன்றாட வாழ்க்கையை தொந்தரவு செய்யத் தொடங்கிவிம்.
நாம் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அதிக உற்பத்தித் திறனுடனும் இருக்க வேண்டுமானால் மன அழுத்தங்களை முறையாக சந்திப்பதும் பயனுள்ள மன அழுத்த மேலாண்மை நுற்பங்களை தெறிந்துகொள்வதும் முக்கியமாகும்.
Short URL : https://wp.me/pdjuxw-44