மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான காரணிகள்
- இளம் பருவம் என்பது மனநலத்தை மேம்படுவதற்கும், சமூக மற்றும் உணர்ச்சிப் பழக்கங்களை வளர்ப்பதற்குமான முக்கியமான காலகட்டம் என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். இருந்தாலும் இன்று பல்வேறு வகையான காரணங்களால் இளம் பருவப் பிள்ளைகள் பல்வேறு மனப் பாதிப்புகளுக்கு உற்படுகிறார்கள். அவற்றில்
ஹார்மோன் மாற்றங்கள்
சுற்றுச்சூழல் அழுத்தங்கள்
மரபணு காரணிகள்
கல்வி அழுத்தம்
போதைப்பொருள் பாவனை
துஷ்பிரயோகங்கள்
அதிர்ச்சிகரமான அனுபவங்கள்
ஊடகச் செல்வாக்கு
பொருத்தமற்ற வீட்டுச் சூழல்
சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள்
போன்றன மனநலம் பாதிக்கப்பட முக்கிய காரணங்களாக அமைகின்றன.
மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான காரணிகளை மூன்று கோணங்களில் பிரித்து நோக்கலாம்.
1. தனிப்பட்ட காரணங்கள்
2. குடும்பக் காரணங்கள்
3. சமூகம் சார்ந்த காரணங்கள்
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான தனிப்பட்ட காரணிகள்.
சுயம் பற்றிய பிழையான கணிப்பு
தாழ்வு மனப்பான்மை
கடினமான மனோபாவம் நெகிழ்வுத்தன்மை
எதிர்மறை மனநிலை
பின்வாங்குதல்
குறைந்த சுயமரியாதை
திறமையின்மை என்ற உணர்வு
எதிர்மறையான சிந்தனை
கல்வியில் நாட்டம் இன்மை
மனச்சோர்வு
சிக்கலைத் தீர்க்கும் திறன் இல்லாமை
சவால்களை சந்திக்க முடியாமை
பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கும் திறன் இல்லாமை
சமூக ஆதரவுக்கான தீவிர தேவை
பயம், கூச்ச சுபாவம் போன்ற உணர்ச்சி பிரச்சினைகள்
தன்னை பற்றிய பிழையான கணிப்பு இருக்கும் என்ற எண்ணம்
தன்னை மற்றவர்களோடு ஒப்பிடுதல்
போன்ற காரணங்களாலும் மன ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான குடும்பம் சார்ந்த காரணங்கள்.
பெற்றோரின் மனச்சோர்வு
பெற்றோர் பிள்ளை மோதல்
மோசமான குடும்பச் சூழல்
பெற்றோர்களின் பொருந்தாத பழக்கம்
பெற்றோர்களின் போதைப்பொருள் பயன்பாடு
பிள்ளை துஷ்பிரயோகம்
பாலியல் வன்கொடுமை
ஒற்றை பெற்றோர்
திருமண மோதல்
குடும்ப போதல்
விவாகரத்து
பெற்றோரின் வேலையின்மை
பெற்றோரின் மேற்பார்வை இல்லாமை
பெற்றோருடன் மோசமான இணைப்பு
தீராத நோய்கள் அல்லது மனப்பாதிப்புகள் கொண்ட குடும்ப உறுப்பினர்
போன்ற குடும்ப சார்ந்த காரணங்களாலும் மன ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான சமூகம், பாடசாலை, சுற்றுச் சூழல் சார்ந்த காரணங்கள்.
சக நண்பர்களின் நிராகரிப்பு
மன அழுத்த நிகழ்வுகள்
மோசமான சகவாசம்
வறுமை
சமூக அளவிலான மன அழுத்தம்
அதிர்ச்சிகரமான நிகழ்வுகள்
பாடசாலை அளவிலான மன அழுத்தம்
கல்வி சார்ந்த தோல்வி
தனது கருத்துக்கள் எடுபடாமை
போட்டி மனப்பான்மை
வாய்ப்புகள் கிடைக்காமை
அங்கீகாரம் இல்லாமை
சமூக வன்முறை
வறுமை
போதைப் பொருள் பயன்படுத்தும் சகாக்களுடன் தொடர்பு
நகர்ப்புற அமைப்பு
மாறுபட்ட சகாக்களுடன் பழகுதல்
நெருங்கிய உறவு அல்லது நண்பர்களின் இழப்பு
போன்ற சமூகம், பாடசாலை, சூழல்
சார்ந்த காரணங்களாலும் மன ஆரோக்கியம் பெருமளவில் பாதிக்கப்படலாம்.
இவ்வாறான காரணங்களால் பாதிக்கப்படும் இளம் பருவத்தினர் மிக இலகுவாக மன அழுத்தம், மனப் பங்களிப்பு போன்ற மனோரீதியான பிரச்சனைகளுக்கு உட்படலாம்.
இது அவர்களிடம் நடத்தை மாற்றங்கள், கல்வி செயல்திறன் மாற்றங்கள், கவலை, சோர்வு, தனிமையை நாடுதல், ஊக்கம் உற்சாகம் குறைதல், கோபம் வெளிப்படுதல் போன்ற இன்னும் பல சங்கடமான மாற்றங்கள் வெளிவர காரணமாக அமையலாம்.
இளம் பருவத்தினரின் மன ஆரோக்கியத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் விடயங்கள் நாம் புரிந்து கொண்டு அவர்களை பாதுகாப்பதற்கான நுட்பங்களை கற்றுக் கொள்ளவும் கற்றுக் கொடுக்கவும் நாம் தயாராக வேண்டும்.