மன ஆறுதலும் அன்பும் தரும் இடம் கட்டிடம் கற்களால்ஆனது.
வீடு நம்பிக்கைகளாலும் கனவுகளாலும் ஆனது.
“வீடு போன்ற இடம் எங்கும் இல்லை”
“வீடுபோல் வராது”
“வீட்டைப்போல் சுகமான இடம் வேறெங்கும் இல்லை”
இப்படி வீடு பற்றிய அழகான சொற்பிரயோகங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். நாமும் சொல்கிறோம். வீடு என்றால் என்ன என்பதற்கும் பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படியானால் வீடு என்றால் என்ன?
- ஒருவன் தனது குடும்பத்தோடு வாழும் இடம்தான் வீடு’
- ஒருவன் பிறந்தது முதல் தொடர்ந்து தனது வாழ்க்கையை ஓட்டிச்செல்லும் இடம்தான் வீடு’
- மனிதனுக்குத் தேவையான கனிப்பும்இ காப்பும் அமைதியும் வைக்கப்பட்டிருக்கும் இடம்தான் வீடு’ பொதுவாகச் சொல்வதானால்
- வீடு பாதுகாப்பின் இடம்
- வீடு மனிதர்களின் புகளிடம்
- வீடு ஓய்வின் இருப்பிடம்
- வீடு மன ஆறுதலும் அன்பும் தரும் இடம்
- வீடு உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும் இடம்
- வீடு மதிப்பும் மறியாதையும் நிரம்பியுள்ள இடம்
- வீடு மற்றவர்களைப்பற்றி நல்ல அபிப்பிராயம் தரும் இடம்
- வீடு சுகமான சிந்தனையும் அழகான அறிவும் தரும் இடம்
- வீடு நல்ல மனிதர்கள் வாழும் இடம்
தாய் தந்தை பிள்ளைகள் இணைந்து வாழும் இடமாக அல்லது இன்னும் சில உறுப்பினர்கள் சேர்ந்து கூட்டாக வாழும் இடமாக வீடு காணப்படுகிறது.
தாய் தந்தை பிள்ளைகள் சேர்ந்த குடும்பம் எனும் நிறுவனம்தான் சமூகத்தின் எலும்பாக அல்லது அடித்தளமாக இருக்கிறது. குடும்பம் அழகும் ஆரோக்கியமும் அடையும் போது சமூகம் சமாதானத்தாலும் சௌபாக்கியத்தாலும் மலர ஆரம்பிக்கிறது. குடும்பம் பிரிவிற்குள், விரிசலுக்குள் விழுந்து விடும் போது சமூகம் கலாசார சீர்கேட்டால் சிதறிப்போக காரணமாகிறது. அப்படியானால் ஒரு குடும்பத்தின் வீழ்ச்சி சமூகத்தின் பல பிரச்சினைகளுக்கு வேராக மாறுகிறது.
- கணவன் மனைவி மனம்விட்டு கதைக்காத வீடுகள்
- பிள்ளைகளோடு நேரத்தைச் செலவிட முடியாத வீடுகள்
- ஒருவரோடு ஒருவர் உண்டு மகிழ வாய்பு இல்லாத வீடுகள்
- மனம் திறந்து உரையாட சந்தர்ப்பங்கள் கிடைக்காத வீடுகள்
- ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி என்று வாழ்கின்றவர்கள் உள்ள வீடுகள்
இவ்வாறான வீடுகள் சமூகத்தற்குச் சுமையாகவும் அச்சுறுத்தலாகவும் அமையும். இப்படியான வீடுகளுக்குள் வாழும் கனவனும் மனைவியும் நோயுற்றவர்களாகவே இருப்பார்கள். நோயுற்ற கனவனாலும் நொந்து போன மனைவியாலும் நோயுற்ற சமூகத்தைத்தான் உருவாக்க முடியும். கணவன் மனைவியின் ஆரோக்கியம்தான் வீட்டின் ஆரோக்கியம். வீட்டின் ஆரோக்கியம்தான் அழகான ஆளுமையுள்ள பிள்ளைகளுக்கான