நாம் விசேடமானவர்கள்
We Are Special
மிகச்சிறந்த மனிதக்குணங்களும் நடத்தைகளும் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன
நான் விசேடமானவர் என்ற உணர்வு உங்களுக்கு எப்பொழுதாவது வந்ததுண்டா? வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் அந்த உணர்வு எங்கிருந்து வந்திருக்கும்? அதன் அர்த்தம் எதுவாக இருக்கும்? என்று நாம் தேடிப்பார்ப்போம்.
நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் விசேடமானவர்கள். மனிதர்களாகப் பிறந்திருப்பதே நாம் விசேடமானவர்கள் எனபதற்கான மிகச் சிறந்த ஆதாரமாகும்.
- நாம் ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள்
- ஒப்புவமை அற்றவர்கள்
- ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவரோ தாழ்ந்தவரோ அல்லர்
- ஒவ்வொருவரும் முக்கியத்துவமும் மேன்மையும் உடையவர்கள்
அதனால்தான் நாம் விசேடமானவர்கள்.
அதிலும் நாம் விசேடமானவர் என்பதற்கு மிகமுக்கிய காரணமாக இருப்பது நாம் ஒவ்வொருவரும் இறைவனின் மதிப்புமிக்க பிரதிநிதிகளாக இருப்பதாகும். இதைவிடவும் என்ன விசேடம் எமக்குத் தேவைப்படுகிறது.
இந்த பிரதிநிதித்துவத்தால் இறைவனுக்கும் எமக்கும் இடையில் விசேடமான ஒரு உறவு இருக்கிறது.
- அந்த உறவால்தான் நாம் நிம்மதியடைகிறோம்
- அந்த உறவால்தான் எழுச்சி அடைகிறோம்
- அந்த உறவால்தான் அருள் பாக்கியங்களைப் பெருகிறோம்
- அந்த உறவால்தான் நல்ல குணங்களையும் ஆற்றல்களையும் பெற்றுக்கொள்கிறோம்
பொருட்பலத்தால், சமூக அங்கீகாரத்தால், மக்கள் புகழ்ச்சியால், பதவிகளால் நாங்கள் விசேடமானவர்களாக கருதப்படுகிறோம் என்ற எண்ணம் எங்களுக்கு வரவே கூடாது. அவற்றால் விசேடமானவர்களாக ஆகவும் முடியாது.
இறைவன் எமக்குத்தந்த அவனது பிரதிநிதித்துவமும் நாம் எம்மில் வளர்த்துக்கொண்ட மிகச்சிறந்த மனிதக்குணங்களும் ஆற்றல்களும் தான் எங்களை விசேடமானவர்களாக ஆக்குகின்றன என்ற நம்பிக்கையே எமக்கு வேண்டும்.
அதனால் சிறு பிராயத்திலிருந்தே ஒவ்வொரு பிள்ளையும், ஒவ்வொரு மாணவரும், ஒவ்வொரு மனிதரும் விசேடமானவர் என்று ஏற்றுக்கொள்வதும் அந்த உணர்வை அவர்களுக்குள் வளர்ப்பதும் வளர்த்துக்ககொள்ள துணைபுரிவதும் பெற்றார்கள், ஆசிரியர்கள், வளர்ந்தவர்கள், கற்றவர்கள் போன்ற ஒவ்வொருவரினதும் சமூகப்பொறுப்பாகும்.
நாம் விசேடமானவர் என்று ஏற்றுக்கொள்வோம். மற்றவர் விசேடமானவர் என்று எமக்கு தெளிவாக புரிந்துவிடும்