மூடப்படாத களஞ்சியம் – வீட்டுக் களஞ்சியம் வெறுமையாகலாம். நாட்டுக் களஞ்சியம் நட்டமாகலாம்.

பஞ்சம் வருமோ என்று
பயப்படாதே!
பட்டினி தாக்குமோ என்று
பதட்டப்படாதே!

உணவில்லையென்று
உன்னுடைய
உறவுக்கு முன்கூட
உருகிவிடாதே!

வீட்டுக் களஞ்சியம்
வெறுமையாகலாம்.
நாட்டுக் களஞ்சியம்
நட்டமாகலாம்.

உனைப் படைத்தவனின்
உணவுக் களஞ்சியம்
ஒரு கணப்பொழுதேனும்
ஓய்வதில்லை…

அவன் அழகாய்
அருளியதை,
வீணாக்கி
விரயமாக்காது

அளவாய்ப் புசித்து,
அதிகமாய்க் கொடுத்து,
பசித்தோனுக்குப்
பகிர்ந்து வாழ்.

மாபெரும் இறைவனிடத்தில்
கேட்பவனாய் இரு.
மனிதனுக்கு முன்
கொடுப்பனாய் இரு.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top