யார் அழகானவர்?
நான் அழகானவரா….?
அழகானவர் எப்போதும் தனக்கு உண்மையானவராக இருப்பார்
கவர்ச்சிகரமான தோற்றத்தை கொண்டவர்களும் கட்டான உடலை கொண்டவர்களும் நாகரீகமாக வாழ்கின்றவர்களும் தான் அழகானவர்கள் என்று பலர் நினைக்கலாம்.
ஆனால் உண்மை அதுவல்ல
இதயத்தின் அழகும் நடத்தையின் அழகும் ஒருங்கிணைந்து வெளிப்படுவதே மனினுக்கு அழகாகும். அதுவே மனிதனின் அழகாகும்
உடலை மட்டும் அழகுபடுத்துவது குற்றம் சொல்லக்கூடிய அழகாகலாம்
இதயத்தையும் நடத்தையையும் அழகுபடத்துவது பாராட்டப்படக்கூடிய அழகாகலாம்
உள்ளத்தின் அடித்தளத்தில் இருந்தும் வாழ்க்கையின் ஒவ்வொரு அனுபவத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக கட்டியெழுப்பப்படுகின்று அழகான நடத்தையின் வெளிப்பாடுகளே அழகாகும்
இந்த அழகை பெற்றுக்கொள்ள ….
அழகான வளர்ச்சியும் ஆரோக்கியமான மாற்றங்களும் தேவைப்படும்
காலத்தோடும் கல்வியோடும் வளர்ந்து செல்லும் குணமே அழகானவர்களாக எம்மை அடையாளப்படுத்திக் காட்டும்
அழகானவர்கள் தீடீரென தோன்றக்கூடியவர்கள் அல்ல’
என பிரபல மனோதத்துவ நிபுணர் எலிசபத் ரொபர் குறிப்பிடுவதிலிருந்து இதன் உண்மையை புரிந்துகொள்ளலாம்.
ஆம்..!
அழகான மனிதர்கள் பிறப்பதில்லை.
நல்ல பண்புகளால்
• அவர்கள் அவர்களை வளர்த்துக்கொள்கிறார்கள்
• அவர்கள் அவர்களை அழகாக்கியும் கொள்கிறார்கள்
என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்
அழகான மனிதர்கள்
- எப்பவும் சந்தோசமாகவே இருக்க ஆசைப்படுவார்கள்.
- அவர்கள் அதிகம் புண்ணகைப்பார்கள்.
- அமைதியாகவும் அழகாகவும்சிரிப்பார்கள்.
- மகிழ்ச்சியாகவும் உட்சாகமாகவும் இருப்பார்கள்
- புன்னகையில் மற்றவர்களை அணைத்துக்கொள்வார்கள்.
- எதிர்பார்ப்புள்ளவர்களாக இருப்பார்கள்.
- அவர்களைப் பார்க்கும் போது அவர்கள் மீது இலகுவாகவே ஈர்க்கப்பட்டுவிடுவோம்.
- அவர்களின் தோற்றம் மற்றவர்களை வரவேற்பது போல் இருக்கும்.
- அtர்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்கள் மீது கணிவும் கரிசனையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.
- மற்றவர்களுக்கு உட்சாகம் ஊட்டுவதிலும் வாழவும் வளரவும் உதவி ஒத்துழைப்பதிலும் ஆர்வமாய் இருப்பார்கள்.
- அவர்களது மொழி வளமானதாகவும் அவர்களது செயற்பாடுகள் தன்னலமற்றதாகவும் இருக்கும்.
- அவர்களது ஒவ்வொரு வார்த்தையின் வெளிப்பாட்டிலும் அவர்களது குணத்தின் அழகைக் காணலாம்.
- அவர்கள் ஒருபோதும் அவசரமோ ஆவேசமோ அடையமாட்டார்கள்.
- அமைதியும் நிதானமும் அவர்களில் நிறம்பியிருக்கும்.
- அவர்கள் முகம் கொடுக்கும் சந்தர்ப்பங்கள் எதுவாக இருப்பினும் அதை சளிக்கமாலும் முகம் சுலிக்காமலும் முகம் கொடுப்பார்கள்.
அழகான மனிதர்கள்
- அவர்களைக் கவணித்துக் கொள்வார்கள்
- அழகாகவும் அளவாகவும் உண்பார்கள்
- உடற்பயிற்சசிகளில் ஈடுபடுவார்கள்
- போதுமான அளவு உரங்குவார்கள்
- அவர்களது உடலுக்குப் பொருத்தமான ஆடைகளையே அணிவார்கள்
- அவர்கள் எப்பொழுதும் சங்கடங்களை சந்தித்து அவற்றை அர்த்தமுள்ளதாக மாற்றியமைத்துக் கொள்வார்கள்
இப்படி எத்தனையே குணங்கள் அவர்களை அழகுபடுத்திக் காட்டும்
நாமும் இப்படியான குணங்களால் நாமும் அழகானவர்களாக உண்மையான அழகிற்கு சொந்தக்காரர்களாக எங்களை ஆக்கிக்கொள்ளவே ஆசைப்படுவோம்.
இங்கு குறிப்பிடப்பட்டிருப்பது போன்ற குணங்கள் எங்களை நாம் உண்மையான அழகானவர்களாக மாற்றியமைத்துக்கொள்ள துணைபுரியும் வியங்களாக அமையலாம்.