வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி ?

வாசித்து நினைவில் வைத்துக் கொள்வது எப்படி ?
வாசிப்பு புரியவில்லை என்றால்,
சரியாக வாசிப்பைப் படிக்கவில்லை என்றாகிவிடும்

எந்தவொரு விடயத்தை வாசிக்கும்போது வாசிப்பதற்கான நோக்கம் இருப்பது மிக முக்கியமாகும்.
இது வாசிப்பதை நினைவில் கொள்வதற்கான முதற்காரணமாகும்.

நான் ஏன் இதை வாசிக்கிறேன்?
வாசிப்பதன் மூலம் எதை கற்கப்போகிறேன்?

என்பதை புரிந்தால் மட்டுமே வாசிப்பின் பயனை அடையலாம்

• வாசிக்கும் விடயத்தில் ஆசை, ஆர்வமாக இருத்தல்
• கவனத்தை வாசிப்பில் நிலைநிறுத்திக்கொள்ளல்
• வாசிக்கும் விடயத்துடன் சார்ந்த காட்சிகளை கற்பனையில் கொண்டுவருதல்
• மிக முக்கியமான வசனங்களை, பந்திகளை சத்தமாக வாசித்தல்
• வாசிக்கும் விடயத்தை ஏற்கனவே தெரிந்துவைத்துள்ள விடயங்களுடன் தொடர்புபடுத்திப் பார்த்தல்
• வாசித்தவற்றை மீண்டும் வாசித்துப் பார்த்தல்
• முடியுமானால் வாசித்ததை இன்னுமொருவருடன் பகிர்ந்துகொள்ளல்
என்பன மிக முக்கிய விடயங்களாகும்.

இந்த முறையில் வாசிக்கும்போது மூளையின் செயற்பாடுகள் மற்றும் உணர்ச்சிகள் தூண்டப்படுவதுடன் நினைவாற்றலும் கூர்மையாக்கப்படும்.
நாம் வாசிக்கும்போது எமது மூளை எம் கண்முன்னுள்ள சொற்களை புரிந்துகொள்தைப்போன்று சவாலான கருத்துக்களை சரியாக சீர்திருத்திக்கொள்ளவும் புதியவற்றை சிந்தனையில் உருவாக்கிக்கொள்ளவும் தூண்டுதலை ஏற்படுத்தும்.

நாம் ஒரு விடயத்தை வாசிக்கும்போது அந்தவிடயம் என்ன சொல்ல வருகிறது என்பதை புரியாவிட்டால் நாம் வாசிக்கவில்லை என்றே பொருளாகிவிடும்.
வாசிக்கும் விடயத்தினுள் என்ன இருக்கிறது என்பதை புரிந்துகொள்வதற்காகவே நாம் வாசிக்க வேண்டும் என்பதை நினைவிற்கொள்வோம்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top