விழுவோம்..! எழுவோம்..!
வாழ்வின் மேன்மை நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது
நாம் ஒவ்வொருவரும் ஏதாவது சந்தர்ப்பத்தால் தோல்வியடைகிறோம். ஆனால் எமது கணவுகளின் பின்னால், எதிர்பார்ப்புகளின் பின்னால் தைரியமாக முன்னோக்கிச் செல்வதை ஒரு போதும் நிறுத்திவிடக்கூடாது. நாம் தோல்வியைக் கண்டால் அவற்றை எதிர்கொண்டு கற்கவேண்டியதை கற்று தைரியமாக முன்செல்ல வேண்டும்.
“ரொபர்ட் புரூஸ் என்கின்ற ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த மன்னன் தனது யுத்தத்தில் தோல்வியடைந்தான். அவன் கடுமையாக மன அழுத்தத்திற்கு உட்பட்டு சோர்வடைந்திருந்தால் அவனது சிம்மாசனத்தை விட்டு விலகிக்கொள்வது நல்லது என எண்ணினான். அவன் ஆபத்தில் இருந்ததனால் அவன் மனம் ஆறுதல் அடையும் வரை ஒரு குகையில் பாதுகாப்பாக மறைந்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டான்.
செய்வது என்ன என்று குகையில் இருந்தவாரு ஆழமாக யோசித்துக்கொண்டிருந்த பொழுது குகைவாயிலில் சிலந்தி ஒன்று வலை பின்ன ஆரம்பிப்பதைக் கண்டான். அதையே பார்ப்பதற்கு அவன் மனம் நாடியது. சிலந்தி விழுவதும் மீண்டும் அதன் இடத்திற்கு வருவதும் மீண்டும் விழுவதும் மீண்டும் வந்து வலையை பின்னுவதும் மாறி மாறி நடந்துகொண்டிருந்தது. சிலந்தி தன் வலையை முழுமையாகப் பின்னும்வரை அமைதியாகவும் அவதானமாகவும் தன் பார்வையை செலுத்திக்கொண்டிருந்தான். சிலந்தி எப்படியோ விட்டுவிடாமல் அதன் வலையை கட்டடி முடித்தது
சிலந்தி தன் வலையை பின்னுவது சட்டென்று நடைபெரும் காரியமல்ல என்பதை உணர்ந்தான்.
சிலந்தி தன் முயற்சியை விட்டுக்கொடுக்காமல் ஒவ்வொரு தடவையிலும் ஒரு பிரச்சினையை முகம் கொடுத்து தனது தேவை நிறைவேறும்வரை போராடி வெற்றி பெற்றதை ஆச்சரியமாகவும் படிப்பினையாகவும் எடுத்து குகையிலிருந்து எழுந்து தனது படையினரை நோக்கி விரைந்தான். படையை மிகவும் நுற்பமாக பயிற்றுவித்தான். இருதியில் அவன் தனது அரியாசனத்தை வென்றெடுத்தான்.
“வாழ்வில் மேன்மை நாம் விழுந்துவிடாமல் எம்மை பாதுகாத்துக்கொள்வதில் இல்லை. நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது”
சங்கடத்தின்போது, பின்னடைவின் போது, முயற்சிகள் தோல்வியடையும் போது, தொழில்கள் நட்டமடையும் போது அவற்றுக்கு எதிராக செயற்படக்கூடிய ஒரு எதிர்விசை அல்லது மனத்திறன் எமக்குல் கண்டிப்பாக இருக்கிறது. இந்த ஒன்றே நாம் எழுந்து நிற்பதற்கு போதுமானது. பணத்தைவிட பலமானது எமது மனம். பணபலத்தால் வென்றவர்களைவிட மனபலத்தால் வென்றவரகளே உயர்வானவர்கள், உறுதியானவர்கள்.
எமக்கு ஏற்படும் தோழ்விகளால் நாம் சந்திக்கும் பிரச்சினைகளால் எமது மனம் கிழர்ச்சியடையலாம். தீவிர உணர்ச்சிகளை அனுபவிக்கலாம். அப்போதெல்லாம் எழுந்துவிட வேண்டும் என்று மனதை தைரியப்படுத்திக்கொள்ளும் நம்பிக்கை எமக்குத் தேவைப்படுகிறது.