தனித்துவத்தை இழந்து
தன்னிலை மறந்து வாழ்கிறார்கள்.உறவுகளின்
உயிரோட்டத்தை மறக்கிறார்கள்.
கருவிகளின் பிடியில்
கட்டப்பட்டு இருக்கிறார்கள்.திசை தவறிய பறவைபோல்
திக்கின்றி இருக்கிறார்கள்.
உயரிய இலக்கை அடைய
உழைக்காதிருக்கிறார்கள்.வெற்றிபெற்றவர்களை பார்த்து
வெறித்தனமாக இருக்கிறார்கள்.
சருக்கி விழுந்தவர்களை பார்த்து
சத்தமாக சிரிக்கிறார்கள்.சிந்தனையை மறைத்து
சீலை போட்டுக்கொள்கிறார்கள்.
மற்றவர் வார்த்தைகளை நம்பி
மயங்கிப்போகிறார்கள்.அடுத்தவர்கள் பற்றி
அதிகமதிகம் அலவளாவுகிறார்கள்.
தம்மைப் பற்றி நினைக்க
தவறிவிடுகிறார்கள்.அவர்களே அவர்களை
அளந்து சரியென்கிறார்கள்.
மற்றவர்களை வாய்கூசாமல்
மட்டிட்டு பிழையென்கிறார்கள்.வானைத்தொடுமளவு திட்டம்
வரைகிறார்கள்.
அளவில் குறைவாகவே
அடைந்து கொள்கிறார்கள்.புதிய மாற்றம் வேண்டுமென
புதுக்குரல் எழுப்புகிறார்கள்.
பழமைக்குள்ளேயே கால்களை
பலமாக வைக்கிறார்கள்.சந்தோசமாக இருப்பதாக
சத்தமாக சொல்கிறார்கள்.
முகமூடியுடன் வாழ்வதை
முழுவதுமாய் மறந்துவிடுகிறார்கள்