நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மிகவும் கவனமாக அவதானமாக இருப்பது விழிப்புடன் இருத்தல் எனலாம். தற்போதைய தருணத்தின் மீது கவனம் செலுத்துதல் விழிப்புடன் இருத்தலாகும்.
நாம் இப்போது என்ன செய்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருப்பதும் விழிப்புடன் இருத்தல் ஆகும்.
தன்மீதும் தன்செயல் மீதும் கவனத்துடன் இருப்பது என்பதும் விழிப்புடன் இருப்பதையே குறிக்கும்.
எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தேடித்தெரிந்து கொள்வது இதன் பொருளல்ல.
எமது பொறுப்புகள், எமது கடமைகள், எமது நடத்தைகள் மீது மனதை நிலைநிறுத்தி அவற்றின் மீது அவதானம் செலுத்துவது இதன் சரியான பொருளாகும்.
- நாம் ஒவ்வொருவரும் எமது தனித்துவமான வாழ்வின் மீது விழிப்புடன் இருந்தால் நாம் பொறுப்பானவர்களாகவும் எம்மை வளர்த்துக் கொள்ளக்கூடியவராகவும் கடமையை சரிவர நிறைவேற்றக்கூடியவராகவும் ஆகிவிடுவோம்.
நாம் ஒவ்வொருவரும் இயல்பாகவே எம்மில் கொண்டுள்ள ஒரு குணம்தான் விழிப்பாக இருத்தல் என்பது. அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதை நாம் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறோம். - நாம் ஒவ்வொருவரும் எம்மைப் பாதுகாத்துக்கொள்வதில் குறிப்பாக…
வெளியே செல்லும் போது
தனியாக பயணம் செல்லும்போது
மற்றவர்களோடு உரையாடும் போது
தேவையற்ற பொருட்களை தொட்டுப்பார்க்கும்போது
வெளியே சென்று வீட்டுக்கு வரும்போது
வாங்கிய பொருட்களை வீட்டுக்குள் கொண்டு செல்லும் போது -
இவ்வாறான மிக முக்கிய சந்தர்ப்பங்களில் மிகவும் விழிப்புடன் இருப்பது எங்களை பாதுகாத்துக்கொள்ள துணைபுரியும்.
அத்துடன் சுகாதார அதிகாரிகள் தருகின்ற ஆலோசனைகளை பின்பற்றுவது என்பதும் விழிப்புடன் இருந்து செயற்படுவதை குறிக்கும்.
எமது ஒவ்வொரு நடத்தையும் விழிப்புடன், அவதானத்துடன் வெளிவருமானால் எம்மை மிக இலகுவாக பாதுகாத்துக்கொள்ளலாம். எம்மை மிக இலகுவாக வளப்படுத்திக்கொள்ளலாம்.