வெற்றிகரமான திருமணத்திற்கான பாதை

உண்மையான அன்பும் ஒன்றுசேர்ந்து செயலாற்றுவதும் அமைதியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும்

ஒரு வீட்டைக்கட்டுவதற்கு கவனமாக முன்தயாரிப்புகளைச் செய்கிறோம். முதலில் நிலத்தை வாங்குகிறோம். திட்டப்படங்களை வரைகிறோம். நல்ல பொருட்களை தேடி வாங்குகிறோம். அத்திவாரம் இடுகிறோம். இப்படி அறிவையும் முயற்சியையும் பணத்தையும் பயன்படுத்தி வீட்டைக்கட்டி முடிக்கிறோம். ஒரு வீட்டை கட்டும் விடயத்தில் இந்த விதிகளை நாம் பின்பற்றுகிறோம் என்றால் ஒரு வெற்றிகரமான திருமணத்தை கட்டியெழுப்பும் விடயத்திலும் நாம் இதைவிட அழகான விதிகளை பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம்.

• ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு பங்களிப்புச் செய்யக்கூடிய எவ்வாறான பண்புகளை, இயல்புகளை நான் கொண்டிருக்கிறேன்? என்றும்
• நான் எப்படியான கணவனாய், மனைவியாய் இருக்கப்போகிறேன் என்றும் எண்ணிப்பார்க்க ஆரம்பத்திலேயே சிந்தனைக்கு அவகாசம் கொடுக்க வேண்டும்.

வெற்றிகரமான திருமணத்திற்கு பங்களிப்புச் செய்வது இருவருக்கும் உரித்தான மிகப்பெரும் சமூகப் பொறுப்பாகும்.

• இருவரும் இருவரைப்பற்றி தேடித் தெரிந்து
• இருவரும் இருவரையும் ஆழமாக புரிந்து
• இருவரும் இருவருக்கும் முழுமையாக அறிமுகமாகி
• இருவரும் ஒன்று சேர்ந்து உழைக்க ஆரம்பிக்கும் போது
வெற்றிகரமான திருமணத்திற்கான பாதை உருவாகிறது.

நீங்கள் திருமணமாகி சில அல்லது பல ஆண்டுகள் கழிந்தவராக இருந்தாலும் நான் இன்னும் சரியாக என் மனைவிக்கு, என் கணவனுக்கு அறிமுகம் ஆகவில்லையே என்று கவலைப்படத் தேவையில்லை. அதற்காக இந்த நிமிடத்திலிருந்தே இருவரும் மனம் வைத்து முயற்சிக்கலாம்.

கணவனை மனைவி தெரிந்துகொள்ளவும் மனைவியை கணவன் தெரிந்தகொள்ளவும் சில கேள்விகளை இங்கே தருகிறோம். அவற்றுக்கான பதில்களை எழுதிப்பார்க்கலாம். அல்லது அமைதியாக இருந்து மனதால் எண்ணிப்பார்க்கலாம்.

என் கணவர் பற்றி

1. என் கணவர் எப்படிப்பட்டவர்?
2. அவரைப்பற்றி ஓரிரு நல்ல வார்த்தைகள்…
3. அவரில் நான் காணும் ஒரு நல்ல பண்பு
4. எனக்கும் என் கணவருக்கும் இடையில் நேசம் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்
5. என் கணவர் என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய விடயம்
6. என் கணவருக்கு என்னில் வெகுவாக கவரும் ஒரு விடயம்
7. எனக்கும் என் கணவருக்கும் இடையேயுள்ள ஒரு ஒற்றுமை
8. என் கணவர் என்னில் மிகவும் விரும்பும் ஒரு விடயம்
9. நாம் இருவரும் தொடர்ந்து செய்து வரும் ஒரு நல்ல விடயம்
10. என் கணவரைப்பற்றி மற்றவர்கள் மூலம் கிடைக்கும் நல்ல செய்திகள்

உங்கள் மனைவி பற்றி

1. என் மனைவி எப்படிப்பட்டவள்?
2. அவளைப்பற்றி ஓரிரு நல்ல வார்த்தைகள்….
3. அவளில் நான் காணும் ஒரு நல்ல பண்பு
4. எனக்கும் என் மனைவிக்கும் இடையில் நேசம் இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம்
5. என் மனைவி என்னிடம் இருந்து எதிர்பார்க்கும் முக்கிய விடயம்
6. என் மனைவி என்னில் வெகுவாக கவரும் ஒரு விடயம்?
7. எனக்கும் என் மனைவிக்கும் இடையேயுள்ள ஒரு ஒற்றுமை?
8. என் மனைவி என்னில் மிகவும் விரும்பும் ஒரு விடயம்?
9. நாம் இருவரும் தொடர்ந்து செய்து வரும் ஒரு நல்ல விடயம்
10. என் மனைவியைப்பற்றி மற்றவர்கள் மூலம் கிடைக்கும் நல்ல செய்திகள்?

இவ்வினாக்களுக்கு பதில் தேடலாம்.
கிடைக்கும் பதில்களை இருவரும் பரிமாறிக்கொள்ளலாம்.
புது அறிமுகமும் புது உறவும் உருவாக ஆரம்பிப்பதை கண்டு மகிழ்வீர்கள்.

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top