மனிதனின் அழகு
மனித குணத்தின் ஆழத்தை ஆராய்ந்து பார்த்தால், மனிதனின் உண்மையான அழகு அவனது உடல் தோற்றத்தில் இல்லை, ஆனால் அது அவனது உள்ளத்தில் இருப்பதைக் காணலாம். அவனது ஆன்மாவில் இருந்து வெளிப்படுவதை புரியலாம். தோற்றம் அவனை மனிதன் என்று அடையாளப்படுத்துகிறது. அவனது அழகான குணங்கள் அவனை உயர்ந்த படைப்பாக எடுத்துக் காட்டுகிறது. நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மை, பொறுமை, பொறுப்பு, உண்மைத்தன்மை, விடாமுயற்சி, விசுவாசம், பணிவு, பாசம் போன்ற குணங்கள் மூலம் அழகு உள்ளிருந்து வெளிவருகிறது. மனிதன் ஆரோக்கியமாகவும் அழகாகவும்
மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான காரணிகள்
மன ஆரோக்கியத்திற்கு ஆபத்தான காரணிகள் இளம் பருவம் என்பது மனநலத்தை மேம்படுவதற்கும், சமூக மற்றும் உணர்ச்சிப் பழக்கங்களை வளர்ப்பதற்குமான முக்கியமான காலகட்டம் என்பதை நாம் புரிந்து வைத்திருக்கிறோம். இருந்தாலும் இன்று பல்வேறு வகையான காரணங்களால் இளம் பருவப் பிள்ளைகள் பல்வேறு மனப் பாதிப்புகளுக்கு உற்படுகிறார்கள். அவற்றில் ஹார்மோன் மாற்றங்கள் சுற்றுச்சூழல் அழுத்தங்கள் மரபணு காரணிகள் கல்வி அழுத்தம் போதைப்பொருள் பாவனை துஷ்பிரயோகங்கள் அதிர்ச்சிகரமான அனுபவங்கள் ஊடகச் செல்வாக்கு பொருத்தமற்ற வீட்டுச் சூழல் சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் போன்றன
இளம்பருவ மன ஆரோக்கியம்
இளம்பருவ மன ஆரோக்கியம் இளம்பருவம் என்பது 10 முதல் 19 வயது வரையிலான பிள்ளை பருவத்திற்கும் முதிர்வயதுக்கும் இடைப்பட்ட வாழ்க்கையின் ஒரு கட்டமாகும். இது மனித வளர்ச்சியின் ஒரு தனித்துவமான கால கட்டமாகும். மனித வாழ்க்கையின் நல்ல ஆரோக்கியத்திற்கான அடித்தளங்களை அமைப்பதற்கான முக்கியமான பருவகாலமுமாகும். இளம் பருவத்தினர் விரைவான உடல் மற்றும் உளவியல் வளர்ச்சியை அனுபவிக்கின்றனர். அத்துடன் இப்பருவத்தில் சிறந்த அறிவாற்றலும் வளர்ச்சி அடைகிறது. இந்த வளர்ச்சிகள் யாவும் அவர்கள் எப்படி விடயங்களை உணர்கிறார்கள், எப்படி சிந்திக்கிறார்கள்,
எங்கள் மீதான அன்பு
எங்கள் மீதான அன்பு நம்மில் சிலர் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்கு உறவுகள் இல்லை என்று கவலைப்படுகிறார்கள். மற்றவர்களின் அன்பும் உறவும் இல்லாமல் வாழவே முடியாது என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். இவை எல்லாம் என்றைக்கோ ஒரு நாள் பல பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நம்மில் பலர் புரிந்து கொள்ளவில்லை. அன்பும் உறவும் எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே, அவை எங்கள் முழு வாழ்க்கையும் அல்ல என்பதை நாம் முதலில் உணர வேண்டும். அன்பும் உறவும்
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….?
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪மற்றவருக்கு ஒரு நலவு நடக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்து தானும் அந்த சந்தர்ப்பத்தை அனுபவிக்கும் மனிதரை பார்த்ததுண்டா? ▪அல்லது மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் ஏதோ விதத்தில் விருப்பம் காட்டும் மனிதரை கண்டதுண்டா? இப்படியான ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உணர்ச்சி முதிர்ச்சியடைந்த ஒரு சிறந்த மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் உண்மையாகும். வாழ்க்கையில் சற்று நேரத்திற்கு நாம் நம்முடைய
எம்மை நகர்த்துவோம்…
எம்மை நகர்த்துவோம் ஆம்..! எம்மை முன்னோக்கி நகர்த்துவது எப்படி? அல்லது இலக்கை அடைவது எப்படி? அது ஒன்றும் பெரிய விடயம் அல்ல. பேசுவதை விட எங்கள் இலக்கை அடைவதற்காக வேலை செய்வதுதான் அந்த விடயம். ஒவ்வொரு வெற்றிகரமான நபரும் ஏற்றுக்கொண்ட ஒரு விடயம் தான் இது. படித்தவர், படிக்காதவர், படைப்பாற்றல் உள்ளவர், படைப்பாற்றல் இல்லாதவர் எவராக இருந்தாலும், இந்த விடயம் பலருக்கும் பலனாகவே இருந்து வருகிறது. “குறைவாக பேசு, அதிகமாக வேலை செய்” என்று சொல்வதை நாம்
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….?
மற்றவர் மகிழ்ச்சியில் நான்….? ▪️மற்றவர்களின் வெற்றியில் மகிழ்ச்சி காண்பவரை நீங்கள் கண்டதுண்டா? ▪️மற்றவருக்கு ஒரு நலவு நடக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி உற்சாகம் தந்து தானும் அந்த சந்தர்ப்பத்தை அனுபவிக்கும் மனிதரை பார்த்ததுண்டா? ▪️அல்லது மற்றவர்களின் வெற்றியை கொண்டாடுவதில் ஏதோ விதத்தில் விருப்பம் காட்டும் மனிதரை கண்டதுண்டா? இப்படியான ஒரு மனிதராக நீங்கள் இருந்தால் உணர்ச்சி முதிர்ச்சியடைந்த ஒரு சிறந்த மனிதராக நீங்கள் இருக்கிறீர்கள் என்பது தான் இதன் உண்மையாகும். வாழ்க்கையில் சற்று நேரத்திற்கு நாம் நம்முடைய
சுயமரியாதை
நாம் மற்றவருக்கு மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி கதைக்கிறோம். மரியாதையின் தேவையை அதன் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு விளங்க வைக்கிறோம். மரியாதை செலுத்துவதன் அவசியம் பற்றி பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கின்றோம். ஆனால் எமக்கு நாம் மரியாதை செலுத்துவதை பல சந்தர்ப்பங்களில் மறந்து விடுகிறோம். ஒருவர் அவர் மீது செலுத்தும் மரியாதையை அல்லது கௌரவத்தை சுயமரியாதை என்று அழைக்கப்படுகிறது. நாம் நம்மீது மரியாதை செய்ய வேண்டுமா? நாம் நம்மீது கௌரவம் செலுத்த வேண்டுமா? என்ற கேள்விகள் சாதாரணமாக எமக்குள் உருவாகலாம்.
தவறான புரிதல்கள்
தவறான புரிதல்கள் தொடர்பாடல் என்பது மனித வாழ்வின் அடிப்படையாகும். சிறந்த தொடர்பாடலில் இருந்து தான் சிறந்த உறவுகள் தோற்றம் அடைகின்றன. ஆரோக்கியமான தனிப்பட்ட உறவுகளை, குழு உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு கருவியாக இருப்பது சிறந்த தொடர்பாடல். இது எம்மிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான திறனாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இது நம்மில் பலருக்கு இருப்பதில்லை, இதன் விளைவாக நாம் தவறான புரிதலின் எளிதான இலக்குகளாக இலகுவாக மாறி விடுகிறோம். “நான் அதைச் சொல்லவில்லை, நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டீர்கள்”
பதறிய காரியம் சிதறிப் போகும்
அவசரம் என்பது ஒரு விடயத்தை விரைவாகவும், வேகமாகவும், சில சமயங்களில் கவனக்குறைவாகவும் செய்வதை குறிக்கும். அவசரம் என்பது ஒரு விசுவாசியின் குணம் அல்ல. சிந்தித்து நிதானமாகவும் அழகாகவும் ஒன்றை செய்வது தான் ஒரு உறுதியான விசுவாசியின் குணமாக இருக்க வேண்டும். அமைதி என்பது அல்லாஹ்விடமிருந்தும், அவசரம் ஷைத்தானிடமிருந்தும் வருகிறது என்று நாம் படித்து இருக்கிறோம். அவசரம் ஷைத்தானிடம் இருந்து வருகிறது என்றால்… அது மிகப் பெரிய தோல்விக்கு வழிவகுக்கும். மன வருத்தத்தைத் தரும். முன்செல்வதற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக
தாய்மை தாங்கக்கூடாத வலிகள்
பெண்ணின் மென்மையையும் அவளது மதிப்பையும் புரிந்து கொண்ட கணவன் தன் கடமைகளை தவறவிடுவதில்லை ஒரு தாய் பல வழிகளில் மனக் காயங்களை, மன வலிகளை அனுபவிக்கலாம். மனவலிகள் பலவிதங்களில் அவளை உரசிப் பார்க்கலாம். இருந்தாலும் அவள் அனுபவிக்கும் வலிகளில் மிகப் பெரியதும் மிக மோசமானதுமான ஒரு வலி அவள் கணவனால் அவளுக்கு வரும் மனவலி. பொறுப்பற்ற, கவனக்குறைவான, அன்பு ஆதரவு கொடுக்காத, அவ்வாறே போதைகளுக்கு அடிமையாகியுள்ள கணவன் தாங்க முடியாத வலிகளை தன் மனைவிக்கு கொடுக்கலாம். பிள்ளைகளோடு
தற்கொலைகள்
வாழ்க்கையில் சவால்கள், சங்கடங்கள், இழப்புகள் தவிர்க்க முடியாதவை. இவற்றை கண்டு ஓடி ஒளியவோ, முகம் கொடுக்க பயந்து வாழ்க்கையை மாய்த்துக் கொள்ளவோ தேவையில்லை. நாம் அனைவரும் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழவே இந்த உலகிற்கு வந்திருக்கின்றோம். வாழ்க்கையை பயனின்றி வாழவும் சங்கடங்களை சந்திக்க வேண்டி ஏற்படும் போது அவற்றை சந்திக்க முயற்சிக்காமல் வாழ்க்கையை அழித்துக்கொள்ள எமக்கு எந்த வகையிலும் அதிகாரம் தரப்படவில்லை. ஆனால் சிலர் பல்வேறு காரணங்களால் வாழ்க்கையை மாய்த்துக் கொள்வதை அல்லது தற்கொலை செய்து கொள்வதை
தூக்கத்தை முழிக்க வைக்கும் ஸ்மார்ட்ஃபோன்கள்
ஸ்மார்ட் போன் தொழில்நுட்பம் எமக்கு இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்தாலும் அது எங்கள் தூக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாம் பயன்படுத்தவதென்றால் அது தொழில்நுட்பத்தின் பிழை அல்ல. அதை பயன்படுத்தும் முறையில் நாங்கள் விடும் பிழை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஸ்மார்ட்ஃபோன்கள் நம் வாழ்க்கையை எளிதாகி, அதிக உற்பத்தித் திறன் கொண்டதாக ஆக்க உதவியாக இருப்பதுடன் எமக்கு இலகுவாக தகவல்களை வழங்கவும் எம்மை ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் வைக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை இந்த நவீன யுகத்தில்
நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம்.
கத்துவது அசிங்கமாகும் நாம் எவர் முன் எதை பேசினாலும் பேசும் விடயத்தை பற்றி இருமுறை யோசிப்போம். ஏதேனும் பிரச்சினைகள் மனக்கசப்புகள் ஏற்படும் போது நம்மில் சிலர் இடம் பார்க்காமல், முன்னே இருப்பவர்கள் எவர் என்றும் பார்க்காமல் அசிங்கமாக, ஆவேசமாக கத்துவதை, எடுத்தெறிந்து விழுவதை பார்க்கிறோம். மக்கள் முன்னிலையில் கத்திப்பேசுவது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடத்தை அல்ல. ஆண்களாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இப்படி நடந்துகொள்வது அசிங்கமானது. எந்தவொரு கடினமான சூழ்நிலையை சமாளிப்பதற்கும் கத்துவது ஒரு ஆக்கபூர்வமான வழி அல்ல. இருப்பினும்
மனைவியை எப்படி மதிப்பது…!
அவமானப்படுத்தப்பட்டாலோ அல்லது சிறுமைப்படுத்தப்பட்டாலோ எங்கள் திருமண துணை காயமடைகிறாள். மதிக்கப்படும்போது அவள் மணமேடை மனம் தருவதை நன்றாக உணர்கிறாள். தன்னை இழிவுபடுத்த முயற்சிப்பவர்களை வெறுக்கிறாள். இதுதான் மனித இயல்பு. மற்றவர்களை விட தன் கணவன் அவளை அதிகமாக மதிக்க வேண்டும் என்று மனைவி நிச்சயமாக எதிர்பார்க்கிறாள். தன் வாழ்க்கைத் துணை தன்னைக் கவனித்துக் கொள்ள வேண்டும், மதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க அவளுக்கு எல்லா உரிமையும் உண்டு. நம் மனைவிக்கான மரியாதையை வெவ்வேறு வடிவங்களில் கொடுக்கலாம். அதை