Author: அஸ்ஹர் அன்ஸார்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

மணவாழ்வில் மரியாதை

மணவாழ்வில் ஒருவரையொருவர் அவமரியாதை செய்வது அல்லது மரியாதை கொடுக்காமல் நடந்து கொள்வது நமது திருமண உறவை அழிக்கக்கூடிய மிக முக்கிய காரணங்களில் ஒன்றாகும். எந்தவொரு உறவின் அடித்தளமும் மரியாதையுடன் தான் தொடங்குகிறது. நாம் நமது துணையிடம் அவமரியாதையாக இருந்தால், நம் மண வாழ்க்கை உறவை எதுவாலும் காப்பாற்ற முடியாமல் போய்விடும். ஒருவரையொருவர் மதிப்பதன் மூலம் வலுவான, அழகான, ஆரோக்கியமான மணஉறவு கட்டமைக்கப்பட்டுகிறது. திருமணத்தின் வெற்றிக்கு மரியாதை மிகவும் முக்கியமானது, இது அன்பை விட உயர்ந்த இடத்தில் இருக்கிறது.

வாழ்க்கையை அளவிடுதல்

நாம் சிலசமயம் மற்றவர்களின் வாழ்க்கையை பார்த்து எமது வாழ்க்கையை அளவிட்டுப்பார்க்கிறோம். அவர்கள் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள்….. அவர்களுக்கு எதுதான் இல்லை…..நாம் எப்படி வாழ்கிறோம்……அவர்களுக்கும் எங்களுக்கும் எவ்வளவு வித்தியாசங்கள்…. இப்படி பல கோணங்களில் எமது வாழ்க்கையை மற்றவர்களின் வாழ்க்கையுடன் அளவீடு செய்கிறோம். இப்படி எமது வீட்டை, பொருளை, உடலமைப்பை, அறிவாற்றலை என பலவற்றை அளவீடு செய்கிறோம். அதிகப்படியான அளவீடு மனமகிழ்ச்சியை குறைத்து சுயமரியாதையை இல்லாமல் ஆக்கிவிடும். எங்களை விரக்தியில் ஆழ்த்திவிடும். மற்றவர்கள் முன் கோபப்பட வைத்துவிடும். அளவீடுகள் தொடர்ந்தால் பொறாமை

தெளிவான இலக்கும் நிறைவான பயணமும்

“பயணம் தெளிவானால் பாதையும் தெளிவாகும்” நாம் வாழ்க்கையில் இலக்குகளுடன் அல்லது எதிர்பார்ப்புகளுடன் நகர்கிறோம்.  அப்படி நகர்ந்தாலும் சிலசமயங்களில் அடைய ஆசைப்படுவதை அடைய முடியாது போகும் சந்தர்ப்பங்களை சந்திக்கிறோம். இன்னும் சில சமயங்களில் நம்மால் அடைய வேண்டியவற்றில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறோம். சில சமயங்களில் வாழ்க்கையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறோம். நாம் என்ன செய்கிறோம் என்பதைச் சரியாக செய்யாததனாலும் என்ன செய்ய வேண்டும் என்பதை சரியாகத் தெரியாததனாலும் நாம் இவ்வாறான நிலைகளை சந்திக்க நேரிடுகிறோம். எங்கள் பார்வையும்

எப்படி என்னை ஊக்கப்படுத்துவது

எங்களை ஊக்கப்படுத்துவது என்பது எங்கள் பலவீனங்கள் மற்றும் இயலாமைக்கு பதிலாக எங்கள் பலம், நேர்மறையான பண்புக்கூறுகள் மற்றும் திறன்களில் கவனம் செலுத்துவதாகும். நாம் நம்மை ஊக்கப்படுத்துவதன் மூலம் இவற்றை வெளிக் கொண்டு வரலாம். எப்படி எம்மை ஊக்குவிப்பது…… சில அழகான உறுதியான ஊக்கமளிக்கும் வார்த்தைகள் மூலம் எம்மை ஊக்கப்படுத்தலாம். உதாரணத்திற்கு சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறோம்.. என்னை சுற்றி நடக்கும் அனைத்தையும் என்னால் கட்டுப்படுத்த முடியாது, ஆனால் என்ன நடக்கிறது என்பதற்கு பதிலளிக்க வேண்டிய விதத்தை என்னால் கற்றுக்

தோல்வி நம்மை வலுவாக்குகிறது

பலர் தோல்வியைப் பற்றி எதிர்மறையான பார்வையைக் கொண்டிருக்கலாம். தோல்வியை சந்தித்த பயப்படலாம்…. ஆனால் உண்மையில், தோல்விகள் மிகவும் நல்ல தரத்தை, தைரியத்தை எம்மில் உருவாக்குவதற்கான அழகான வாய்ப்புகளை தருகின்றன. பலதடவைகள் தோல்விகளை சந்திப்பவர்களை நாம் பார்த்திருக்கலாம். தோல்வி நம்மை வலுவானவர்களாகவும் நெகிழ்ச்சியுடையவர்களாகவும் ஆக்குகிறது. மீண்டும் மீண்டும் தோல்வியடைபவர்கள் சிரமங்களை எதிர்கொண்டு விடாமுயற்சியை வளர்த்துக் கொள்கிறார்கள். அமெரிக்காவின் 16 வது ஜனாதிபதியான ஆபிரகாம் லிங்கன் எட்டு தேர்தல்களில் தோல்வியடைந்தார், இரண்டு முறை வியாபாரத்தில் தோல்வியடைந்தார். மிகப்பெரிய அமெரிக்க ஜனாதிபதிகளில்

நதிபோல் வாழ்வோம்

வெற்றியை நோக்கி செல்வதற்குறிய பசிதான் எங்களை இயக்கும் சக்திவாய்ந்த இயந்திரம்   வெற்றியை நோக்கி செல்லும் மனிதர்கள் அனைவரும் வெற்றிக்காக ஏங்குகிறவர்களாக இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள்… அழகான, ஆரோக்கியமான, சிறந்த வாழ்க்கையை அடைவதற்கான பசியுடன் இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லாவற்றிலிருந்தும் அதிகமானவற்றைப் பெற ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள்! வெற்றிக்காக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்கள் போதுமான தூரம் வரை பயணிப்பார்கள். அவர்களைச் சுற்றியுள்ளவர்களை விட அதிகமான தூரம் போவார்கள். நதிபோல நகர்வார்கள். மேடு பள்ளங்களை தான்டுவார்கள்.

மகிழ்ச்சியாக இருக்க

மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு பல வழிகள் தேடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருப்பதற்கு நல்ல அதிர்ஷ்டம், புதிய சூழ்நிலைகள் எதுவும் தேவையில்லை. சொத்து செல்வம், அறிவு ஆற்றல் என்பனவும் தேவை இல்லை. வேடிக்கையான செயல்பாடுகள், வெற்றிகள், சாதனைகள் அதிகாரம், அந்தஸ்து என்பனவும் தேவையில்லை. இவை எதுவும் இல்லாமல் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். அப்படியானால் மகிழ்ச்சி எங்கே இருக்கிறது? அது நமக்குள் தான் இருக்கிறது. வானமும் காற்றும் நமக்கு வெளியே இருப்பதை போலவே மகிழ்ச்சி நமக்குள்ளேதான் இருக்கிறது. நம்மை சுற்றித்

போராளியின் சிறந்த நண்பன்

நாம் சில சந்தர்ப்பங்களில் சில விடயங்களுக்கு முகம் கொடுக்கவும் சில விடயங்களை செய்யவும் பயப்படுகிறோம். பயம் என்பது நாங்கள் உண்மையிலேயே விரும்புவதை நோக்கிச் செயல்படுவதை தடுக்கும் காரணியாகும். பயம் எம்மை திசை திருப்பிவிடும் பலத்தை கொண்டது. அதேநேரம் சாக்குப் போக்குகளுக்கு வழிவகுக்கவும் செய்கிறது. ஆனால் பயம் ஒரு சாதாரண எதிர்வினை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ‘பயம் ஒரு போராளியின் சிறந்த நண்பன்’ என சொல்லப்படுகிறது. அதனால் பயம் என்பது வெட்கப்படக்கூடயதொன்றல்ல. பயம் எங்களை கூர்மையாக

எங்கள் எண்ணங்களின் உள்ளடக்கம் எங்கள் மனநிலையின் உள்ளடக்கங்களை தீர்மானிக்கிறது.

அதாவது எங்கள் எண்ணங்கள் எப்படி இருக்குமோ எமது மனநிலையும் அப்படியே இருக்கும். நாம் இதை இப்படி யோசித்துப் பார்ப்போம்…. நாங்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுகிறோம் என்றால், நாங்கள் மிகுந்த கவலையை உணரப் போகிறோம் என்று பொருள் கொள்ளலாம். நாங்கள் எப்போதும் கடந்தகால தவறுகளை நினைத்து வருந்திக் கொண்டிருந்தால், நாங்கள் மிகவும் வெட்கப்படப்போகிறோம் என்று பொருளாகிவிடும். நாங்கள் அநீதி இழைக்கப்பட்டுவிட்டோம் என்று எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருந்தால், நாங்கள் மிகவும் கோபத்தை உணரப் போகிறோம் என்றாகிவிடும். இவைகள் எல்லாமே

இருப்பதை இருப்பதாக ஏற்றுக்கொள்வேம். எனக்கு கிடைத்திருப்பது எனக்கானவை

ஒரு மீனவன் கடற்கரைக்கு அருகாமையில் பரந்து விரிந்த கிளைகளுடன் இதமான நிழல் கொடுத்துக் கொண்டிருக்கும் ஓர் மரத்தடியில் அமைதியாக சாய்ந்தவாறு கடலைப் பார்த்துக்கொண்டிருந்தான். அந்த இடத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு செல்வந்தர் அவனை பார்த்து… ‘நீ மீன் பிடிக்கச் செல்லாமல் ஏன் கடலை பார்த்துக்கொண்டிருக்கிறாய்?’ என்று கேட்டார். ‘இன்றைய நாளுக்குத் தேவையான மீன்களை நான் பிடித்து விட்டேன்’ என்று அந்த மீனவன் மிகவும் அமைதியாக பதில் கொடுத்தான். அதைக் கேட்ட அந்த செல்வந்தர் சற்றுக்கோபம் அடைந்தவாறு… ‘எந்தக்காரணமும் இல்லாமல்

ஆரம்பக் கல்வியும் நாட்டின் வளர்ச்சியும்

கல்வி என்பது மனித வளர்ச்சியின் அடிப்படை காரணிகளில் ஒன்றாகும். .. கல்வி மனிதனின் அறிவையும் திறமையையும் வளர்த்து நடத்தையை அழகாக்கி சமூக உறவை வளர்த்து அவனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ளவனாக மாற்றம் அடையச் செய்கிறது • கல்வி மனிதர்களின் உற்பத்தித்திறனையும் படைப்பாற்றலையும் உயர்த்துகிறது • சமூக முன்னேற்றத்தைப் பாதுகாக்க துணைசெய்கிறது • தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஊக்குவிக்கிறது • பொருளாதார விருத்தியில் அடிப்படை பங்காற்றுகிறது • வருமான விநியோகத்தை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது •

வெற்றிகரமான திருமணத்திற்கான பாதை

உண்மையான அன்பும் ஒன்றுசேர்ந்து செயலாற்றுவதும் அமைதியான திருமண வாழ்க்கைக்கு வழிவகுக்கும் ஒரு வீட்டைக்கட்டுவதற்கு கவனமாக முன்தயாரிப்புகளைச் செய்கிறோம். முதலில் நிலத்தை வாங்குகிறோம். திட்டப்படங்களை வரைகிறோம். நல்ல பொருட்களை தேடி வாங்குகிறோம். அத்திவாரம் இடுகிறோம். இப்படி அறிவையும் முயற்சியையும் பணத்தையும் பயன்படுத்தி வீட்டைக்கட்டி முடிக்கிறோம். ஒரு வீட்டை கட்டும் விடயத்தில் இந்த விதிகளை நாம் பின்பற்றுகிறோம் என்றால் ஒரு வெற்றிகரமான திருமணத்தை கட்டியெழுப்பும் விடயத்திலும் நாம் இதைவிட அழகான விதிகளை பின்பற்ற கடமைப்பட்டிருக்கிறோம். • ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு

கணவன்- மனைவி அறிமுகமாதல்

கணவன்- மனைவி அறிமுகமாதல் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அறிமுகமாதல் என்பது ஒரு நண்பர் மற்றொரு நண்பருக்கு அறிமுகமாதல் போன்றதல்ல. ஒரு ஆசிரியர் ஓர் மாணவருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. ஒரு மனிதர் இன்னொரு மனதிருக்கு அறிமுகமாதல் போன்றதுமல்ல. இந்த ஒவ்வொரு அறிமுகமும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தொடர்வது போன்று முடிந்துவிடவும் செய்யலாம். ஒரு தடவை அறிமுகமாகி அத்தோடு நிறைவு பெறவும் செய்யலாம். இவ்வாறான அறிமுகங்களுக்கு பெரும்பாலும் ஒரு எல்லையும் ஒரு முடிவும் இருக்கலாம். ஆனால் மணவாழ்க்கையில் ஒருவர்

உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்

மனிதர்கள் வாழும் இடம் “உங்கள் வீடுகளை மனிதர்கள் வாழும் இடங்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்” பிள்ளைகள் வளர்ப்பதில் வளர்வதில் அல்லது பராமரிப்பதில் பெற்றோர் பங்கு மிகவும் வலிமைமிக்கதாக இருக்கிறது என்பதை நாம் எவரும் மறுக்கமாட்டோம். பிள்ளை வீட்டில் வளரும் விதம் அல்லது வளர்க்கப்படும் விதம் அதன் எதிர்காலத்தை அழகும் அர்த்தமும் உள்ளதாக ஆக்கிக்கொள்ள திறவுகோலாக அமையலாம். அல்லது அசிங்கம் நிறைந்தாக மாற்றிக்கொள்வதற்கான மிக முக்கிய காரணமாக அமையலாம். பிள்ளைகள் வாழ்வை ஆரம்பிக்கும் முதலாவது இடமான ‘வீடு’ வரவேற்பு, அன்பு, அரவணைப்பு,

மன ஆறுதலும் அன்பும் தரும் இடம் கட்டிடம் கற்களால் ஆனது.

மன ஆறுதலும் அன்பும் தரும் இடம் கட்டிடம் கற்களால்ஆனது. வீடு நம்பிக்கைகளாலும் கனவுகளாலும் ஆனது. “வீடு போன்ற இடம் எங்கும் இல்லை” “வீடுபோல் வராது” “வீட்டைப்போல் சுகமான இடம் வேறெங்கும் இல்லை” இப்படி வீடு பற்றிய அழகான சொற்பிரயோகங்களை நாம் அடிக்கடி கேட்டிருக்கிறோம். நாமும் சொல்கிறோம். வீடு என்றால் என்ன என்பதற்கும் பல விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படியானால் வீடு என்றால் என்ன? ஒருவன் தனது குடும்பத்தோடு வாழும் இடம்தான் வீடு’ ஒருவன் பிறந்தது முதல் தொடர்ந்து தனது

Back To Top