Author: அஸ்ஹர் அன்ஸார்

மனோதத்துவ ஆலோசனை நிபுணர் மனோதத்துவ எழுத்தாளர்

தொழிலை எப்படித் தெரிவுசெய்கிறோம்

தொழிலை எப்படித் தெரிவுசெய்கிறோம் நாம் தெரிவு செய்யும் தொழில் அல்லது பெற்றுக்கொண்ட தொழில் பெரும்பாலும் மூன்று வழிகளில் தீர்மானிக்கப்படுகிறது. அப்படியாயின் தற்போதைய இளைஞராகட்டும் ,இளைஞர்களின் பெற்றோர்களாாகட்டும் எவராயிருப்பினும் அவரவர் தேர்ந்தெடுத்த தொழில் எந்த வகையில் அமைந்தது என்று பின்வரும் மூன்று முறைகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். 1.ஏற்கனவே குறிக்கப்பட்ட தொழில் பல குடும்பங்களில் பெற்றோர் செய்து வரும் தொழிலை அல்லது பரம்பரையாக வரும் தொழிலை செய்யுமாறு இளைஞன் பணிக்கப்படுகிறான். வியாபாரம், கடைத் தொழில், விவசாயம், தோட்டப்பராமரிப்பு, தச்சு வேலை

நாம் நமக்காக அதிக முதலீடு செய்வோம்

நாம் நமக்காக அதிக முதலீடு செய்வோம் நாம் நமக்காக முதலீடு செய்வதுதான் நமது தனிப்பட்ட வளர்ச்சியை அதிகரிக்க துணையாக இருக்கும் இதை சுயநலம் என்று பலர் நினைக்கலாம். அது சுயநலம் அல்ல அது தனிப்பட்ட முதலீடு. நாம் நமக்காக எதை எப்படி முதலீடு செய்ய வேண்டும்? நாங்கள்தான் எங்களுக்கான சிறந்த சொத்து என்பதை நினைவில் வைத்து கொள்வோம். ஒரு நல்ல பெயருக்கு தகுதியான ஒரு பிராண்டாக நம்மை நாம் பார்க்க வேண்டும் மக்கள் தங்கம் மற்றும் இரத்தினத்தை

சுயமரியாதை மற்றும் எம்முடைய தனித்துவமான திறன்கள் மீதான நம்பிக்கை

பறவையும் கிளையும் (நாம் இதை கவனமாக வாசித்து வாழ்க்கையின் யதார்த்தத்தைப் புரிந்துகொள்வோம்) ஒரு சோர்வடைந்த பறவை ஒரு கிளையில் இறங்கியது. அது அமைதியாக ஓய்வெடுத்தது. கிளையிலிருந்து காட்சிகளை பார்த்து ரசித்தது அது ஆபத்தான விலங்குகளிடமிருந்து பாதுகாப்பையும் உறுதி செய்தது. சற்று நேரத்தில் பறவை கிளைக்கு பழகியதும் கிளை வழங்கும் ஆதரவும் பாதுகாப்பும் உறுதியானது சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த காற்று வீசத் தொடங்கியது மரம் பாதியிலேயே முறிந்துவிடும் என்று தோன்றும் அளவுக்குத் வேகமாக ஆடியது. ஆனால்

எம்மை மதிப்பதும் பாராட்டுவதும்… ஏன் முக்கியம்?

எம்மை மதிப்பதும் பாராட்டுவதும் ….. ஏன் முக்கியம்? நம்மில் பெரும்பாலோர் நாம் நல்லவர்களா இல்லையா என்பதை மற்றவர்கள் தீர்மானிக்கட்டும் என்று நினைக்கிறார்கள் அதாவது எங்கள் மதிப்பையும் திருப்தியையும் மற்றவர்கள் தீர்மானிக்க அனுமதிக்கிறோம். அது கிடைக்கும்வரை காத்தி ருக்கிறோம். பாராட்டை மதிப்பை மற்றவர்கள் தரும்வரை காத்திருக்கிறோம். நாங்கள் செய்ததை யாரும் பாராட்டவில்லை என்றால் என்ன செய்வது? மற்றவர்களின் பாராட்டை ஒப்புதலைக் கேட்பதற்குப் பதிலாக நாம எமக்குள்ளே இருந்து சுயமாகவே ஒப்புதல் கொடுத்தக்கொள்வதும் திருப்த்திப்பட்டுக்கொள்வதும் சுயமரியாதை ஆகும். இது ஒரு

எப்படி முன்னால் சிந்திப்பது

“முன்னால் சிந்திப்பது” THINKING AHEAD எதிர்காலத்தைப் பற்றிய அல்லது எதிர்காலத்தை பயனுள்ளதாக ஆக்குவதற்கான வழிமுறைகளில் ஈடுபடும் திறனுக்குப் பயன்படுத்தப்படும் சொல்தான் ‘முன்னால் சிந்திப்பது’ நாளை என்ன நடக்கலாம் என்று யோசிப்பதன் மூலம் எதிர்கால சூழ்நிலைக்குத் தயாராவதற்கு நாம் முன்பே யோசித்து எம்மை தயார்படுத்திக்கொள்வதும் ‘முன்னால் சிந்திப்பது’ ஆகும். முன்கூட்டியே திட்டமிடுவது என்பதும் இதுவேயாகும். மனிதர்கள் எதிர்கால நிகழ்வுகளை மனரீதியாக உருவகப்படுத்தும் அற்புதமான திறனைக் கொண்டுள்ளனர். இருந்தாலும் எதிர்கால வெற்றி நம் வீட்டு வாசலில் ஒரே இரவில் வந்துவிடுவதில்லை

நாம் அனுபவிக்கும் கவலைகள்

கவலை….? ஏதேனும் அபாயத்தை அச்சுறுத்தலை சந்திக்க நேரிடும்போது எமக்குள் ஏற்படும் ஒருவகை சாதாரண உணர்ச்சிதான் கவலை என்பது. நாம் அனுபவிக்கும் கவலைகளை….. 1. யாதார்த்தமான கவலைகள் 2. பயனுள்ள கவலைகள் 3. சாத்தியப்படாத கவலைகள் 4. பயன்தரா கவலைகள் என நான்கு வகைகளில் பிரித்து நோக்கலாம். 1. யாதார்த்தமான கவலைகள் சில கவலைகள் யாதார்த்தமானவை. முகம் கொடுப்பதிலிருந்து தவிர்க்க முடியாதவை. நிகழக்கூடிய விடயங்களால் உருவாகும் கவலைகளே யதார்ததமான கவலைகள் எனப்படுகின்றன. தொற்று நோயொன்று பரவி வருவது பற்றிய

தியாகத்தின் உருவம்

ஒரு தாய் இன்னொரு பிள்ளைக்கு தாயாகிறாள் இறைவனின் அருற் பிரதிநிதியை சுமக்கும் பாக்கியத்தால் அலங்காரமாகிறாள் அதை அவளது இன்னொரு பிள்ளை காண்கிறது தாயின் தாய்பேற்று மாற்றங்களை கண்திறந்து பார்க்கிறது அது அவள் பரிசளித்த முதற்பிள்ளை சுறுசுறுப்பாய் கலகலப்பாய் இருந்த தாயின் உடல் இப்போது அசந்து போவதை பார்த்து பிள்ளை மனம் வெதும்பிப் போகிறது விரும்புவதை உண்ணவும் குடிக்கவும் முடியாமல் விரும்பியவாறு அமரவும் தூங்கவும் முடியாமல் விரும்புகிற இடம் போகமுடியாமல் தாயானவள் தன் உடலை – தன் உணர்வுகளை

சில நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைளுக்கு கோவத்தில் கத்துகிறோம்.

பிள்ளைகளுக்கு கோவத்தில் கத்துவது சில நேரங்களில் நாங்கள் எங்கள் குழந்தைளுக்கு கோவத்தில் கத்துகிறோம். சத்தமிட்டுப் பேசுகிறோம். அதட்டுகிறோம். கத்திப்பேசி முகம் சுளித்து பிள்ளைகளுடன் நடந்தகொள்வது பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும். பிள்ளைகள் மீது குறிப்பாக சிறுபிள்ளைகள்மீது கத்துவதனால் ஏற்படும் உளவியல் விளைவுகள் சாதாரணமானவையல்ல. இது தொடர்பாக டாக்டர் மார்கம் கூறுகையில் “பிள்ளைகளைக் கத்தும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மூளையை அழிக்கவில்லை என்றாலும் அவர்கள் பிள்ளைகளை மாற்றுகிறார்கள்” என குறிப்பிடுகிறார். “அமைதியான அனுபவத்தின் போது மூளையின் நரம்பியக்க கடத்திகள் பாதுகாப்பாக

தவறான நம்பிக்கைகளை உறுதிப்படுத்தாமல் பின்பற்றுவது ஒரு பெரிய பலவீனமாகும்

தவறான பின்பற்றல் ஒரு சிறுமி தன் தாய் இரவு உணவிற்கு மீன் தயார் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் தாய் “மீனின் தலையையும் வாலையும்” வெட்டிய பின்னர் சமையல் பாத்திரத்தில் வைத்தாள். “ஏன் மீனின் தலையையும் வாலையும் வெட்டிநீர்கள்” என்று சிறுமி தன் தாயிடம் கேட்டாள். சிறிது நேரம் யோசித்துவிட்டு “நான் எப்போதும் அப்படித்தான் செய்கிறேன். என்னுடைய அம்மாவும் அப்படித்தான் செய்தாள்” என்றாள். தன் தாயின் பதிலில் திருப்தி அடையாத சிறுமி “மீனை சமைக்கமுன் ஏன் தலையையும்

பெற்றோரின் முரண்பாடுகள்

“பிள்ளைகளுக்கு முன்பான எம்முடைய தொடரான முரண்பாடுகள் தலைமுறை தலைமுறையாக நீண்டுசெல்லலாம்”   கணவன் மனைவி அல்லது தாய் தந்தை உறவின் போது முரண்பாடுகள் இயல்பாகவே நிகழக்கூடியவை ஆகும். முரண்பாடுகள் நிகழ்ந்து ஒருவர் மற்றவரோடு உடன்படாது இருக்கும் சந்தர்ப்பங்களையும் அவ்வாறே உரையாடி ஒன்றுபட்டு செயற்படும் சந்தர்ப்பங்களையும் பிள்ளைகள் பார்த்துப் பாடம் பெற்றுக் கொள்கின்றனர். முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் அவற்றின் போது அவசரப்பட்டு ஆவேசப்பட்டு முரண்பாட்டை வன்முறையாக, வார்த்தை மோதலாக வெளிப்படுத்துவதுதான் அசாதாரணமானது. பெற்றோரின் உரையாடல்களை, அவர்கள் செயற்படும்

மனிதம் வாழும் மனை

மனிதம் வாழும் மனை மனையை மனையாக மாற்றுவோம் மனிதர் வாழும் மாண்புமிகு மாளிகையாக மாற்றுவோம் முழக்கமும் மோதலும் இல்லாத நடிப்பும் நாடகமும் இல்லாத கலைமனையாக மாற்றுவோம் புன்னகை மறைக்கப்பட்ட புருவமாக கண்ணீரில் மூழ்கிய கண்களாக அல்லாமல் கல்பில் வளரும் காவியமாக மாற்றுவோம் வலிகளால் குத்தப்படும் வதைக்கூடமாக அல்லாமல் மலர்கள் சிரிக்கும் பள்ளிக்கூடமாக மாற்றுவோம் சுவர்களால் மறைக்கப்பட்ட இடமாக அல்லாமல் சுவனத்து மொட்டுக்கள் விளையாடும் மைதானமாக மாற்றுவோம் பொறாமையும் பேராசையும் குடியிருக்கும் கோட்டையாக அல்லாமல் அழகான கனவுகளுடன் பயணிக்கும்

கருவறைப் பாடங்கள்

“கருவறையை அமைதியும் அறிவும் நிறைந்த ஒரு பூங்காவனமாக பலவற்றைக் கற்றுக்கொள்ளக்கூடிய கலாசாலையாக ஆக்கிக்கொள்வோம்” • என் குழந்தைக்கு கருப்பையில் கற்றுக்கொள்ள முடியுமா? • என் குழந்தை கருப்பையில் எவ்வாறு கற்கிறது? • என் குழந்தை கருப்பையில் கற்றுக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? கருப்பை குழந்தைக்கு ஒரு உணர்ச்சிகரமான விளையாட்டு மைதானம். சுமார் 10 வாரங்களிலிருந்து குழந்தை தன் சிறிய கைகால்களை அசைத்து நீட்டுகின்றது. 23 வாரங்களை அடைந்ததும் தாயின் குரலையும் பிற ஒலிகளையும் கேட்க முடிகிறது.

“என்னால் முடியாது” என்பதிலிருந்து “என்னால் முடியும்”

“என்னால் செய்ய முடியாது” என்று கூறும்போது.. “I Can’t Do!” பிள்ளைகள் நன்றாகச் செய்யும் விடயங்களும் உள்ளன. கடினமான செய்யும் விடயங்களும் உள்ளன. பெரும்பாலான பிள்ளைகள் “என்னால் அதை செய்ய முடியாது!” அல்லது “அது மிகவும் கடினமாக உள்ளது!” என்ற சொல்வதை பார்க்கிறோம். அவர்கள் அப்படிச் சொல்லும்போது நாங்கள் என்ன செய்யலாம்? எப்படியான பதிலை கொடுக்கலாம்? ஏதாவது செய்ய முடியாது என்று பிள்ளைகள் சொன்னால் அவர்கள் எம்மிடம் மனம் திறந்து பேசுகிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து

மன அழுத்தம் எம்மை கொண்றுவிடுவதில்லை.

எம் வாழ்வும் மன அழுத்தமும் “மன அழுத்தம் எம்மை கொண்றுவிடுவதில்லை. நாம் அதற்கு முகங்கொடுக்கும் முறைதான் எம்மை கொண்றுவிடுகிறது” சாதாரணமாக மன அழுத்தம் நம் எவருக்கும் எப்போதும் வரலாம். மன அழுத்தம் பொதுவாகவே குறுகிய கால மன அழுத்தமாக வந்து குறுகிய நேரத்திற்குல் முடிந்துவிடலாம். சில சமயம் நாள்பட்ட மன அழுத்தமாக ஆகி நீண்ட காலமாக நீடிக்கலாம் மன அழுத்தம் என்பது எமக்கு தடங்கள்களை அச்சுருத்தல்களை தரக்கூடிய எந்தவொன்றையும் சமாளித்தக் கொள்வதற்கான ஒர் அழகான செல்முறையாகம். இவை

மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்!

மற்றவர் உள்ளமறிந்து செயற்படுவோம்! மற்றவர்களின் உணர்வை அறிவது ஒரு சமூகத்தின் வெற்றியின் ஆரம்பம் ஒரு சிறுவனுக்கு பூனை மீது பிரியம் இருந்தது. ஒரு பூனையைப் பெற்றுக்கொள்ள நீண்ட காலம் ஆசையோடும் எதிர்பார்ப்போடும் இருந்தான். ஒரு பூனைக்குட்டியை வாங்குவதற்காகவென அவனுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு ரூபாய் பணத்தையும் ஒரு முட்டியில் சேமித்து வந்தான். ஒரு நாள் சற்றுத்தொலைவிலுள்ள ஒரு வீட்டில் பூனைக்குட்டிகள் விற்கப்படுவதான செய்தி அவனுக்குக் கிடைத்தது. உடனடியாக முட்டியை உடைத்து அதிலிருந்த சில்லறைக்காசுகளை எடுத்து பூனை விற்கப்படும் இடத்திற்குச்

Back To Top