மஜ்மாவின் மண்
இது வெறும் கல்லறைகளை சுமந்த பாழடைந்த மண் அல்ல கொத்துக் கொத்தாய் கொரோனா கொத்திச் சென்ற உடல்களுக்கு அரண்மனை கட்டிய கருணைமிக்க மண் 🌸 அன்று இது சொட்டு நீர் இல்லாத வறண்ட மண் இன்று இது சுவனத்து நீரூற்றை நினைவூட்டும் ஈரமான மண் 🌸 எரிக்கப்பட்ட ஆன்மாக்களின் ஏக்கங்களால் ஏற்றம் பெற்ற மண் கோடி பிரார்த்தனைகளால் கோபுரமான மண் 🌸 மாற்றுமத உடல்களுக்கும் அடைக்கலம் தரும் தாராள மண் பொறுமையின் போராட்டத்தால் புகழ்பெற்ற மண் 🌸
மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை
மனக்கோளாறுகளை குணமாக்கும் பிரார்த்தனை “பிரார்த்தனை என்பது இதயத்தின் வேண்டுகோள், திருப்தியை நோக்கி பயணிக்க முடியமான எளிய பாதை” மனதைய இறைவனிடம் உயர்த்துவது, அவனிடமிருந்து நல்லவற்றை கோருவது.””தாழ்மையுடன் அவனிடம் மன்றாடுவது” இறைவனின் பல ஆசீர்வாதங்கள் மற்றும் கருணைக்காக நாம் அவனைத் துதித்து நன்றி செலுத்துவது எல்லாமே பிரார்த்தனையாகும், பிரார்த்தனை என்கின்ற இந்த வார்த்தை மரியாதை மற்றும் பக்தி மனப்பான்மையைக் கொண்டுள்ளது. இறைவனிடம் நாம் என்ன கேட்கலாம்? நாம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால் அவை எமக்கும் மற்றவர்களுக்கும் மிகவும்
காதல் தோல்வியில் இருந்து வெளிவருவது எப்படி?
காதல் நிறைந்த திருமணம் “சூரிய ஒளி இல்லாமல் ஒரு பூ மலர முடியாது போல ஒருவருக்கொருவர் அர்ப்பணிக்காமல் காதல் வளர முடியாது.” எவரை நேசிக்கிரோமோ அவர் மீதான காதல் அதுவும் உண்மையான காதல் சட்டென்று நடப்பதில்லை. தற்செயலாக தோன்றுவதுமில்லை. நேசிப்பவரை.. • உண்மையாகவே அறிந்து கொள்வது • அவரை போற்றுவது • ஆழமாக மதிப்பது • அவரை ஒத்துக்கொள்வது • அவருக்காக எதையும் கொடுக்க விரும்புவது • அவருடன் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது • எதிலும்
கனவுகளின் உச்சிக்கு..
கனவுகளின் உச்சிக்கு.. ஒரு ரோசா துண்டுக்கு கை கொடுக்கிறபொழுது அது பூத்துக்குலுங்கும் செடியாக மாறுகிறது இளந்தளிரே….. என் விரல்களை உண் விரல்களால் கோர்த்துக்கொள் நீ நடக்கும் ஒவ்வொரு சாலையிலும் நீ வைக்கும் ஒவ்வொரு அடியிலும் நான் உன்னுடன் நடப்பேன் உணக்கு சாயத் தேவைப்பட்டால் என் தோள்பட்டையில் சாய்ந்துகொள் நான் உன்னை கவனமாக கூட்டிச் செல்கிறேன் உண் கனவுகளை காணும்வரை
ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது
ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் ஒவ்வொரு மரமும் வெவ்வேறு வேகத்தில் வளர்கிறது ஒவ்வொரு பிள்ளையும் அதன் தனித்துவத்தில் வளர்கிறது தோட்டத்திலுள்ள மரங்களை சற்று நோக்குவோம். ஒவ்வொரு மரமும் ஒவ்வொரு அளவில் வளர்ந்து இருப்பதையும் ஒவ்வொரு அளவிலான காய்களைத் தருவதையும் காண்கிறோம். சில மரங்களில் கிளைகள் முறிந்து விழும் அளவிற்கு காய்கள் நிரம்பியிருக்கின்றன. சில மரங்களில் ஒரு சில கிளைகளில் மட்டும் காய்கள் தெரிகின்றன. ஒரு காயேனும் இல்லாமல் மொட்டையாக சில மரங்கள் நிற்கின்றன. பலா மரத்தில் பெரிய காய்களும்
“செல்லப்பிராணிகள் எமக்கு நண்பர்கள் அல்ல. அவை எமக்கு ஆறுதல் தரும் உணர்வுகள்”
சிகிச்சையாக செல்லப்பிராணிகள் குணமாக்கிகளாக செயற்படும் செல்லப்பிராணிகள் விலங்கு சிகிச்சை அல்லது செல்லப்பிராணி சிகிச்சை என்பது சில உடல் மற்றும் மன ஆரோக்கிய நிலைகளைச் சமாளிக்க விலங்குகளின் பயன்பாட்டை பயன்படுத்தி செய்யப்படும் சிகிச்சையாகும். செல்லப்பிராணிகளுடன் நேரத்தை செலவிடும் போது கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற மனப்பாதிப்புகள் அதிகளவில் குறைவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இது இதய நோய், புற்றுநோய் மற்றும் மனநலக் கோளாறுகள் போன்ற உள-உடல் நலப் பிரச்சினைகளை குணப்படுத்த துணையானதொரு சிகிச்சை நுற்பமாகவும் பயன்படுத்தப்படுகிறது. செல்லப்பிராணி சிகிச்சையால் கிடைக்கும்
வாழ்வின் மேன்மை நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது
விழுவோம்..! எழுவோம்..! வாழ்வின் மேன்மை நாம் விழும் ஒவ்வொரு முறையும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் இருக்கிறது நாம் ஒவ்வொருவரும் ஏதாவது சந்தர்ப்பத்தால் தோல்வியடைகிறோம். ஆனால் எமது கணவுகளின் பின்னால், எதிர்பார்ப்புகளின் பின்னால் தைரியமாக முன்னோக்கிச் செல்வதை ஒரு போதும் நிறுத்திவிடக்கூடாது. நாம் தோல்வியைக் கண்டால் அவற்றை எதிர்கொண்டு கற்கவேண்டியதை கற்று தைரியமாக முன்செல்ல வேண்டும். “ரொபர்ட் புரூஸ் என்கின்ற ஸ்கொட்லாந்து நாட்டைச்சேர்ந்த மன்னன் தனது யுத்தத்தில் தோல்வியடைந்தான். அவன் கடுமையாக மன அழுத்தத்திற்கு உட்பட்டு சோர்வடைந்திருந்தால்
நாம் இறந்துபோனாலும் நாம் உருவாக்கிச்சென்ற நடத்தை முறைகள் இறந்துபோவதில்லை.
பிள்ளைகளுக்கு நாமும் ஒரு கற்றல் சாதனம் நாம் இறந்துபோனாலும் நாம் உருவாக்கிச்சென்ற நடத்தை முறைகள் இறந்துபோவதில்லை கற்றல் முறைகள் பற்றி கல்வி உளவியலில் சில முக்கியமான நுற்பங்கள் காட்டித்தரப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் மற்றவர்களை பின்பற்றுவதன் முலம் கற்றல். இது முக்கியமானதொறு கற்றல் முறையாகும். நாமும் மற்றவர்களை பின்பற்றுவதன் முலம் அவர்களது செயற்பாடுகளை பார்ப்பதன் முலம் பலதை கற்றிருப்போம். கற்றதை வாழ்வில் கடைபிடித்துமிருப்போம். நாம் எல்லோரும்போலவே எமது அழகான பிள்ளைப்பருவத்தில் புத்தகங்களில் இருந்து கற்றுக்கொண்டதைவிட பெற்றோரின் மற்றும் ஆசிரியர்களின்
டென்சன் பலருக்கு பலவிதங்களில் வருவதுண்டு
டென்சன் ஹெடேக் டென்சன் பலருக்கு பலவிதங்களில் வருவதுண்டு. குழப்பமான, சங்கடமான சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுக்கும் பொழுது சிலருக்கு அல்லது பலருக்கு இதனால் தலைவலி ஏற்படலாம். டென்சன் தலைவலியை அனுபவிப்பவர்களின் அறிகுறிகள் பெரும்பாலும் ஆழுக்கால் ஒத்ததாகவே இருக்கும். ஒருசில வேறுபாடுகளும் இருக்கலாம். பொதுவாக நோக்கும் போது… • தலை, கழுத்து, கண்களின் பிற்புறத்தில் இலேசான அல்லது தீவிரமான வலி ஏற்படலாம். • நெற்றியில் ஒரு இருக்கமான பட்டி கட்டப்பட்டது போன்ற உணர்வும் ஏற்படலம். டென்சன் தலைவலிக்கு முகம் கொடுக்கும்
டென்சன் ஹெடேகிற்கான காரணங்கள்
டென்ஷன் தலைவலி என்பது பொதுவாக உங்கள் தலையில் ஒரு பரவலான பலர் அனுபவிக்கும் தலைவலியாகும். இது தலையைச் சுற்றி இறுக்கமான பேன்ட் அல்லது கட்டு இருப்பது போல் உணர்த்துகிறது. டென்ஷன் தலைவலி மிகவும் பொதுவான தலைவலியாகும். டென்சன் தலைவலி ஏற்படுவதற்கான காரணங்கள் • டென்சன் தலைவலி ஏற்படுவதற்கான சரியான காரணங்கள் என்ன என்பது பற்றி அறியப்படவில்லை. • இந்தவகை தலைவலி பரம்பரையாக அல்லது குடும்ப வழியாக ஏற்படுவதுமில்லை. • சிலரது தலைவலிக்கு கழுத்தில் மட்டும் உச்சம் தலையில்
விசித்திர மனிதர்கள் – தனித்துவத்தை இழந்து தன்னிலை மறந்து வாழ்கிறார்கள்
தனித்துவத்தை இழந்து தன்னிலை மறந்து வாழ்கிறார்கள். உறவுகளின் உயிரோட்டத்தை மறக்கிறார்கள். கருவிகளின் பிடியில் கட்டப்பட்டு இருக்கிறார்கள். திசை தவறிய பறவைபோல் திக்கின்றி இருக்கிறார்கள். உயரிய இலக்கை அடைய உழைக்காதிருக்கிறார்கள். வெற்றிபெற்றவர்களை பார்த்து வெறித்தனமாக இருக்கிறார்கள். சருக்கி விழுந்தவர்களை பார்த்து சத்தமாக சிரிக்கிறார்கள். சிந்தனையை மறைத்து சீலை போட்டுக்கொள்கிறார்கள். மற்றவர் வார்த்தைகளை நம்பி மயங்கிப்போகிறார்கள். அடுத்தவர்கள் பற்றி அதிகமதிகம் அலவளாவுகிறார்கள். தம்மைப் பற்றி நினைக்க தவறிவிடுகிறார்கள். அவர்களே அவர்களை அளந்து சரியென்கிறார்கள். மற்றவர்களை வாய்கூசாமல் மட்டிட்டு பிழையென்கிறார்கள். வானைத்தொடுமளவு
மூடப்படாத களஞ்சியம் – வீட்டுக் களஞ்சியம் வெறுமையாகலாம். நாட்டுக் களஞ்சியம் நட்டமாகலாம்.
பஞ்சம் வருமோ என்று பயப்படாதே! பட்டினி தாக்குமோ என்று பதட்டப்படாதே! உணவில்லையென்று உன்னுடைய உறவுக்கு முன்கூட உருகிவிடாதே! வீட்டுக் களஞ்சியம் வெறுமையாகலாம். நாட்டுக் களஞ்சியம் நட்டமாகலாம். உனைப் படைத்தவனின் உணவுக் களஞ்சியம் ஒரு கணப்பொழுதேனும் ஓய்வதில்லை… அவன் அழகாய் அருளியதை, வீணாக்கி விரயமாக்காது அளவாய்ப் புசித்து, அதிகமாய்க் கொடுத்து, பசித்தோனுக்குப் பகிர்ந்து வாழ். மாபெரும் இறைவனிடத்தில் கேட்பவனாய் இரு. மனிதனுக்கு முன் கொடுப்பனாய் இரு.
மகப்பேறு – மனித வாழ்வினில் புனித காவியம்
(ஒரு கணவன் தன் வாரிசை சுமக்கும் மனைவிக்கு வழங்கும் வளமான வரிகள் இவை… மகிழ்ச்சியுடன் மனம்விட்டு பகிர்ந்து கொள்கிறோம் உங்களுடன் ….) மனித வாழ்வினில் புனித காவியம் நீ… சிறப்புக் கதாபாத்திரத்தில் பிறப்பெடுக்கும் கதாநாயகி நீ.. ஆண்மையினை சுமக்கும் பெண்மை நீ… சுகத்துடனே அகத்தினில் சிசுவை ஏற்பவள் நீ… பலவீனங்களை சுமந்து செலவீனங்களை தவிர்ப்பவள் நீ… தூக்கம் துறந்து ஏக்கங்கள் சுமப்பவள் நீ… விருப்பங்களை மறந்து வெறுப்புக்களை ஏற்பவள் நீ… குடல் பிரட்டும் குமட்டல்களை உடல் முழுதும்
தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பவரின் இதயத்தில் எந்த எல்லையும் தடையும் இருப்பதில்லை.
எம்மை பாதுகாத்து – மற்றவர்களை பாதுகாப்போம் தன்னையும் மற்றவர்களையும் நேசிப்பவரின் இதயத்தில் எந்த எல்லையும் தடையும் இருப்பதில்லை. மீண்டும் ஒரு சவாலான சந்தர்ப்பத்தை நாம் சந்தித்திருக்கிறோம். நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்வில் ஒரு புதிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். இந்த அபாயகரமான சந்தர்ப்பத்திலிருந்து எங்களையும் எங்கள் குடும்பத்தையும் கமூகத்தையும் பாதுகாப்பது இப்போது எமக்குள்ள மிகப்பெரிய சவாலாகும். நாங்கள் சமூகமாக இருப்பதால் மற்றவர்களுடனான எமது தொடர்புகளை மிகவும் கவனமாக பேணுவதுடன் எமது சமூகத்தின் நல்ல ஆரோக்கியம் வளரவும்
விழிப்புடன் இருப்பது எப்படி வெளிப்படுத்துவது
நாம் ஒவ்வொருவரும் எமது வாழ்வின் ஒவ்வொரு சந்தர்ப்பத்தின் போதும் மிகவும் கவனமாக அவதானமாக இருப்பது விழிப்புடன் இருத்தல் எனலாம். தற்போதைய தருணத்தின் மீது கவனம் செலுத்துதல் விழிப்புடன் இருத்தலாகும். நாம் இப்போது என்ன செய்கிறோம், எப்படி இருக்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருப்பதும் விழிப்புடன் இருத்தல் ஆகும். தன்மீதும் தன்செயல் மீதும் கவனத்துடன் இருப்பது என்பதும் விழிப்புடன் இருப்பதையே குறிக்கும். எம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதைப் பற்றி தேடித்தெரிந்து கொள்வது இதன் பொருளல்ல. எமது பொறுப்புகள், எமது